என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seizure"
- விழுப்புரத்தில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழரசன்(வயது21). இவர் விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே கடையில் ஆடிட்டராக பணிபுரியும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் ஆடி ட்டிங் செய்தபோது கடையில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருது நேரில் வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கடையின் பொறுப்புகளை கவனித்து கொண்டு வந்த தமிழரசன் கடையில் உள்ள ரூ.6,51,830 மதிப்புள்ள 26 புதிய மொபைல்களை பில் போடாமலேயே திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் திருடிச் சென்ற செல்போன்களை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.4,10,000 பணத்தை போலீசார் பறிமுதல் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
- கடையில் சோதனை நடத்தினர்.
- போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள ஜெயபால் (வயது 47) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது.
- மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் கொட்டாரக்குடி ஊராட்சி சின்னகண்ணமங்கலம் காலாணித்தெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் சாய்குமார் (வயது 22), திருநள்ளார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மதிவாணன் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
- மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
புதுவை மாநிலத்திலிருந்து வானூர் மரக்காணம் திண்டிவனம் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாராயம், மது பாட்டில் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று இரவு புதுவையில் இருந்து மயிலம் அருகே ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அதில் சோதனை செய்தனர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் 20 லிட்டர் அளவுள்ள 4 சாராயப் பாக்கெட்டுகள் மற்றும் 25 லிட்டர் சாராயக்கேன் இருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் சாராய கேன் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் புதுவை மாநிலம் சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 37) சாராய வியாபாரி என்பதும் தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து சாராயம், மது பாட்டில்களை பலமுறை கடத்தி வந்தது தெரியவந்தது. புதுவை மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
- இருசக்கர வாகனத்தில் இருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகையில் இரு சக்கர வாகனத்தில் பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர் இரணியன் தலைமையிலான போலீசார் கூக்ஸ் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மதுபானம் கடத்தி வந்தவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது.
ரவிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இந்த 100 மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூர் கிராமத்தில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவூர் அரசினர் விடுதி அருகே சாராயம் விற்ற நாகை, செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் (வயது50), இரிஞ்சூர் கிராமம் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன்னாத் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை.
- 2078 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் ரகசிய அறை இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் ரகசிய அறையை திறந்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குட்காவை கடத்திய பாலகுறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்காவை கடத்திவந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் கண்டெய்னர் லாரியில் இருந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 2078 கிலோ குட்காவையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குட்கா கடத்தலை தடுத்த தஞ்சாவூர் சரக தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி கயல்விழி பாராட்டினார்.
- ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரின் வீட்டில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்.
- அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் கதிரேசன்.
இவர்கள் 2 பேரின் வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக தென்காசி மாவட்ட பறக்கும் படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்திற்கு விரைந்தனர்.
அப்போது அங்கு இருவர் வீட்டிலும் 2 டன் அளவுள்ள ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
- செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே அம்பகரத்தூரிலிருந்து, தனியார் பஸ் ஒன்று காரைக்கால் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அய்யப்பன்(வயது40) என்பவர் ஓட்டி வந்தார். செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர், பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது.
இதில் டிரைவர் அய் யப்பன், கண்டக்டர் மகேஸ்வரன்(41) மற்றும் 17 பயணிகள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை, அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனை வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இது குறித்து, காரை க்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
- தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றிக் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அரிசி ஏற்றுக் கொண்டிருந்த மினி வேன் 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனபால் (27 ) உரிமையாளர் சின்னதுரை (43) ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்க உள்ளனர்.
- கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை.
- கவியரசன் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்