search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foresters"

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • ஒரு மாதம் கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை.
    • மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை இழுத்து சென்று கொன்று தின்றது. இந்த சம்பவம் தொடர்கதையானதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஊதியூர் மலையடிவார பகுதிக்கு செல்லவே அஞ்சினர். எனவே சிறுத்தையை பிடித்துவனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ? என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது :- ஒரு மாதம்கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. மாறாக சிறுத்தையின் கால்தடங்கள் மட்டுமே கிடைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறை வீரர்கள் சிலர் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை வனப்பகுதியை விட்டு வந்து ஆடு மாடுகளை வேட்டையாடவில்லை. சமீபத்திய கால்தடங்களும் கிடைக்க வில்லை. இதனால் எங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வழக்கம் போல் இதுவரை வெளியே நடமாட முடியவில்லை. தற்போது ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இதனால் பெரும் குழப்பம் அடைந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- வனப்பகுதிக்குள்ளேயே சிறுத்தை பதுங்கி இருந்து அங்குள்ள மான்களை வேட்டையாடி சாப்பிட்டு வரலாம். வனப்பகுதியில் அதற்கு உணவு கிடைக்காமல் போனால் வெளியே வந்து வேட்டையாடலாம். ஆனால் இதுவரை சிறுத்தை வேட்டையாடி சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என தெரியவில்லை. அப்படி சிறுத்தை இடம் பெயர்ந்தால் கண்டிப்பாக உணவிற்காக வெளியிடங்களில் வேட்டையாடி இருக்கும். இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் எங்களுக்கே குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எனவே மேலும் 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து சிறுத்தை குறித்த ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர்.

    • நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மான் இறந்தது.
    • அதனை வனப்பகுதியில் புதைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 13 ஆயிரம் எக்டேரில் வனப்பகுதி அமைந்துள்ளது.இங்கு யானை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் உசிலம்பட்டியை அடுத்த மலைப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற 2வயது பெண் மானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்து உள்ளன.

    இதில் காயமடைந்த அந்த மான், புதூர் மலைப்பகுதியில் நடக்க முடியாமல் இருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் இன்று காலை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் அன்பழகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மானை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    அப்போது மான் வலிப்பு வந்து பரிதாப மாக இருந்தது. அதனை வனப்பகுதியில் புதைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    பொள்ளாச்சி வனச்சரகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுரகிலோ மீட்டர் பரப்பு கொண்டது. பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி(டாப்சிலிப்), மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு புலி, சிறுத்தை, யானை, செந்நாய், காட்டுமாடு, பலவகை மான்கள், பறவைகள், ராஜநாகம் உள்ளிட்ட பலவகை பாம்புகள், அரிய வகை மூலிகைகள் என பல்லுயிரிகளின் வாழிடமாக உள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து தற்போது வனப்பகுதி முழுவதும் பசுமையாக, அடர்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள், வன விலங்கு வேட்டையர்கள் என வனப்பகுதிக்குள் தங்கவும், வனப்பகுதியை பயன்படுத்திகொள்ளவும் வாய்ப்புள்ளது.

    இதனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அனைத்து வனச்சரகங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க தலைமை வனப்பாதுகாவல் கணேசன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மற்ற வனச்சரகங்களிலும் அந்தந்த வனச்சரக அலுவலர்கள் தலைமையில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
    ×