என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Public Nuisance"
- பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சையத் (வயது 23). பாத்திர வியாபாரி. இவரது நண்பர் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சபீர் கான் (21). இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சையதும், சபீர் காணும் போக்குவரத்தை வழிமறித்து பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் மற்றும் சபீர்கானை கைது செய்தனர்.
மேலும் போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 2 வாலிபர்களை ஜெயிலில் அடைத்தனர்.
- ஆய்வு கூட்டம் நடந்தது
- கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரா கோவிலில் நடைபெறவிருக்கும் குரு பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
கிரிவலம் வரும் பக்கதர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதே போல் அரசு போக்குவரத்து துறையின் மூலம் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல் வேண்டும்.
போக்குவரத்து காவல் துறை மூலமாக போக்குவரத்தினை பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சீர் செய்ய வேண்டும்.
எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துதல் வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களை கொண்டு 100 சதவீதம் கழிவறை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுத்தி குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மின்சாரத்துறையின் மூலமாக கோவிலில் உள்ள முக்கிய இடங்கள். கிரிவலப்பாதையில் பக்கதர்கள் செல்லும் இடங்களில் போதுமான அளவிற்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
வட்டார போக்குவரத்து துறையின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களிடம் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
மருத்துவத்துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகைத்தரும் பக்தர்களை முறைப்படுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல் ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம் ஆகிய இரு வழிகளில் வருகைத் தரும் பக்தர்களை வரிசைகளில் நிறுத்தி தாமதமின்றி தரிசனம் செய்ய உதவிட வேண்டும்.
மேலும் விதிகள் மீறி சாலைகளில் தற்காலிகமாக வைக்கப்படும் கடைகளை அகற்றுதல். விளம்பர பேனர்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன். இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். சுதர்சனம், உதவி கலெக்டர், ஆர்.மந்தாகினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
- உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது.
கடலூர்:
திட்டக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் 108 ஆம்புலன்ஸ். கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் என பொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
மேலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
திட்டக்குடியில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமன செய்து திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக அலட்சியமாக செயல்படுவதால் இதில் பாதிக்கப்படுவது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், சிறு குரு விவசாயிகள், சிறுகுரு வணிகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
- ெஜயிலில் அடைப்பு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் கோவில் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை சாலையில் நின்று வழி மறைத்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது போதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவரை கைது செய்து போலிஷ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணிய இவரது மகன் ராஜேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.
இதனையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீசார் கைது செய்து விசாரணை
- மயான கொள்ளை விழாவையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணி
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையொட்டி நகரில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பழைய குற்றவாளி களை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற பொது மக்களை உருட்டு கட்டையை வைத்துக்கொண்டு குருபிரசாத் (வயது 26) என்பவர் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குரு பிரசாத்தை கைது செய்து உருட்டு கட்டையை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
- மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
- பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
இந்த சாலையை விவசாய நிலத்திற்கு செல்லும் வழியாகவும் பல்வேறு செயல்பாட்டுக்கு இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சாலை நடுவே நீண்ட தூரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து குப்பையில் இருந்து பூழுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்துகொள்கின்றனர். சில நேரங்களில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பேருந்தில் பயணம் செய்வது பயணிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.
தலைநகர் சென்னையைப் பொருத்தவரை ஒவ்வொரு வழித்தடத்திலும் ‘ரூட் தல’ என்ற பெயரில் ஒரு சில மணவர்கள் தலைவன் போன்று செயல்படுகிறார்கள். இவர்கள் தலைமையிலான மாணவர் பட்டாளம் செய்யும் அட்டகாசம் அதிகரித்தவண்ணம் உள்ளது. மாணவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது, சிலர் பட்டாக்கத்தியுடன் பேருந்தில் வந்து மிரட்டுகின்றனர். இது தொடர்பாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
பொதுவெளியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாநில கல்லூரி முதல்வரிடம் சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்தனர். பின்னர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். #StudentsCarryingKnives #PublicNuisance
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்