search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ground"

    • அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
    • சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

    தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .

    அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது

    • மைதானத்தில் தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • மைதானத்தில் பயிற்சி பெற்ற பலர் ராணுவ பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்தில், பழமை வாய்ந்த கல்வி நிறுவனம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும்.

    இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை கண்ட பள்ளி ஆகும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருக்கும் பொழுது, விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் செய்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் தேசிய அளவிலான போட்டிகளில் நடத்தக்கூடிய வகையில், தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இரவு பகல் நேரங்களில் விளையாட்டுப் போட்டியில் நடத்தப்படக் கூடிய வகையில் மின்னொளி வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

    மேலும் விளையாட்டு மைதானம் அனைத்து வகையான வசதிகளும் கொண்ட, விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சியை பெறக் கூடிய வகையில், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தரப்பட வேண்டும்.

    நன்னிலம் பகுதியில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று காவல்துறையிலும் ராணுவத்திலும் பணியில் சேர்ந்துபணியாற்றி வருகிறார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார்.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    புதிய பஸ்நிலையம்

    இதில் 32 திட்டப்பணிகள் ரூ. 319.02 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. 52 திட்டப்பணிகள் ரூ. 642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில் கூடுதல் நடைமேடைகளுடன் கட்டப்பட்ட நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம், முழுவதும் இடித்து புதிதாக அமைக்கப்பட்ட பாளை பஸ் நிலையம், நவீன பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

    ரூ. 79 கோடி

    ரூ. 79 கோடியில் கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒருபகுதி வேலை முடிந்த நிலையில் மற்றொரு பகுதியின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல டவுன், பாளை மார்க்கெட்டுகள் புதுப்பிக்கும் பணி, பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    வ.உ.சி. மைதானம்

    இந்நிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பாளை வ.உ.சி. மைதானத்தில் ஏற்கனவே இருந்த கேலரிகள், பார்வையாளர்கள் கூடம், விளையாட்டு வீரர்கள் அறைகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.

    நவீன இருக்கைகள்

    பின்னர் நவீன இருக்கைகள் மற்றும் மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட கேலரிகளில் அதிகபட்சமாக 1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். 24 வி.ஐ.பி.க்கான இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    320 சதுர அடியில் பிரமாண்ட மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வி.ஐ.பி.க்கள், விளையாட்டு வீரர்களுக்கு 2 தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    தனித்தனியாக கழிவறை

    மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் உள்ளது.

    வ.உ.சி. மைதானத்தில் 6 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவிலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

    நடைப்பயிற்சி

    பொதுமக்கள் நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு சிறப்பு நுழைவுப்பாதை, முக்கிய நபர்கள் வருவதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை திறப்பு

    மேடையின் மேற்பகுதியில் சோலார் மின்உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அரங்கிற்கு தேவையான மின்சாரத்தை இதில் இருந்தே உற்பத்தி செய்ய முடியும்.

    மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தும் வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பாளை வ.உ.சி. மைதானம் முழுவதும் புதுப் பிக்கப்பட்டு புதுப்பொலி வுடன் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார். 

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
    • நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    நெல்லை வருகை

    அதன்படி வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் நெல்லைக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் விபரங்களை தயார் செய்து வருகிறது.

    அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டங்கள், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ கல்லூரி மைதானம்

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    உற்சாகம்

    மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் வருகை குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்தி, மருத்துவக்கல்லூரியை சுற்றிலும் சுகாதார பணிகளை விரைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் விழாவுக்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • உலக நாடுகளுக்கு இணையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் மலையடிவாரத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பழனி வேல் தியாகராஜன், பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு மைதானம் மிகப் பிரமாண்ட அளவில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைய உள்ளது.

    ஜல்லிக்கட்டு என்பது சில நாட்கள் மட்டும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த பிரமாண்ட மைதானம் அமைய உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் தனி மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அதேபோன்று இந்த மைதானமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு அனைத்து போட்டிகளும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இங்கேயே தனி மருத்து வமனை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் வர உள்ளன. இங்கிருந்து 4 வழிச்சாலையில் சென்று சேரும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அலங்காநல்லூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை மற்றும் சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமைக்கு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திடல் அமைய உள்ள இடத்தை முதல்-அமைச்சரின் முதன்மை தனி செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு விரைவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.

    ×