என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Robbery of jewelry and money"
- தனிப்படை அமைத்து விசாரணை
- போலீசார் தேடி வருகின்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள கொளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சம் பத்(வயது 58). இவர் இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி பச் சையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.
மேலும், சம்பத்தின் மகன்கள் இருவரும் ஜாம் ஷெட்பூர் டாட்டா நகரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.
இரும்பேட் டில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த 2 வாரங் களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சம்பத் தனது மனைவியுடன் டாட்டா நகரில் உள்ள மகன்களை பார்ப்பதற் காக சென்றுள்ளனர்.
மேலும், 'தனது சொந்த ஊருக்கு வருவதற்கு இன் னும் சில நாட்களாகும் என்பதால், சம்பத்தின் மனைவி தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வரு மாறு தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், அவரது உறவினர் சம்பத்தின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறம் உள்ள கேட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ேள சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ வில் இருந்த 24 பவுன், ரூ.2 லட்சத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிந்தது.
மேலும், பீரோவில் நகைகள் வைத்திருந்த மணிபர்ஸ்களை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் உள்ள பக் கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுவிட்டு சென்றனர்.
இது குறித்து, சம்பத் துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பத் தின் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். 'அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், திருட்டு குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திரு டிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- பீரோவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்சிங்கல்பாடி செம்மண் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54) விவசாயி. இவரது மனைவி லட்சுமி.
நேற்று காலையில் விவசாய வேலை சம்பந்தமாக அண்ணாமலை வெளியே சென்றிருந்தார். .அவரது மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்ட பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
மதியம் வெளியே சென்ற அண்ணாமலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அண்ணாமலை புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார்மலை மோர்தானா கால்வாய் அருகே உள்ள புதுமனைப் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், விசைத்தறி தொழிலாளி.
நேற்று மதியம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு விசைத்தறி கூடத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மர்ம கும்பல் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து 2½ பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாணிக்கம் குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.
- வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது ரவிச்சந்திரன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய ரவிச்சந்திரன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (74). கணக்காளர். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மனைவி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று இருந்தார்.
அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து
உள்ளே நுைழந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண்ைண கொன்று நாடகமாடிய கல்லூரி மாணவர் போலீசில் சிக்கியது எப்படி?
- தனிப்படையினருக்கு ஐ.ஜி. சுதாகர் பாராட்டு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 63). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).
கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சில நகைகளும் மாயமாகி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க 5 தனிப்படை அமைக்க ப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (19) என்ற கல்லூரி மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென்திருப்பதி நால் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். கைதான வசந்தகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க ப்பட்டார்.
போலீசாரிடம் வசந்தகுமார் அளித்த வாக்குமூல விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. வசந்தகுமார் வாக்குமூலத்தில் கூறியிரு ப்பதாவது:-
எனது தாயார் தையல் கடை வைத்துள்ளார். அவரிடம் மூதாட்டி சரோஜா துணிகளை தைப்பதற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னர் துணிகளை நான் எடுத்து சென்று மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்கி வருவேன்.
அப்போது மூதாட்டி தனியாக இருப்பதையும், வீட்டில் நகை இருப்பதையும் நான் தெரிந்த கொண்டேன். இந்த நிலையில் நான் ஆன்லைன் டிரேடிங் (ஆன்லைன் வர்த்தகம்) செய்து வந்தேன். அதற்காக எனக்கு ரூ.1 லட்சம் தேவை பட்டது.
இதனால் நான் மூதாட்டி வீட்டில் உள்ள நகைகளை எடுக்க முடிவு செய்தேன்.அவரை தொடர்ந்து கண்காணித்தேன். சம்பவத்தன்று வழக்கம் போல நான் மூதாட்டியிடம் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு சென்றேன். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பயன்படுத்தி கொண்டு மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்தேன். யாருக்கும் தெரியாமல் பீரோவில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு வெளியே வர முயற்சி செய்தேன். அப்போது மூதாட்டி என்னை பார்த்து விட்டார்.
அவர் சத்தம் போட்டால் நான் மாட்டி கொள்வேன் என நினைத்து அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு 15 பவுன் நகையை எடுத்து வந்துவிட்டேன்.
பின்னர் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராதபடி இருந்தேன். நகையை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக நகைகளை எனது பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு சுற்றினேன். மூதாட்டியை கத்தியால் குத்தும்போது எனது கையில் சிறிய காயம் ஏற்பட்டது.
அதனை கல்லூரியில் பாட்டில் உடைந்து குத்தியதாக வீட்டில் தெரிவித்தேன். மேலும் எனது செலவிற்காக அவ்வப்போது உறவினர்கள் வீடு, பக்கத்து வீடுகளில் திருடி வந்தேன். இதுவரை யாரிடமும் சிக்கியது இல்லை. மூதாட்டி இறந்து விடுவார் என நினைக்கவில்லை. ஆனால் அவர் இறந்து விட்டார். போலீசாரும் என்னை பொறிவைத்து பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் கொலை வழக்கை துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர்.
- தனிப்படை விசாரணை
- கதவு உடைத்து துணிகரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேல் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சேலத்தில் இருந்து கட்டப் பை வாங்கி வந்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 24-ந் தேதி மூர்த்தியும், அவரது மனைவியும் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தனர். மறுநாள் அதிகாலை வீடு திரும்பினர். பின்னர் அன்று இரவு அசதியில் இவர்கள் படுத்து தூங்கி விட்டனர்.
25-ந்தேதி காலையில் அவர் கள் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக சென்ற போது பீரோவின் கதவு உடைக்கப்பட் டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம உங்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மூர்த்தி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கை ரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை மற்றம் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை யடித்துச் சென்ற நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனி படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- கேமராக்கள் ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கலாவதி (வயது 57). இவருடைய கணவர் ஜெயராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான வந்தவாசியில் மரணமடைந்தார். இதனால் கலாவதி வீட்டை பூட்டி விட்டு வந்தவாசி சென்றார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கலாவதியின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்று விட்டனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கலாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை நகரப் பகுதியில் தற்போது கார்த்திகை தீப திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வீடு புகுந்து நகை கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்தசெட்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி.
இவர் கடந்த 24-ந் (வியாழக்கிழமை) அன்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். பூட்டியிருந்த இவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள விஜி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் வீட்டிலும்பூட்டை உடைத்து நகை, பணத்தையும், புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கியாஸ் சிலிண்டர், சைக்கிளை தூக்கி சென்றனர்
- பாத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சோலையூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் டேவிட் பன்னீர்செல்வம். இவரது மனைவி ஸ்டெல்லா (வயது 42). தொழிலாளி.
இவர் கணவனைப் பிரிந்து தனது 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்டெல்லா கடந்த மாதம் 22- ந் தேதி பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது , பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து கம்மல் மோதிரம் உள்ளிட்ட ஒரு பவுன் நகை ரூ.30 ஆயிரம் ரொக்கம், கியாஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் திருட்டுப் போய் இருப்பது சிறிய வந்தது.
இது குறித்து எல்லாம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலையால் கட்டிபோட்டு நிலத்தில் தூக்கி வீசினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த மேல் மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி (வயது 60). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் தேவராஜ். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அமராவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்தனர். தனியாக உறங்கிக் கொண்டிருந்த அமராவதி கழுத்தில் அணிந்திருந்த திடீரென நகைகளை பறித்தனர். அப்போது அமராவதி கூச்சல் போடவே அவர் அணிந்திருந்த சேலையால் வாய் மற்றும் கை கால்களை கட்டி தூக்கி கொண்டு போய் அருகில் உள்ள நிலத்தில் போட்டனர்.
அங்கு வைத்து வீட்டில் வைத்திருக்கும் நகைகள் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். மூதாட்டி அதற்கு பதில் அளிக்காததால் மர்ம கும்பல் அருகில் உள்ள கல்லை எடுத்து அவரின் முகத்தின் மீது தாக்கினர்.
இதில் அமராவதி படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்ற கும்பல் பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் அமராவதி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு நாட்டறம் பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிப்போட்டு மூதாட்டி தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்