search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notify fire department"

    • சாலையை கடக்க முயன்றபோது பிடிபட்டது
    • ஏலகிரி மலை காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த ராஜிவ் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

    அதேபோல் பொன்னேரியிலிருந்து ஏலகிரி மலை நோக்கி செல்லும் சாலையில் சின்ன பொன்னேரி பகுதியில் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 14 அடி நீளமுள்ள பிடித்து ஏலகிரி மலை காட்டில் விட்டனர்.

    • 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள சாத்தம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. மனைவி தீபா, மகன் விஷ்வா (வயது 7). மகள் காவியா (5).

    ஏழுமலை மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுடன் விஷ்வா, காவியா சென்றிருந்தனர். அந்த விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே அமர்ந்து சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் தீபா மாடுகளை கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தபோது விஷ்வாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவியாவிடம் விஷ்வா எங்கே என்று கேட்டார்.

    விஷ்வா கிணற்றின் அருகே சென்றதாக காவியா கூறினார். இதனால் பெற்றோர் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். அப்போது விஷ்வா கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தெள்ளார் தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி விஷ்வாவை பிணமாக மீட்டனர்.

    உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோனி இவரது மனைவி ஷைனி.

    இவர்கள் வீட்டில் நேற்று தனது குடும்பத்துடன் இருந்த போது திடீரென பாம்பு நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பாம்பை பிடித்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள கொயாக்காமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    அப்போது விவசாய நிலத்தில் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தடியில் ஊர்ந்து சென்ற சுமார் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    ×