search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goddess"

    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு விஜயதசமியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வாழ்வில் மாணவச் செல்வங்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும் , நன்றாக படிக்கவும் பிராத்தனை செய்யப்பட்டது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை.
    • விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகா் பாளையில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெறும்.

    11 சப்பரங்கள்

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் பாளையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன், ஸ்ரீ பேராத்துசெல்வி, ஸ்ரீ தூத்துவாரி முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன் என 11 கோவில்களில் உற்சவா் அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்தார்.

    ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை. மேலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ ஆயிரத்தம்மன் தலைமையில் 8 ரதவீதிகளிலும் வீதி உலா வந்தனா். சப்பரத்திற்கு முன்பு கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பக்தர்களுக்கு காட்சி

    தொடர்ந்து இன்று காலையில் ராஜகோபால சுவாமி கோவில் முன்பு 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஆரத்தி நடைபெற்று தங்கள் கோவில்களுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    இன்று முதல் 11 கோவில்களிலும் அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலாவும், அதனை தொடா்ந்து சூரசம்காரமும் நடைபெறுகிறது.

    இன்று 11 கோவில்களில் இருந்தும் எவ்வித பிரச்சினையும் இன்று சப்பரங்கள் எடுத்து வரப்பபட்டது. இதற்காக மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    • ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

    வளையல் அலங்காரம்

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலையில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் 1 லட்சம் வளை யல்களைக் கொண்டு அம்மன் சிலை முழுவதும் வளையல்களால் அலங்கா ரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் பிரகாரம் அனைத்து இடங்க ளிலும் வளையல்களால் அலங்க ரிக்கப்பட்டது. அம்மனை காண அப்பகு தியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தங்க கவசம்

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. பெரிய எல்லை பிடாரி கருவறை அம்மனுக்கு முத்துக்களால் ஆன அங்கியை கொண்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்சனைகள் நடை பெற்றது. இதில் அப்பகு தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் பவள கற்கள் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. குறிப்பாக மணியனுர் காளியம்மன் கோவிலில் ஆயிரம் கண் அலங்காரம் செய்திருந்தனர். 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனை வருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்ட வற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண் டியம்மன், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன், அன்பு நகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டி செட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அன்ன அலங்காரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய் யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட் டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தீபாராதனை

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்க ரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி, பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டி யம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூர் எல்லையம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வட கரையாத்தூர் மாரி யம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பால்குட ஊர்வலம்

    சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி மாரி யம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    இதேபோல் பச்சுடை யாம்பட்டி காளியம்மன், காந்திபுரம் கருமாரி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரி யம்மனுக்கு ஆடி வெள்ளியை முன் னிட்டு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு, பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சந்தனகாப்பு

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பரமத்திவேலூர்

    இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    எருமப்பட்டி

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணமேல் பட்டி கிராமத்தில் உள்ளது பூமாயி அம்மன் கோவில் வீடு. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறம்பாடாகி கோயில் வீட்டை சுற்றி வலம் வந்து பின்பு புனிதநீரை கோபுரத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பூமாயி அம்மன், ஆண்டி தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களான பெரியகருப்பு, ஸ்ரீ சின்னகருப்பு கோவில் வீடு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மணமேல்பட்டி, திருப்பத்தூர், ஜெயமங்கலம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மனமேல்பட்டி கிராமத்தார்கள், பூமாயிஅம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கலசம்பாடி நற்கூந்தலழகி அம்மன் கோவிலின் 19-ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தெரடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக அம்மன் மணி மண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    திருவிழாவின் 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு பால்காவடி ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட காவடிகளை தலையில் சுமந்தவாறு புதியபேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் முக்கிய வீதிகள் வழியாக நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் வரை மேள தாளங்கள் முழங்க இன்னிசையோடு பார்வதி, சிவன், காளி, கருப்புசாமி வேடமிட்டு நடனத்தோடு காவடிகள் சென்று அம்மனுக்கு பால் பன்னீர் சந்தன அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் விழாவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட அரங்கில் ஆனந்தவல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின் ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வைகைஆற்றில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, முன் னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், தொழில் அதிபர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர் உள் ளிட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செல்லமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.

    சுமார் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கிழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
    • அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கி

    ழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சியும், நேற்று முன் தினம் மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு மாவிளக்கு களை ஊர்வலமாக கொண்டு சென்றும் அம்மனை வழிபட்டனர்.

    நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை

    மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×