என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 102009"
உத்தரபிரதேச மாநிலம் படோகி-வாரணாசி சாலையில் உள்ள ரோதாகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கார்பெட் தயாரிப்பு தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பட்டாசு விற்பனையும் செய்து வருகிறார். இன்று மதியம் வழக்கம்போல் கார்பெட் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. சக்தி வாய்ந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த பண்டல் மொத்தமாக வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #UPExplosion
சாத்தூர் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்தன. குறிப்பாக பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #FirecrackersExplosion
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர். செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணியளவில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் செந்துறை தாலுகா கடந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வரதராஜன்(35) என்பவர் இன்று காலை தான் ஓட்டி வந்த லாரியை விருத்தாசலம் புறவழிச்சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது வடலூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(50) புதுக்கூரைப் பேட்டையில் இருந்து ஈரோட்டை நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன், லாரி டிரைவர் வரதராஜன் ஆகியோர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கார் டிரைவர் சிவக்குமார் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விருத்தாசலம் போலீசில் சரண் அடைந்தார்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகள் சிலர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினர். அப்போது பின்னர் வந்த மற்றொரு ஷேர் ஆட்டோ அடுத்த இடத்தில் பயணிகளை ஏற்றவதற்காக முந்தி சென்றது.
இதையடுத்து 2 ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டு முந்தி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு ஷேர் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் கல்லூரி மாணவிகளான வாலாஜாபாத்தை சேர்ந்த பொன்னி, அரப்பாக்கத்தை சேர்ந்த சாலினி ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பொன்னியின் வலது கை முறிந்தது. மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த பொன்னிக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலினி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக ஷேர் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். #tamilnews
சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அங்குள்ள தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #USledairstrike #civilianskilled #Syriaairstrike
திருவையாறு:
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் மகன் மணிக்குமாருக்கும் ராமநல்லூரை சேர்ந்த அறிவழகன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒரு வேனில் அப்பகுதி மக்கள் சுவாமிமலை சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பழனம் காமராஜர் நகர் அருகே மெயின்ரோட்டில் வரும்போது முன்னால் கரும்பு லாரி மற்றும் அதற்கு பின்னால் சிமெண்ட் லாரி சென்றுள்ளது. அதற்கு பின் வேன் வந்துகொண்டிருந்தது அப்போது திடீரென முன்னாள் சென்ற கரும்பு லாரி மீது சிமெண்ட் லாரி மோதி நின்றது. இதனால் நிலைதடுமாறிய வேன் சிமெண்ட் லாரி மீது மோதியது இதில் வேனில் பயணம் செய்த சின்னப்பிள்ளை, அம்சம்மாள், கோவிந்தம்மாள், சம்பத், ரேவதி, கங்காமிர்தம், மலர்கொடி, மோகன், சந்துரு, , கோகுல், பிரபாகரன், சக்ரவர்த்தி உள்பட 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூ நகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றனர்.
குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.
அப்போது நிலைதடுமாறி சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார்சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப முயன்றனர்.
அதற்குள் படுகாயம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
பொன்னேரி அருகே உள்ள மாலிவாக்கத்தில் நேற்று பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு வந்திருந்த திருவொற்றியூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அதே பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர்கள் உருட்டு கட்டையால் அப்பகுதி மக்களை தாக்கி தப்பி ஓடி விட்டனர்.
இந்த தாக்குதலில் வள்ளி, சரண், விஜி, சுரேந்தர் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் அய்யப்பன் (வயது 36) ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறவழி சாலைக்கு திரும்பியபோது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்த வேன் மீது திடீரென்று மோதியது.
இந்த விபத்தில் பஸ் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். அதேபோல் விபத்தில் சுற்றுலா வேனும் பலத்த சேதம் அடைந்தது. இதில் சுற்றுலாவேனில் பயணம் செய்த சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரகுமார் (39) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதுபோல் சுற்றுலா வேனில் பயணம் செய்த 13 பேரும், பஸ்சில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் ரோசனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காயம் அடைந்த 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிலர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்சும், சுற்றுலா வேனும் மோதியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சையும், வேனையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்