search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery"

    • இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் மேற்கூரை இன்று [ஜூன் 28] அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர். பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    • குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
    • பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வடமாநில மூதாட்டி ஒருவர் மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மூதாட்டியை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி மாஜி (வயது 70) என்பதும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர். ஆனால் அவர் அங்கு தங்க விருப்பம் இல்லை எனவும் திரும்பவும் ஒடிசாவில் உள்ள குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இது பற்றி ஒடிசாவில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் போலீசாரிடம் பத்மாவதி மாஜியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக மூதாட்டி பத்மாவதி மாஜி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக நல அலுவலர் கல்யாணி, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஜான்சி, வழக்கு பணியாளர் கலையரசி உடன் இருந்தனர்.

    • முசிறியில் தொழிலாளி தவறவிட்ட பணத்தை மீட்டு போலீசார்ஒப்படைத்தனர்
    • பணத்தை பெற்ற தொழிலாளி, போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்

    முசிறி,

    முசிறி துறையூர் சாலையில் உள்ள வங்கி பகுதியில் முசிறி போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது வங்கியின் ஏ.டி.எ.ம் அருகில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை எடுத்து பார்த்ததில் ரூ.11 ஆயிரம் மற்றும் அதில் தவறவிட்டவரின் புகைப்படம் ஒன்று இருந்ததை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பர்சை தவறவிட்டது வடுகப்பட்டியை சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் என்பது தெரிந்து அவரை முசிறி காவல் நிலையத்திற்கு வரவழைத்து மேல் விசாரணை செய்து அவரிடம் உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னர் ரூ.11 ஆயிரம் பணத்துடன் மணி பர்சை காவல் ஆய்வாளர் கதிரேசன், பணத்தை தவறவிட்ட உரியவரான விஸ்வநாதனிடம் வழங்கினார். தொலைந்து போன தனது பணம் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையால் பெற்ற விசுவநாதன் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

    • செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.
    • சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே லக்காபுரத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி (85). முன்னாள் கிராமநிர்வாக அலுவலர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மழையின் மழைநீரும், கீழ்பவானி பாசன பகுதிகளில் இருந்து வெளியேறிய கசிவுநீரும் லக்காபுரத்தில் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து சூழ்ந்தது. இதனால் செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் அங்கு சென்று பொன்னுசாமியை அங்கிருந்து மீட்டு மொடக்குறிச்சி டாக்டர்.சரஸ்வதி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவ மனையில் தற்காலிகமாக தங்கவைத்தனர்.

    பின்னர் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டின் பகுதிக்கான வரைபடத்தை ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    இதனையடுத்து எந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமித்து மறைக்கப்பட்டிருந்த கசிவு நீர்கால்வாயை கண்டுபிடித்து அதற்குள் நிரப்பட்டிருந்த மண் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றி பல ஆண்டுகளாக காணாமல் போன அந்த கால்வாயை மீட்டனர். இதனால் பொன்னு சாமியின் வீட்டையும், அந்த பகுதியையும் சூழ்ந்திருந்த மழைநீர் மற்றும் பாசன கசிவுநீர் வடிந்தது. 

    • அம்மா புதுப்பட்டி கிராமத்தில் விவசாயியின் ஆடு கிணற்றில் விழுந்தது
    • தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அம்மா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்த ரெங்கராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    • மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆடு தவறி விழுந்தது
    • ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் ராசு என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று இரை தேடி சென்ற போது தவறி விழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். 

    • காரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், பங்களாபுதூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 73) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக காங்கயம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர், புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள பொன்பரப்பி என்ற இடத்தில் பி. ஏ. பி., கிளை வாய்க்காலில் மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கரூர் நொய்யல் பகுதியில் திருட்டு கும்பலுடன் வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்
    • போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் குந்தாணி பாளையம் பாதகாளியம்மன் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரது வீட்டில் 3 நபர்கள் வீட்டிற்கு உள்ளே புகுந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தோட்டத்தி லிருந்த பிரிதிவிராஜ் குடும்பத்தினர் சத்தம் போடவும் வந்த 3 பேரில் 2 பேர் கம்பிவேலியைத் தாண்டி க்கொண்டு தப்பியோ டிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

    அவர் வேலாயுத ம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுரை மாவ ட்டம் நாகாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் என்பதும் தெரியவந்தது. இவர் மதுரையிலிருந்து பழநி சென்று பின் அங்கிருந்து கரூர் வந்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து சாந்திவனம் நிர்வாகத்திற்கு, சப் - இன்ஸ்பெக்டர் ரெங்க ராஜிடம் தகவல் தெரிவித்தார். சாந்திவனம் மீட்புக்குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் சித்ரா மற்றும் ஓட்டுநர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மனநலம் பாதிக்க ப்பட்டவரை அழைத்து சென்று, திருச்சி தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, ஆத்மா மனநல மருத்துவமனையின் இயக்குநரும், சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் பொதுக்குழு உறுப்பினரும், மனநல மருத்துவருமான டாக்டர் ஸ்ரீதர் அந்நபரை பரிசோதித்து மனநல சிகிச்சை அளித்து வருகிறார்.

    • மனநலம் பாதித்த வாலிபரை போலீசாரும், மனித நேயத்தினரும் மீட்டு மறு வாழ்வு
    • பலரது கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டு சிகிச்சை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, பூலாங்காலனி, ஆலமரத்துமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றித்திரிந்தார். காலில் அடிபட்டு நடக்க இயலாமல் சாலையில் வாகனங்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் அவர் சுற்றியுள்ளார்.அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று சாந்திவனம் மனநலக் காப்பகம் இயக்குநர் அரசப்பனுக்கு கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.இதை தொடர்ந்து சாந்திவனம் மனநல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால், ஏட்டு சுமித்ரா ஆகியோர் அங்கு சென்றனர்.இதனிடையே திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலர் ரவி அந்த நபரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு காலில் இருந்த புண்ணிற்கு கட்டுப்போட்டுவிட்டு கரூர் வெண்ணமலையிலுள்ள கரூர் அன்புக் கரங்கள் - சிறார் மற்றும் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.

    இதை அறிந்த சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், நிர்வாக செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் டாக்டர் அருன்குமார் மற்றும் சாந்திவனம் இயக்குநர் அரசப்பன் ஆகியோர் மூலமாக கரூர் வெண்ணமலை சென்று அந்த நபரை மீட்டனர்.மீட்புக் குழுவில் செவிலியர் சித்ரா, அருள்குமார் ஆகியோரும் இடம்பெற்றனர். அவரை திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆத்மா மனநல மருத்துவர் அஜய் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட நபர் கால் கீழ்பகுதி முழுவதும் புண் அதிகமாகி காலே அழுகும் சூழலில் இருந்தது. இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அந்தக் காலையே எடுக்கும் சூழல் வந்திருக்கும்.அந்தளவுக்கு கால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை ஆத்மா மனநல மருத்துவமனை செவிலியர்கள் சுத்தப்படுத்தி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தளித்துள்ளனர், அதே நேரம் மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டு உள்ளது.பலரது கூட்டு முயற்சியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. மனித நேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்தும் விதமான இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., மனநல காப்பகத்தினர், போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    • லால்குடி அருகே செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட 6 கொத்தடிமைகள் மீட்பு
    • செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்

    திருச்சி,

    திருச்சி லால்குடி திருமண மேடு ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32).இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை வைத்து நட த்தி வருகிறார். இதில் தொழி லாளர்களை கொத்தடி மையாக நடத்துவதாகவும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தாகவும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தக வல் கிடைத்தது.உடனே அவர் லால்குடி உதவி கலெக்டருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொட ர்ந்து வருவாய்த் துறையினர் அந்த செங்கல் சூளையில் அதிரடி சோதனை நடத்தி னர்.அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை கொத்தடி மையாக நடத்தி வந்ததும், குழந்தை தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி இருந்ததும் உறுதி செய்யப்ப ட்டது.பின்னர் வருவாய்த் துறையினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைமுடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 24), அவரது மனைவி மாரியம்மாள் (21),மற்றும் அந்த தம்பதியரின் குழந்தைகள் மகாலட்சுமி( 3) பரமசிவ(2)அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகள் ஆதிலட்சுமி (11) ஏழுமலை (10) ஆகிய 6 பேரையும் அவர்களின் சொந்த ஊரு க்கு அனுப்பி வைக்க நட வடிக்கை எடுத்து வருகி ன்றனர்.இது தொடர்பாக குழ ந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.லால்குடி செங்கல் சூளை யில் கொத்தடிமைகள் மற்றும் குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம் உள்ளது.
    • இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான 14.04 ஏக்கா் நிலம் என மொத்தம் 20.34 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

    இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுறுத்தலின்பேரில் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் செயல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மேலும் மீட்கப்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    ×