search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    • குடோன்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ரூ. 1 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

    பட்டுக்கோட்டை

    பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு, நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் பலமுறை செய்யப்பட்டும், பட்டுக்கோட்டை நகரில் பிளாஸ்டிக் பொருள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் தலைமையில் அதிகாரிகள் இன்று பட்டுக்கோட்டை நகர கடை வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் நேரடியாக சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    அப்போது கடைகள் மற்றும் குடோன்கள் உள்பட 4 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பதுக்கி வைத்தும், விற்பனை செய்யப்படுவதையும் தொடர்ந்து அந்த பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 டன் எடை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து அழித்தனர்.

    • விழுப்புரம் அருகே வீட்டில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 680 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பருக்பாஷா (வயது 29) இவர் புதுவை மது பாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டி. எஸ். பி. பார்த்திபன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது உடனே பாரூக் பாஷாவை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 680 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை-மணப்பாறை வழியாக அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் ஏற்றி செல்வதாக வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவிக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் அவரது தலைமையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவ்வழியாக கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், லாரி டிரைவர் செழியன், லாரி உரிமையாளர் பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஓட்டலில் பதுக்கிய 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலைப் பொருட்கள் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

    இதுதொடர்பாக ஓட்டல் நடத்தி வரும் கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 51), அவரது மகன் பாலசுப்பிரமணி (22) ஆகிய 2 பேரை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை மாவட்டம் சோழவந்தானில் திடீர் சோதனை நடந்தது.
    • ஓட்டல்களில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், இறைச்சி விற்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் வீதி, கடை வீதி, காய்கறி சந்தை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலிதீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேேபால் இைறச்சி கடைகளில் நடந்த சோதனையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப்போன கோழிக்கறி, ஆட்டுக்கறியை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட தரமற்ற உணவு மற்றும் பாலிதீன் பைகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது மேஸ்திரி வினோத்குமார், சுந்தரராஜன், பணியாளர்கள் பூவலிங்கம், பாண்டி, முருகன் உடன் இருந்தனர்.

    • எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல் என 7 பேர் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
    • செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட 7 பேர் குடும்பத்தினர் இன்று காலை கோரிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். அதன் பிறகு 7 பேரையும் தரதரவென இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்ற விவரம் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    எங்கள் வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

    தேசிய புலனாய்வு முகமையின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில், இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்

    திருச்சி மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் பெரம்பலூர் அருகே எசனை ரெட்டமலை சந்து பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி ரூ.6,840 மதிப்பிலான உடை கற்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடை கற்களுடன் லாரியையும், அதன் டிரைவர் எசனை தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த ஞானசேகரனையும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்தனர்.

    "

    • முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்யப்பட்டது
    • தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் மறுமுத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர், வாலிகண்டாபுரம், லப்பைகுடிகாடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மீன் மார்கெட், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    24 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 12 மின்னனு தராசுகள் மறுமுத்திரையிடப்படாதது தெரியவந்ததையடுத்து அந்த 12 மின்னனு தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களது எடையளவுகளை குறித்த காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும், முத்திரையிடாத மின்னனு தராசுகளை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் அருகே அடுத்தடுத்து நடத்திய சோதனையில் ஒரே நாளில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் உள்ள விடத்தகுளம் சாலையில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் வட்டாட்சியர் சிவராமன் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டு ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகிறார்.

    கீழக்கோட்டையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் நேற்று 3டன் ரேசன் அரிசி பிடிபட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரவு விடத்தகுளம் சாலையில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான குழுவினர் சரக்கு வேனை சோதனையிட்டனர்.

    வட்டாட்சியர் சோதனையிடுவதை அறிந்த சரக்கு வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சந்தேகம் அடைந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடன் வந்த வருவாய் துறை அலுவலர்கள் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    50 கிலோ எடை உள்ள 80 மூடைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 4 டன் ஆகும். வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாளில் அடுத்தடுத்து வட்டாட்சியரின் நடவடிக்கையால் திருமங்கலம் பகுதியில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 1750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன
    • டிரைவரையும் கைது செய்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சூத்தியன்பட்டி அரசடிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குடி சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 1750 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநருமான மழையூர் முருங்கைக்கொல்லை கிராமத்தைசேர்ந்த ராமையா மகன் ராஜேந்திரன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். பின்னர் ரேசன் அரிசியை புதுக்கோட்டை குடிமைமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு புதுக்கோட்டை அலுவலரிடம் ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.

    • தஞ்சை வடக்கு வாசலில் சிலர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை வடக்கு வாசலில் சிலர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு, காவலர்கள் அம்பிகாபதி, அப்துல்லா, ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் வருவதைப் பார்த்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்த வருண் விஜய் (வயது 19), செக்கடி முருகன் காலனியை சேர்ந்த வீரன் (18), சேவப்ப நாயக்கன்வாரி மேல் கரையை சேர்ந்த முகமது ரபீக் ( 22), மானோஜியப்பா வீதியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் (45) என்பதும் அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருண் விஜய், வீரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×