என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Railway employee"
- பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.
- சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் கீப்பராக அம்பையை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வழக்கம்போல் அவர் பணியில் இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற பயணிகள் ரெயில் அந்த வழியாக சென்றபோது ரெயில்வே கேட்டை மூடி திறக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
பின்னர் அவர் தனது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அவர் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். உடனே பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்த பெண் கேட் கீப்பரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அருகில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கேட்டின் அருகே மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் யாரேனும் இதில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பணியில் இருந்த ரெயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் பல நாட்களாக நோட்டமிட்டு ஊழியர் தனியாக இருப்பதை அறிந்து நேற்று உள்ளே புகுந்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
- பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமல ம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி விஜயலட்சுமி. . தற்போது ஜெயவரதன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளார். விஜயலட்சுமி தனியாக கொமலம்பட்டு பகுதியில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் டி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் நேற்று கொமலம்பட்டு பகுதிக்கு வந்தார். விஜயலட்சுமி கடையில் இருப்பதை பார்த்து அவரது வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார். நகையை திருடிச் சென்ற பின்னரும் விஜயலட்சுமியின் கடையின் அருகிலேயே இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.அப்போது விஜயலட்சுமியின் வீட்டில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் விஜயலட்சுமி வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் மூட்டையாக கட்டி வைத்திருந்த 20 பவுன் நகையை கவுதமிடம் இருந்து மீட்டனர். மீதமு ள்ள 3 பவுன் நகையை கவுதமிடம் கேட்டதற்கு அவர் 20 பவுன் நகை மட்டும் தான் திருடினேன் என்று கூறினார். இதனால் பொதுமக்கள் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமை மீட்டு வழக்கு பதிவு செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மீட்டு விஜயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் பகுதியை சேர்ந்த வர் கதிர்வேல் (வயது 65) இவர் உளுந்தூர்பேட்டை ரெயில்வே நிலையத்தில் ஊழிய ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று கதிர்வேல் பாண்டூ ரிலிருந்து அரளி செல்லும் சாலை ஓரமாக நடந்து அந்த பகுதி யில் உள்ள தனது வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவ ருக்கு பின்னால் வேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து இந்த விபத்து ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை போட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சென்னையில் ரெயில்வேயில் வேலை பார்த்து வரும் ஊழியர் கண்ணன் கொடை விழாவுக்காக நெல்லை வந்துள்ளார்.
- வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55).
ரெயில்வே ஊழியர்
இவர் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோமளவள்ளி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாளையில் உள்ள கோவில் திருவிழாவிற்காக கண்ணன் குடும்பத்துடன் நெல்லை வந்தார். பின்னர் கொடை விழா முடிந்ததும் இன்று அதிகாலை கோடீஸ்வரன்நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய்விட்டது.
மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.
- நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர்.
புதுச்சேரி:
புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.
புதுவை சோலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 58). இவர் தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர். சரண்ராஜ் மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். ஸ்ரீதர் சுப்பையா நகர் முதல் தெருவில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஸ்ரீதரிட மிருந்து செல்போனை பறித்து கொண்டு அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் ஏறிக்கொண்டு மின்னல் வேகத்தில் இருட்டான பகுதி வழியே தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து செல் போனை பறிகொடுத்த ஸ்ரீதர் இதுபற்றி உருளையன் பேட்டை போலீசில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களின் வாகன பதிவு எண் ஆதாரத்தோடு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்றவர்களின் அடையாளம் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் நெல்லித்தோப்பு கஸ்தூரி பாய் நகரை சேர்ந்த டேமின் (வயது 22). மற்றும் உருளையன் பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்ற பரத் குமார் (20) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரத் குமார் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.
அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39). இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.
ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர். சென்னை ரெயில்வேயில் சட்டப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மேலும் பொருட்களை குவித்து வைத்து வீட்டுக்கு தீ வைத்து எரித்து இருந்தனர். தீ பெரிய அளவில் பிடிக்காமல் உடனடியாக அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர்.
இதையடுத்து அறையில் இருந்த டி.வி., 2 லேப்-டாப் மற்றும் மோட்டார்சைக்கிளை திருடி மர்ம கும்பல் தப்பி இருப்பது தெரிய வந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்த சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
பெரம்பூர்:
திரு.வி.க. நகர் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கல்பனா. 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுரேஷ்-கல்பனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சுரேஷ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மனைவி கல்பனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது.
இதையடுத்து சுரேசிடம் திரு.வி.க. நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னை தட்டிக்கேட்ட மனைவி கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து திரு.வி.க. நர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், ரெயில்வே ஊழியர் சுரேசை கைது செய்தார். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை:
காந்திதாமில் இருந்து நெல்லைக்கு வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அந்த ரெயிலை பராமரிப்பு மையத்திற்கு எடுத்துசென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் தடம்புரண்டது. பிட்லைனில் உள்ள தடுப்பில் மோதி ரெயில் நின்றது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம்புரண்ட ரெயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி பழைய ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது55). பழைய ஆயக்குடி அருகே அண்ணாநகர் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவனை தனது அறைக்கு அழைத்துள்ளார்.
சிறுவனை அறையில் வைத்து ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் சத்தம் போட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.
சிறுவனை பரமேஸ்வரனிடம் இருந்து மீட்டனர். பின்பு பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பரமேஸ்வரன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்