என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Guide"
- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.
வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.
இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.
இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
- டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...
கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.
சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.
இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.
- தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
- பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9, 10 -ம் வகுப்புகளுக்கு...
தற்போது, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் படிக்கும்போதே, மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
288 ஆசிரியர்கள்
சேலம் மாவட்டத்தில் 9, 10-ம் வகுப்பு இடம்பெற்ற 288 அரசு பள்ளிகள் உள்ளன. எனவே பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் 288 வழிகாட்டி ஆசிரியர்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
- சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.
- 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தென்னிந்திய குழுவின் சார்பில் சி.ஏ, படிப்புக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.செந்தில்பிரபு, மனோகரன், ரூபிணி, மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஜெ.சுமதி வரவேற்று பேசினார். செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் சிறப்புரையாற்றினார். சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர். முடிவில் துைண முதல்வர் விஜயா வாழ்த்தி பேசினார்.
- தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக ‘நான் முதல்- அமைச்சர் ’ என்ற திட்டத்தை தொடங்கியது.
- நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன.
நாமக்கல்:
தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக 'நான் முதல்- அமைச்சர் ' என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவா்கள் முடிவு செய்யும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன. அவை மாவட்டக் கல்வி அலுவலக புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இவை ஓரிரு நாளில் வட்டார வாரியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
- அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அடுத்தசட்டநா தபுரம் கைகாட்டி ரவு ண்டானா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திசை, வழி காட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பிலானது. இந்த தகவல் தெரிவிக்கும் பல கையானது கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையாகும்.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்தும், அது எங்களுக்கு கட்டுப்பாட்டில் இல்லாத சாலை எனவும், நகாய் எனும் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள சாலை எனவே அந்த துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள்தான் இதனை சரிசெய்ய இயலும் எனவும் கூறி இதுவரை அதனை சரி செய்யவும் இல்லை அப்புறப்படுத்தவும் இல்லை.
இதனால் அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்