search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. #Iranearthquake
    தெக்ரான்:

    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

    அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரோடுகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.

    5.9 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானது.

    நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  #IranEarthquake
    தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோதலில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 70). இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்ட முயன்றார். இதற்கு அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (42) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அம்மாசி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், சின்னதுரை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அம்மாசி, சின்னதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Leopard

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

    நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது.

    இந்த நிலையில் இன்று காலை நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் மாடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக ஏரிகரைக்கு சென்றனர்.

    ஏரிக்கரை அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து அலுமேலுவை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் கையில் கடித்தது. அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவரையும் சிறுத்தை கையில் கடித்தது.

     


    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுத்தையை விரட்டியடித்தனர். பொதுமக்களை கண்டதும் சிறுத்தை மீண்டும் அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று பதுங்கி கொண்டது.

    படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட பொது மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சிறுத்தைபுலியை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தில் திரண்டனர். கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். மேலும் சிறுத்தை நோக்கி கற்களை வீசினர். அப்போது கூட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு நின்றிருந்த 2 பேரை கடித்து குதறியது. இதில் கமல் என்பருக்கு வயிறு பகுதியிலும், சுப்பு என்பவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #Leopard

    ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். #KabulAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    உள்ளே செல்லும்போது பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடியே சென்றதால், பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.


    இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர்.

    மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #KabulAttack
    4 வழிச்சாலையில் தாறுமாறாக ஓடி எதிர் திசையில் நின்ற வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தார்கள்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிபட்டி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். வேனை பந்தல்குடியை சேர்ந்த மகேந்திர பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சென்டர் மீடியனில் மோதி எதிர்புறம் வாகனங்கள் செல்லும் சாலையில் நின்றது.

    அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் மகேந்திரபாண்டியனில் 2 கால்களும் முறிந்தன. மேலும் வேனில் இருந்த ராஜலட்சுமி, சுப்பையா, பாப்பாத்தி, ருக்குமணி, ஜெயமணி, அரசு பஸ் டிரைவர் முத்து உள்பட 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் டிரைவர் மகேந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை பார்த்த 25 பேரை வி‌ஷவண்டு கொட்டியது. இதில் 25 பேரும் காயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகேயுள்ள பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவருடைய தோட்டத்தில் 25-க்கும் மேற்பட்டோர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மரத்திலிருந்த 1000-க்கும் மேற்பட்ட வி‌ஷ வண்டுகள் பறந்து வந்து விவசாய பணியில் ஈடுபட்டவர்களை கொட்டியது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தோட்டத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் அவருடைய மகன் ஸ்ரீ வேலன் மற்றும் பொன்னுத்தாய், சாந்தி ஆகியோரின் உடலில் வி‌ஷ வண்டுகளின் கொடுக்குகள் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுக்கோட்டை அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது கார் கவிழ்ந்த விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    துருக்கியில் இன்று அதிவேக ரெயில், மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #TurkeyTrainCrashes
    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் அதிவேக ரெயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியது.  ஒரு பெட்டி நடைமேம்பாலத்தின் மீது மோதி நொறுங்கியது. இதனால் இரும்பினால் அமைக்கப்பட்ட அந்த மேம்பாலமும் உடைந்தது.


    விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்காரா-கொன்யா அதிவேக ரெயில் பாதை 2011ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 2014ல் அங்காராவையும் இஸ்தான்புல் நகரையும் இணைக்கும் அதிவேக பாதை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyTrainCrashes
    மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜான்பிரான்சிஸ்கென்னடி, ஆர்த்தர்வில்சன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.
    குளித்தலை:

    கரூர் கிழக்கு பங்களாத்தெருவை சேர்ந்த ஜான்பிரான்சிஸ் கென்னடி. இவரது மகன் ஆர்த்தர்வில்சன் (வயது 18). இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து குளித்தலை வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற லாரி டிரைவர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் லாரியை பிரிவு சாலையில் திருப்பியுள்ளார்.

    இதனால் எதிர்பாராதவிதமாத மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜான்பிரான்சிஸ்கென்னடி, ஆர்த்தர்வில்சன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
    திண்டிவனம்:

    தென்காசியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்னை நோக்கி புறப்பட்டது.

    அந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ்சுக்கு முன்னால் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முந்தி செல்வதற்காக ஆம்னி பஸ் டிரைவர் முயன்றார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 43) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் விபத்தில் பலியான மாரிமுத்துவின் தாய் லட்சுமி (65), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டியை சேர்ந்த அன்பழகன் (33) உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் நடந்த இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மற்றும் ஆம்னி பஸ்சை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    மீஞ்சூரை அடுத்த காட்டூர் அருகே உள்ள ஊராணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இருந்து எளாவூர் ரெயில் நிலையம் நோக்கி மினி லோடு வேனில் பயணம் செய்தனர். வேனை டிரைவர் சிலம்பரசன் ஓட்டினார்.

    எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் அருகே ஓட்டேரி என்ற இடத்தில் சென்ற போது வேனின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.

    வேனில் பயணம் செய்த ஊரணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த கோபால், அவரது மனைவி கிரு‌ஷண்வேணி, ராஜீ, வரதன், முத்து மற்றும் கோவிந்தசாமிஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் சிலம்பரசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
    குளித்தலை அருகே லாரி ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மாட்டி கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள சங்காயிபட்டியை சேர்ந்தவர்கள் வையாபுரி, சவரிமுத்து. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை - மணப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தனர். ஆலமரத்துபட்டி ஒத்தக்கடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வையாபுரியின் கழுத்தி மாட்டியுள்ளது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வையாபுரி, சவரிமுத்து 2 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×