search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspection of school vehicles"

    • தனியார் பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
    • வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,

    மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன.

    ஆத்தூர்:

    ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள கல்லூரியில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர் ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. 

    • ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும்.
    • மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் சரி செய்யாமல் பள்ளி மாணவ- மாணவிகளை வாகனத்தில் அழைத்து சென்றால் நிரந்தரமாக அந்த வாகனத்தை இயக்க தடைவிதிக்கப்படும்.இந்த நிலையில் நடப்பு ஆண்டு போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 10 வாகனங்களும், சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 10 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதேபோல் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 6 வாகனங்களும், மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த 50 வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் குறைபாட்டை சீர் செய்த பிறகு ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதி பெற்ற பிறகே இயக்க வேண்டும். அதுபோல் நடப்பு ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தாத 147 வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகள் மீறி வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிரைவர்கள் மற்றும் பள்ளி வாகனத்தில் வரும் உதவியாளர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். கண்காணிப்பு காமிரா பொருத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • 17 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது
    • டிரைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து அனைத்து பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அரசு பள்ளிகள் தவிர்த்து தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை தங்களுடைய வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறித்து இருக்கிறது. இந்த பாதுகாப்பு விதி விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் நேற்று திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகா பகுதிகளில் உள்ளடக்கிய திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அலுவலகத்தைச் சார்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தும், மேலும் பள்ளி வாகனங்களை ஓட்டிப் பார்த்தும் டிரைவர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இதில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், தாசிலர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வின்போது வாகனங்களின் அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, மற்றும் மாணவர்கள் உட்காரும் இருக்கைகள் கைப்பிடிகள் முறையாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. 179 பள்ளி வாகனங்களில் 17 வாகனங்கள் சிறு குறைகளுக்காக திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்து பின்பு அலுவலக வேலை நாட்களில் ஆஜர் படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பள்ளி வேன் கலெக்டர் ஓட்டினார்

    ஆய்வின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வேன் கலெக்டர் ஓட்டி பார்த்தார் ரிவர்ஸ் கியர் போட்டு அதே இடத்தில் நிறுத்தினார், பள்ளி வாகனத்தில் அலாரம் அடிக்காத வாகனங்கள் மற்றும் சீட் கைப்பிடிகளில் இரும்பு ராடுகள் வெளியே தெரிவதால் பள்ளி மானாமாளிகள் வண்டியில் ஏறி இறங்கும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உடனடியாக மாற்ற கூறினார் அவசரமாக இறங்கும் கதவு சில வாகனங்களை திறக்காததால் உடனடியாக மாற்றக் கூறி, முதலுதவி பெர்ட்டிகள் உள்ள மருந்துகளை முழுமையாக வைக்கவும் உத்தரவிட்டார்.

    • உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருக் கோவிலூர் கோட்டாட்சி யர் ஆர்.டி.ஓ. யோக ஜோதி ஆய்வு மேற்கண்டார். அப்போது பள்ளி வாக னங்களை மேல் கூரை டயர் அனைத்தும் சரி வர உள்ளதாக இருக்கிறதா அவசர கால கதவுகள் உள்ளதா முதலுதவி மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் விபத்து ஏற்படும் நேரத்தில் முதலுதவி எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனர்களுக்கு மெதுவாக செல்ல வேண்டும் மாணவர்களை தவிர வேறு யாரும் ஏற்றிச் செல்லக் கூடாது.

    மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் கண்டிப்பாக ஓட்டுநர்கள் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆர்.சி. புக் இன்சூரன்ஸ் முறையாக அந்தந்த வாகனங்களில் இருக்க வேண்டும் என்று கூறியதோடு பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர் வேல் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு கலைச்செல்வன், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் ஓட்டுநர்கள் ஆய்வின் போது இருந்தனர்.

    • விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 419 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும்பள்ளி வாக னஓட்டுனர்கள் வாகன ங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கு ம்போதும் ஏறும் போதும் சரியாக கவனி த்து வாகனங்களை இய க்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 250 வாகனங்கள் பரிேசாதனை.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டையில் உள்ள 250 தனியார் பள்ளி வாகனங்களை வருடாந்திர தணிக்கை ஆய்வு இன்று ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் தேசிய நெஞ்சாலையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த ஆய்விற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு பள்ளி வாகனங்கள் விபத்து ஏதுமில்லை. அதேபோன்று இந்த ஆண்டும் ஓட்டுனர்கள் கண்ணும் கருத்துமாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வபோது கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளுங்கள், வாகனங்கள் இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.

    ஆய்வு

    டிரைவர் ஆகிய உங்களை நம்பி தான் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புகின்றனர். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த வருடாந்திர ஆய்வில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஸ்டேயரிங், வாகன படிகட்டு, அவசர வழி, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு நிலை குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டவேல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×