search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.1 lakh"

    • வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
    • பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    • மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • இது குறித்து சீனிவாசன் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த சகோதரி மேலக்குயில்குடி, அசோக் நகரில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, முதல் மாடியில் படுத்து தூங்கினார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து சீனிவாசன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,826 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 65 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 22 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 116 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 31 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 1,984 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது.
    • பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    பாளை கக்கன்நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    ரூ. 1 லட்சம்

    நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது. அதனை சண்முகசுந்தரம் எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அவர் மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பணம் யாருக்கு சொந்தமானது? பணத்தை காணவில்லை என யாரேனும் புகார் செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராட்டு

    இந்நிலையில் பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    ×