என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோதனை"
பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரிஸ்வான் (25) மாட்டு வியாபாரி.
இவர் ஆரணி அடுத்த தேப்பனந்தலில் இன்று நடைபெறும் மாட்டு சந்தையில் மாடுகளை வாங்க தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆரணி அடுத்த மலையம்பட்டு கூட்டு ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் ரிஸ்வான் காரை சோதனை செய்த போது ரூ 1.95 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
போளூர் அடுத்த வசூர் கூட்ரோட்டில் பறக்கும் படை தாசில்தார் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் அடுத்த காரப்பட்டில் ரைஸ் மில் நடத்தி வரும் சிலம்பரசன் என்பவர் ஓட்டி வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ.90 ஆயிரம் இருந்தது இந்த பணத்தை வைத்து படவேட்டில் நெல் வாங்க செல்வதாக கூறினார். அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் பிடித்த ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பிரிவு அலுவலரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அனைத்து தொகுதிக்கும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே தேனி மாவட்ட எல்லையில் கணவாய் மலைப்பகுதியில் டாஸ்மாக் தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் (வயது 47) உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 190 வைத்திருந்தது தெரியவந்தது.
அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஜேக்கப் கூறுகையில், ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு பணம் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த என்ஜினீயர் மூர்த்தி, உறவினர் மதனுடன் காவல் காரைக்குடி சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி பகுதியில் வந்தபோது பறக்கும்படை அதிகாரி ரத்தினவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சோதனை செய்தனர்.
இதில் மூர்த்தியிடம் இருந்து ரூ.3 லட்சமும், மதனிடம் இருந்து ரூ.2 லட்சமும் ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்தப்பணம் தாசில்தார் சிவசாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
பாராளுமன்ற தேர்தல் நாள் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணமோ, அன்பளிப்போ அரசியல் கட்சியினர் கொடுக்கிறார்களா என்பது கண்காணிக்கப்படுகிறது. இரவு பகலாக பறக்கும் படையினர் கார், பஸ், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி சென்றால் கூட அவர்களை நிறுத்தி உடமைகளை ஆய்வு செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ஒரே நாளில் ரூ.11 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பணத்தை போலீசார் கைப்பற்றி கருவூலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் 33 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-
சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடந்த வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் சிக்கியது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பூக்கடை பகுதியில் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ரூ.30 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
புரசைவாக்கத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டது. பெரம்பூரில் வக்கீல் அருள் பிரகாசம் என்பவரிடம் ரூ.4 லட்சம் கைப்பற்றப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 கிலோ தங்கம் ரூ.66 லட்சம் மற்றும் 83 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தாரமங்கலத்தில் உள்ள ஓட்டல் அதிபரிடம் இன்று காலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சேலம் செவ்வாப்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற 13 கிலோ வெள்ளி, வாகன சோதனையில் பிடிபட்டது.
திருச்சியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம் வாகன சோதனையில் சிக்கியது. அதில் ரூ.4½ கோடி இருந்துள்ளது. உரிய ஆவணம் இல்லாததால் கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்துடன் இன்று பிடிபட்டார்.
தேனியில் நடந்த சோதனையில் தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
விருதுநகரில் நடந்த சோதனையில் முட்டை வியாபாரி குருசாமியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 64 லட்சம் கைப்பற்றப்பட்டது. 2 வேன்களில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்டது. வங்கி பணத்தை எடுத்து சென்ற போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூரை அடுத்த ஈச்சயகுடியில் நடந்த சோதனையில் வேனில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் சிக்கியது. ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றாலும் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பாபநாசம் அருகில் நடந்த சோதனையில் ரூ.8 லட்சம் சிக்கியது.
நாகை மாவட்டம் சீர்காழியில் நடந்த வாகன சோதனையில் ராஜசேகர் என்பவரிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 45 லட்சம் சிக்கியது. கோபி செட்டிபாளையம் கோவில் உண்டியல் பணத்தை கொண்டு சென்ற போது உரிய ஆவணமின்றி பிடிபட்டது. இன்று காலையில் நம்பியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பிடிபட்டது.
நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 61 ஆயிரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5 லட்சத்து 27 ஆயிரமும் உரிய ஆவணம் இல்லாமல் கைப்பற்றப்பட்டது. சாத்தான்குளத்தில் அதிகாலை நடந்த வாகன சோதனையில் மணிராஜ், ஜெனிபன் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிக்கினர். 2 வேன்களில் வந்த அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கையில் அதிக பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உரிய ஆவணத்துடன் எடுத்து செல்லலாம்.
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.
இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது உடல்நல குறைவால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ் டிடிட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனிவார்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 நபர்கள் மட்டும் லல்லு பிரசாத் யாதவை ஆஸ்பத்திரி வார்டில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
இதில் குடும்ப உறுப்பினர்கள், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள்.
ஆனால் லல்லு பிரசாத் யாதவின் உடல்நிலை பற்றி விசாரிக்க சென்றதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து திடீரென்று சோதனை நடத்தினர். இச்சோதனை 30 நிமிட நேரம் நடந்தது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறும்போது, “லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெறும் வார்டில் நடந்த சோதனையில் குற்றத்துக்கான எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்றனர். #LaluPrasadYadav
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம் பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி உலகநாதன் தலைமையில் இன்று வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் ரூ. 7 லட்சம் இருந்தது.
இதனை வடவள்ளியை சேர்ந்த சதீஷ் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் விசாரித்தபோது திருமண நிகழ்ச்சிக்கு மணமேடை அமைக்க அட்வான்சாக இந்த பணத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentElection
உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான நேத்ரம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல போலி நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவை மையமாகக் கொண்டு போலி நிறுவனங்களைத் தொடங்கி, அவற்றின் வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி அளவிலான பணம் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
லக்னோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையின்போது 4 சொகுசு கார்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான மோண்ட் பிளாக் பேனாக்கள், ரூ.2.2 கோடி பணம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
நேத்ரம் வீட்டில் நடைபெற்ற சோதனையில், ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 24 சொத்துக்கள் தொடர்பாக ரூ.225 கோடி அளவிற்கு பணப்பரிவர்த்தனை செய்த தகவல் இருந்தது. எம்எல்ஏ, எம்பி தேர்தலில் போட்டியிட கட்சியினருக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக நேத்ரம் பேச்சுவார்த்தை நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டைரியில் இருந்த குறிப்புகளின்படி, லக்னோவில் உள்ள இவரது வீட்டில் இருந்து ரூ.18 லட்சம், டெல்லியில் உள்ள ஜிகே1 வீட்டில் ரூ.86 லட்சம், மற்றும் ரூ.2.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் நேத்ரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேத்ரம் தொடர்புடைய நிறுவனங்கள், வங்கிக்கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Mayawati #ExSecerataryNetram #ITRaid
தேனியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான எம்.எம். மளிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடியாக இது உள்ளது.
இதன் சார்பு நிறுவனமாக ஆர்.ஜி. கண்ணா எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனங்களில் முறையான வருமானவரி தாக்கல் செய்யாமல் இருந்ததாகவும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் உரிமையாளர் வீடு மற்றும் மேலாளர் வீடு, அலுவலகம், உற்பத்தி பொருள் பேக்கிங் செய்யும் பகுதி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
வருமானவரித்துறை சோதனையால் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தேனியிலும் இந்த சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பதி.
இவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிக லோடுடன் வரும் லாரிகளை மடக்கி அதன் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது பற்றிய புகாரின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10 தினங்களுக்கு மாறு வேடத்தில் லாரியில் சென்றனர். அந்த லாரியையும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி மடக்கி லஞ்சம் கேட்டு உள்ளார்.
மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்-களவுமாக பிடித்தனர். பிறகு அவரை அழைத்து சென்றபோது பின்னால் போலீஸ் வாகனத்தில் சென்ற பதி திடீர் தலைமறைவானார்.
அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தேடி கொண்டு இருக்கிறார்கள். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோபியில் உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டிலிருந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் சட்டம்- ஒழுங்கு டெபுடி போலீஸ் கமிஷனராக பெண் அதிகாரி சைத்திரா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இவர், மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கல்வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
இதில், போலீஸ் நிலையம் மீது கல்வீசியவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்றும், அவர்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மறைந்திருப்பதாகவும், பெண் போலீஸ் அதிகாரி சைத்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.
அங்கு, மறைந்திருந்த குற்றவாளிகளை போலீசார் துணையுடன் பிடிக்க முயன்றார். இத்தகவல் அறிந்து ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெண் போலீஸ் அதிகாரி கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். முதல்-மந்திரி அலுவலகத்திலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா உடனடியாக சட்டம்-ஒழுங்கு டெபுடி போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவர், பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்யூனிஸ்டு அலுவலகத்தில் சோதனைக்கு சென்றதாலேயே பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா இடமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். #ChaitraTeresaJohn
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாறை:
தமிழகத்தை சுருட்டி வாரிய கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.
மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்தனர். தற்போது குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதிபெற தாமதமாவதால் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவுப்படி தனி தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ கையொப்பமிட்ட அனுமதிசீட்டுடன் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் சாய்ந்த மரங்களுடன் நன்றாக இருக்கும் மரங்களையும் வெட்டி கடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
புயலால் சாய்ந்த மரங்களை வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும் லாரிகளில் அதிகளவு மரங்கள் கொண்டு செல்வது வாடிக்கையாகி உள்ளது. சித்தரேவு சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மணலூர், கே.சி.பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து புயலால் சாய்ந்த மரங்களை ஏற்றி வருவதாக கூறினர்.
ஆனால் அந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விலை உயர்ந்த சில்வர்ஓக், தீக்குச்சி செய்ய பயன்படுத்தும் மலைமுருங்கை மரங்கள் இருந்ததால் லாரிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற உரிய அனுமதிவாங்கி மரங்களை வெட்டினார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உரிய அனுமதி சீட்டு இருந்தால் லாரிகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மதுரை மேலூரைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கடந்த 6-ந் தேதி இரவு முகமூடி கும்பல் துப்பாக்கி முனையில் புகுந்து வீட்டில் இருந்த பாஸ்கரனின் மனைவி மீரா (60), பணிப்பெண் மற்றும் காவலாளி ஆகிய 3 பேரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தனி அறையில் அடைத்த கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த பல லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியது.
இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த கணபதி என்ற குருட்டு கணபதியை (39) போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட கணபதி தன்னுடன் 26 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். இது தனிப்படை போலீசாருக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் மற்றும் என்ஜினீயர்கள் வீடுகளை குறி வைத்து கொள்ளையடிப்பதையே இந்த கும்பல் வழக்கமாக செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளையில் தொடர்புடைய பெருங்குடி ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, சுரேஷ் குமார், ராஜகுரு, பழனிவேல், ஆனந்த கிருஷ்ணன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நாட்டு துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
கைதான ராதா கிருஷ்ணன், டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர். இவர்கள் அனைவரும் திருமங்கலம் பகுதியில் அடிக்கடி சந்தித்து சதி திட்டம் தீட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து கணபதியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
திருமங்கலத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் குமார் என்பவரிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றதாக கணபதி தெரிவித்த நிலையில் குமார் வீட்டை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் நாட்டு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், 66 பிஸ்டல் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ்காரர் குமார், கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் சென்னை வருவதை அறிந்த குமார் அங்கிருந்து தலைமறைவாகி மதுரை சென்ற போது கைது செய்யப்பட்டார்.
குமாரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குமார் திரிபுரா மாநிலத்தில் நக்சலைட் தடுப்பு பிரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தது தெரிய வந்தது.
நக்சலைட்டுகள் வேட்டையின் போது அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த குமார் ரகசியமாக அதனை திருமங்கலத்திற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த ஆயுதங்களை கணபதி மற்றும் ரமேஷ் ஆகியோர் மூலம் கொள்ளையர்களுக்கு சப்ளை செய்துள்ளார்.
மேலும் போலீஸ்காரர் குமார் கடந்த 3 மாதங்களாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அவரது நடவடிக்கைகள் குறித்து கவர்னர் மாளிகை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேரிடம் மதுரையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளையில் திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் சரவணனை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க பல்வேறு இடங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பிய கும்பல் கோவா சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தொகை ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் டாக்டர் பாஸ்கரனின் மனைவி மீரா கொடுத்த புகாரில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் கொள்ளை போன தொகை குறித்து போலீசார் பாஸ்கரனிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.30 லட்சம் வரை கொள்ளை கும்பல் பல்வேறு இடங்களுக்கு சென்று செலவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலை கைதான 7 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பழனிவேலு, அவர்கள் 7 பேரையும் வருகிற 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குமார் உள்ளிட்ட 7 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ்காரர் குமார் மற்றும் முக்கிய குற்றவாளி கணபதி, ரமேஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மேலூர் கோர்ட்டில் மனு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்