என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sand abduction"
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இசுகு பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வல்லத்திராகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இசுகுபட்டி கோவில் வாசல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆலங்குடி கோவில்பட்டியை சேர்ந்த பிரவீன் மற்றும் இசுகு பட்டியை சேர்ந்த பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தா.பேட்டை:
முசிறி அடுத்த அய்யம்பாளையம் ஏவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 24). இவர் முசிறி காவிரி ஆற்றுப்படுகை மற்றும் அய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தா.பேட்டை அடுத்த கண்ணனூர் பகுதியில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாலிக், செல்லப்பா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துறையூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது ஆனஸ்ட்ராஜ் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்து மணல் கடத்தி சென்ற லாரியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் ஆனஸ்ட்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ் மாறன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மணல் திருட்டில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனஸ்ட்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முன்னையம்பட்டி பகுதியில் வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் மற்றும் லாரியில் இருந்த மற்றொரு நபர் லாரியில் இருந்து கீழே குதித்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் மணல் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த மணல் கடத்தி வரப்பட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவதாக வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு தகவல் கிடைத்தது.
அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது வாகன பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் மேலகொண்டயார் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம், டிராக்டர் உரிமையாளர் கார்லப் பாக்கம் கிராமம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த துரை என்பது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை சின்னம்பேடுஅகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவாயலில் இருந்து சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் தவிடு மூட்டைகள் இருந்தன.
போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறினர். இதற்கு ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவரான ரெங்கா செங்கையா (வயது 38), கிளீனர் லட்சுமைய்யா (25) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும் லாரி டிரைவர் கிளீனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்,லாரியை போலீசார் திறந்து பார்த்தபோது தவிட்டு மூட்டைகளுக்கு இடையே ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மணல் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இதுபோல் பல ஆண்டு காலமாக சென்னைக்கு இவர்கள் மணல் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் லாரி டிரைவரையும், கிளீனரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
டிரைவர் மற்றும் கிளீனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்ததினார்கள். தலைமறைவான ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் தலைமையில் போலீசார் கீழநம்மங்குறிச்சி பைபாஸ் சாலையில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் தம்பிக்கோட்டை கீழக்காடு பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் வடக்கு கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்கிருஷ்ணன் (22), லாரியின் உரிமையாளர் ரவிக்குமார் (34) ஆகியோரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு அரிக்கன்மேட்டில் அகழ் வாராய்ச்சி மையம் உள்ளது.
இங்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தெற்கு போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் உத்தரவின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் அரிக்கன்மேட்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கு மாட்டு வண்டி மூலம் மணல் ஏற்றிக் கொண்டு இருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. இதில், 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒத்த சார்லஸ் (வயது 30), கோவிந்தராஜ் (50), டெம்போ ராஜா (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய மணி (32), மாரியப்பன் (35), அய்யப்பன் (30) ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் (வயது 38), ஆறுமுகம் (68), சந்தோஷ் (21) ஆகியோர் 3 மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டுவண்டிகளையும் மடக்கிப்பிடித்து மணலுடன் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமஜெயம் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அடுத்த பையூர் கூட்ரோட்டில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மனுக்கம்பட்டு ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கூடலூர்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லைப்லப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. தேனி பகுதியில் நீர்வரத்து இன்றி பெரும்பாலான இடங்களில் வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் மணல் கடத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுருளிபட்டி யானை கஜம் பகுதியில் மணல் கடத்தி குவியல்களாக வைத்திருப்பதை பார்த்த விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கம்பம், கூடலூர் பகுதியில் கடும் வறட்சி ஏற்படும் என்பதால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்திசோனையிட்டபோது சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ராமர் (வயது40) என்பவரை கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைகையாறு, மற்றும் நீர்நிலைகளில் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் கொத்தப்பட்டி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஓடை மணல் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக கொத்தப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது ஏராளமான புதிய கட்டிடங்கள் கட்டுமான பணி நடந்து வருகின்றன. கட்டுமானத்திற்கு தேவையான மணலை உரிமையாளர்கள் வீடுகள் முன்பு குவித்து வைத்திருப்பது வழக்கம்.
இந்த மணலை நள்ளிரவில் வரும் மர்ம கும்பல் லாரியில் அடிக்கடி கடத்தி சென்றனர். மணல் கொள்ளை போனதால் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த வேன்பாக்கம் திருவொற்றியூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை மர்ம கும்பல் மினிலாரியில் கடத்தினர்.
சிறிது தூரம் லாரி சென்ற போது சாலையோர பள்ளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. இதனால் லாரியை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே லாரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே மணல் கடத்தல் கும்பல் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கட்டிட உரிமையாளர் கஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சாணாப்புத்தூர் கூட்டுச் சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். இந்த லாரிகளில் ஆந்திராவில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து பல்வேறு தமிழக கிராமங்கள் வழியாக ரகசியமாக மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து லாரி டிரைவர் மதுரை வாளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் (38), எளாவூர் அடுத்த துராபள்ளம் கிராமத்தைச்சேர்ந்த ரகுபதி(35) ஆகியோரை கைது செய்தனர்.
மணல் கடத்தி வந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்