search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sealing of stores"

    • மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று சூரமங்கலம் உதவி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார் மற்றும் அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களாக வாடகை பாக்கி வைத்துள்ள 15 கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

    மேலும் சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் கண்டறியப்பட்டு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.

    • வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    • பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த அறிவுறுரை

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவரி கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் எனவும் வாடகை பாக்கி உள்ளவர்கள் முன்கூட்டியே வாடகை செலுத்திட அறிவுறுத்தப்பட்டது.

    அதேபோல செங்கம் பகுதியில் வீட்டு வரி, குடிநீர் வழி உட்பட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பேரூராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று துண்டிக்கப்பட்டது.

    பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    • நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளித்தது
    • வியாபாரிகள் அதிர்ச்சி

    வேலூர்:

    வேலூர், மாநகராட் சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் குத்தகை இனங்க ளில் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூல் செய்யும் பணியில் மாநக ராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் கோட்டை எதிரே உள்ள லாரி ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்த மான கடைகள் உள்ளது. இதில் சிலர் வாடகைக்கு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பகுதியில் உள்ள 3 கடைகள் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதால், வாடகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் நோட் டீஸ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சி அதிகாரிகள் கடைகளின் அலுவலக வேலை நேரத் தில் தான் சீல் வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். ஆனால் நேற்று நள் ளிரவு லாரி ஸ்டாண்டுக்கு வந்த அதிகாரிகள் பூட்டி யிருந்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் வாடகை பாக்கி உள்ளதால் கடைக ளுக்கு சீல் வைத்து உள்ள தாக நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கடைகளின் உரிமை யாளர்கள் நள்ளிரவில் கடைகள் பூட்டி சீல் வைத்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது மாநகராட்சி யின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளின் அன்றாட தேவைக் கான பொருட்களை கடை யின் உள்ளே வைத்து உள்ளோம்.

    இதனால் எங்களின் தொழிலும் பாதிக் கப்படுகிறது. நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

    • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    • 100 சதவீத வருவாய் இலக்கினை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது-

    குடியாத்தம் நகராட்சியில் தீவிர வரி வசூல் நடைபெற்று வருகிறது. குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 10 கோடியே 17 லட்சத்தி 99 ஆயிரம் நிலுவையாக உள்ளது.

    சொத்து வரி 3கோடியே 22 லட்சத்து 93 ஆயிரம், குடிநீர் கட்டணம் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரம், குத்தகை இனங்களின் பாக்கி 2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரம், தொழில் வரி 70 லட்சத்து 59 ஆயிரமும், இதர வரி இனங்களாக 90 லட்சமும் நிலுவையில் உள்ளது.

    இதனால் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் அல்லது வலைதளம் வாயிலாகவோ செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

    தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை கள் எடுக்கப்படும் எனவும் கடை வாடகை நிலுவை வைத்துள்ள நிலுவை தாரர்கள் உடனடியாக 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகையை அபரா தத்துடன் செலுத்தா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மேலும் அதிக வரி பாக்கி நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியல் நகரின் முக்கிய பகுதியில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    எனவே வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் நலன் கருதி விடுமுறை தினங்களில் நகராட்சி அலுவலக வரி வசூல் மையம் செயல்படுகிறது எனவும் குடியாத்தம் நகராட்சி 100 சதவீதம் வருவாய் இலக்கினை அடைய பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • நகராட்சி கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன
    • வாடகை கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட், ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 608 கடைகள் உள்ளது. இந்த கடைகளை ஏலம் முறையில் ஏலம் எடுத்தவர்கள் மாத வாடகை செலுத்த வேண்டும்.

    நகராட்சி கடைகளில் பல்வேறு கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு பலமுறை நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் சென்று வாடகை கேட்டும் வாடகை தரவில்லை.

    இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-

    நகராட்சி கடைகள் வாடகை மூலம் நகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் கொண்டு திருப்பத்தூர் நகராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து வருகிறோம்.

    நகராட்சிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தொகையை கட்ட வேண்டும் கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ஏலம் விடப்படும் என தெரிவித்தார்.

    ×