என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Executive Committee"
- உதயநிதி பிறந்தநாளையொட்டி மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
- செயற்குழு கூட்டத்துக்கு அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்
கோவை, நவ.
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு அவைத்த லைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் சிறப்புரை யாற்றினார். இதில் வருகிற டிசம்பர் 2-ந் தேதி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இளைஞர்கள் அணி கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
எனவே இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதுவரை இல்லாத அளவில் கூட்டத்தை நடத்த வேண்டும். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், தள பதி இளங்கோ, மு.மா.முருகன், நா.பாபு, நோயல் செல்வம், கோவை லோகு, இளைஞர் அணி அமைப்பாளர் தனபால் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
- அப்போது பேசிய சரத் பவார், வயது ஒரு தடையல்ல, நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன் என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது என தெரிவித்தார்.
செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி திடீரென அங்கு வந்து சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.
- சரத் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
- அஜித் பவார் தலைமையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் தனித்தனியாக நடைபெற்றன.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஜூலை 6-ம் தேதி (நாளை) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களை இன்று சந்தித்த சரத் பவார், கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடம் செல்லப் போவது இல்லை என்றார்.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது தலைமையில் சாலைக் கிராமம் பஸ் நிலையத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன், நகர செயலாளர் நைனா முகம்மது, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், நடராஜன், குணசேகரன், ஜெகநாதன், பாலகிருஷ்ணன், திலகர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் சாமிவேல் வரவேற்றார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர். கணபதி நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், தயாளன், சேவியர், செய்யதுகான், யாசர், இளைஞரணி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி,தனசேகரன், பிரபு,கவுன்சிலர்கள் முருகானந்தம்,செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
- ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கடலூர்:
கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, வைத்திலிங்கம், முருகவேல், வேங்கை சேகர், சக்திவேல், மாவட்டபொருளாளர் சத்திய ஜானகி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வன்னியர்க ளுக்கான உள் ஒதுக்கீட்டினை வரும் கல்வியாண்டிலே பெற பா.ம.க. வன்னியர் சங்கத்தினர் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கிராமம், நகரம் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகள், பொது நல, தன்னார்வ, தொண்டு அமைப்புகளைச் சார்ந்த வன்னியர்கள், வன்னியர் அல்லாதவர்கள் இட ஒதுக்கீட்டின் பயன் அறிந்த பட்டியலினத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமும் ஆதரவு கோரி தமிழக முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் வலியுறுத்தும் கடிதத்தை அனுப்ப வலியுறுத்த வேண்டும் எனவும், கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்புவது எனவும், வணிக நிறுவனங்களின் பெயர்களை துாய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும் எனவும், பா.ம.க.வின் இட ஒதுக்கீட்டின் கொள்கையால் வன்னியர் சமுதாயம் கல்வி, பொருளா தாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றால் அடையும் பயன்குறித்து, ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எழிலரசன் நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.
- இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.
புதுச்சேரி:
தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.
இதில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். அவர் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை சங்க நிர்வாகக்குழு தேர்தல் மும்பை தாராவி காமராஜர் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது.
- சேர்மன் வேட்பாளர்களாக எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், பாக்கியநாதன் நாடார், ஆல்பர்ட் நாடார் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன.
நெல்லை:
நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை சங்க நிர்வாகக்குழு தேர்தல் மும்பை தாராவி காமராஜர் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. இதில் சேர்மன் வேட்பாளர்களாக எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், பாக்கியநாதன் நாடார், ஆல்பர்ட் நாடார் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. மேலும் 3 பேர் செயலாளர் பதவிக்கும், 3 பேர் பொருளாளர் பதவிக்கும், 12 பேர் கமிட்டி உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் முன்னிலையில் தேர்தல் நடந்தது. தேர்தலை தலைமை தேர்தல் ஆணையர் ஜான் கென்னடி நடத்தினார். 12 ஆயிரத்து 647 ஓட்டுகளில் 5 ஆயிரத்து 281 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் எம்.எஸ். காசிலிங்கம் நாடார் அணி பொருளாளர் பதவியை தவிர அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சேர்மனாக எம்.எஸ். காசிலிங்கம் நாடார், செயலாளராக டபிள்யு. மைக்கிள் ஜார்ஜ், பொருளாளராக கே.பொன்ராஜ் நாடார் மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக சி.மணிகண்டன் நாடார், டபிள்யு.ஜெயக்குமார் ஜேக்கப் நாடார், வி.எஸ்.பொன் பாண்டி நாடார், பி.பால்ராஜ் நாடார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் காமராஜர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்