search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "machines"

    • சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக சாலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீக் கடைகள், ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு
    • மேலூர் விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் எந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில வேளாண்எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவை சேர்ந்த 27 விவசாயிகளுக்கு ரூ.19.93 லட்சம் மானியத்தில் 21 பவர் டில்லர்கள், 6 விசைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக குன்னூர் இளித்தொரையில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 3 பேருக்கு விளை களையெடுப்பான் கருவிகளை வழங்கினார்.

    தமிழக அரசிடம் மானிய விலையில் பவர் டில்லர் பெற்ற சுள்ளிக்கூடு விவசாயி கோபால் என்பவர் கூறுகையில், எனக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 நாட்கள் செய்யும் வேலையை 3-4 மணி நேரத்தில் முடித்து விடலாம். இது எனக்கு வேளாண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

    சாந்தி கூறுகையில் இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நானும் என்னை போன்ற விவசாயிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் வழங்கியதாக பேட்டி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், இளித்தொரை கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவா் டில்லா், பவா் வீடா்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) கீா்த்தி பிரியதா்சினி முன்னிலை வகித்தாா். குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக விவசாயத் துறைக்காக தனி பட்ஜெட் அறிவித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

    விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றால் எந்திரங்கள் பயன்பாடு அவசியம். எனவே தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் ஆகியவை ரூ.41.23 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு, விசை களையெடுப்பான் கருவிகள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன. குன்னூா் வட்டத்தில், 8 விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள், 3 பேருக்கு பவா் வீடா்கள் என மொத்தம் ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.
    • வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் வரிசை நடவு வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.

    மேலும் பயிர்களுக்கு காற்றோட்டம் சீராகும் போன்ற சில பயன்களை கூறி விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் ரஜினிமாலா உடனிருந்தனர்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு உள்ளே கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

    அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

    முன்னதாக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழி காட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள எலக்ட்ரா னிக் வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவல கத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப் பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை வாக்குபதிவு எந்திரங்கள் 1366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் எம்-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி கள் 3 என மொத்தம் 1,998 வாக்குபதிவு எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை யில் திறக்கப்பட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் இந்த எந்தி ரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்.டி.ஓ (பொறுப்பு) சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்‌.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
    • ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.

    அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.

    டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
    • விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம் வட்டாரங்களில் நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது.மேலும் கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கு நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடியாகிறது.

    விவசாய சாகுபடியில் தற்போது அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.நடவு முதல் அறுவடை வரைகுறித்த நேரத்துக்குஆட்கள் கிடைக்காதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, தென்னந்தோப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் சிறு, குறு விவசாயிகள், காய்கறி சாகுபடியாளர்களுக்குசீசன் சமயங்களில்தொழிலாளர் கிடைக்காமல் பாதிக்கின்றனர். எனவே படிப்படியாக, சாகுபடி பணிகளுக்கு கருவிகளையும், எந்திரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    காய்கறி சாகுபடியில் மேட்டுப்பாத்தி அமைத்து, இடைவெளியில் களையெடுக்க கோனோவீடர்கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல் தென்னை, மாமரங்களுக்கு இடையே, களைச்செடி, பார்த்தீனிய செடிகளை அகற்ற கட்டர் எந்திரத்தைபயன்படுத்துகின்றனர்.இவ்வகை எந்திரத்தை சொந்தமாகவும் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வகை கருவிகள் உதவுகிறது. களையெடுத்தல் பணிக்கு பரவலாக எந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதே போல் விதை, நாற்று நடவு பணிக்கு கருவிகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கருவி, எந்திரங்களை விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு, கிராமம்தோறும் வழங்கினால்அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை செயல் விளக்கம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் துபே தலைமையில் வந்த பொறியாளர்கள் குழுவினர் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1800 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1800 வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விவரத்தை தெரிவது குறித்த எந்திரம் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த முதல் நிலை பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு எந்திர பராமரிப்பு அலுவலர் ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×