search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
    • நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வடக்கில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

    இதைத்தொடர்ந்து நடக்க உள்ள மறு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி நம்பி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்ட்டை பாஜக தொடர்ந்து முனைவைத்து வருகிறது.

    இந்நிலையில் தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் எல்லையற்ற அன்பையும் நிபந்தனைகளற்ற பாசத்தையும் நீங்கள் என்னிடத்தில் காட்டினீர்கள். அரசியல் கட்சி சார்பு, சமுதாயம், மதம், மொழி ஆகிய்வற்றைத் தாண்டி எனக்கு நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

     

    நீங்களே எனக்கான அடைக்கலம், எனது வீடு மற்றும் எனது குடும்பமும் நீங்கள் தான். என்னை ஒரு நொடி கூட நீங்கள் சந்தேகித்தாக நான் கருதவில்லை. இதுபோலவே மறு தேர்தலில் நிற்க உள்ள பிரியங்கா காந்திக்கு நீங்கள் எம்.பி வாய்ப்பு வழங்கினால் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 



     


    • தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.
    • உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது.

    விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்ற அடிப்படையில் பீட்டா இந்தியா அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.

    இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகா கோவிலுக்கு பெரிய அளவிலான மெக்கானிக்கல் யானை ஒன்றை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக அளித்துள்ளது.

    இந்த மெக்கானிக்கல் யானைக்கு பாலதாசன் என்று பீட்டா இந்தியா அமைப்பு பெயர் வைத்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யானைக்கு பதில் இந்த மெக்கானிக்கல் யானையை பயன்படுத்தலாம் என்பதற்காக தான் இந்த பீட்டா இந்தியா அமைப்பு இதை பரிசாக அளித்துள்ளது.

    உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் பீட்டா இந்திய அமைப்பு இறங்கியுள்ளது.

    இது கேரளாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மெக்கானிக்கல் யானையாகும். இந்த யானை 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்டது.

    திருச்சூரில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலிலும் ஏற்கனவே மெக்கானிக்கல் யானைகளை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கருவறையில் கருடன் அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
    • கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர்.

    பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

    இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.

    இதே போன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அரிய ஆலயம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை, ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.

    சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

    • இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
    • தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] 2022-23 அறிக்கை வெளியாகியுள்ளது. அதனபடி இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.

    தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளதாகவும், அதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளதாகவும் அறிக்கையில் குறியப்படடுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகர்ப் புறத்தில் சராசரியாக ஒருவர் ரூ. 7,630 செலவழிக்கிறார். அதுவே கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆக உள்ளது. இந்திய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் 44 சதேவீதமாக மட்டுமே உள்ளது.

     

    இதற்கு முக்கிய கரணம் தமிழகத்தில் நாகபுரத்துக்கு ஈடாக கிராமப்புரத்தில் உள்ள இளைஞர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதால் அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நகர்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினம் உள்ளதாகவே பார்க்கமுடிகிறது. மேலும் கலாசார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    உதாரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை இதற்கு முந்தைய காலத்தில் குறைவாகவே இருந்த நிலையில் தற்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டனர் என்பதை நாம் பார்க்கலாம்.

    குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது கண்கூடு. இதுதவிர்த்து இந்த செலவின அறிக்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்க்கது.

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    • வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
    • வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

     

    வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள்.

    மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சமீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவு வெளியானது.

    இதற்கிடையே நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வு முன்பு நடந்தது.

    அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, "நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது சுணக்கமாகவோ அல்லது அலட்சியமாகவே இருந்தால் கூட முழுமையாக ஆராய வேண்டும். இவ்விகாரத்தை கண்டிப்பான முறையில் அணுக வேண்டும்.

    ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள். அது போன்ற நபர் சமுதாயத்திற்கும், அந்த அமைப்புக்கும் எவ்வளவு மோசமான விளைவுகளை கொடுப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள். ஆனால் ஒரு சில குறுக்கு வழிகள் மூலம் சிலர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தவறு நடந்திருந்தால் அதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நீட் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நீட் தேர்வு முறைகேடுகள், நமது தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் விடுத்த நோட்டீஸ், இப்பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

    மாநில அளவிலான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, ஒரே நுழைவு தேர்வாக்கிய ஒன்றிய அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
    • யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

     

    மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.

    இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

    யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர்  எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 

     

    • 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவுக்கு கொரோனா பரவலும் காரணம்.
    • நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு ஆசை உள்ளது.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, இஸ்லாமிய பெண்களிடையே ஆரம்பகால குழந்தை பிறப்பது கேரளாவில் 10 வருட காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கேரளாவில் 2022-ல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.

    15-19 வயதுப் பிரிவினருக்கான புள்ளிவிவரங்களின்படி, 2022ல் இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்கள் 7,412 ஆக இருந்தது. இது 2012 க்குப் பிறகு (14066) மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், இது 47 சதவீத சரிவைக் குறிக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் இஸ்லாமிய பெண்களின் சராசரி டீன் ஏஜ் பிரசவங்கள் 15,000க்கு மேல் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சரிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு தசாப்தத்தில் இஸ்லாமியரிடையே அதிக எண்ணிக்கையிலான பதின்ம வயதுப் பிரசவங்கள் 2013-ல் 22,924 ஆகும். 2022-ம் ஆண்டின் எண்ணிக்கையானது தசாப்தத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையில் இருந்து 67 சதவிகிதம் குறைந்துள்ளது.

    2019-ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு கொரோனா பரவலுக்குக் காரணம்.

    இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒரு தசாப்தத்தில் 15-19 வயதுக்குட்பட்ட பிரசவங்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவு இஸ்லாமியர்களிடையே பதிவு செய்யப்பட்டுள்ளது- 6,654. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முறையே 1749 மற்றும் 2888 ஆக இருந்தது. பதின்ம வயதினரின் குழந்தைப் பிரசவங்களின் சதவீதம் 87 சதவீதம் குறைந்துள்ளது.

    NISA (ஒரு முற்போக்கு முஸ்லீம் பெண்கள் மன்றம்) செயலாளர் வி.பி.சுஹாரா கூறுகையில், டீன் ஏஜ் கர்ப்பத்தின் எண்ணிக்கையில் சரிவு வரவேற்கத்தக்கது. "பருவப் பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அதிக விழிப்புணர்வு உள்ளது. மேலும் கடந்த காலத்தைப் போலல்லாமல், பெற்றோர் மற்றும் பெண் இருவரும் நல்ல கல்வியைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

    நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, ஒரு ஆசை உள்ளது. அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இதுவும் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கக் கோருவதற்கு ஒரு காரணம்" என்றார்.

    • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

    காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

    இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது.
    • பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி, குருவாயூர், சோவனூர் பகுதிகளில் இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு சுமார் 10 முதல் 20 விநாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    ×