search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    • 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

    * 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    * பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்

    • தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி வெளியிட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே தான் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வை பொறுத்தவரை அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொகுதியிலேயே முகாமிட்டு தினசரி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    அதேவேளை தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க. இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால் அவர்களது வாக்கு வங்கியை பெறுவதில் பா.ம.க., நாம் தமிழர் கட்சியும் மல்லுகட்டுகிறார்கள்.

    இதனால் இடைத்தேர்தல் களம் வழக்கத்தை விட மாறுபட்டு, தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது.

    நேற்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதிக்கு உட்பட்ட தும்பூர், நேமூரில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மாலையில் ராதாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தனது பிரசாரத்தை முடித்தார்.

    அதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சூரப்பட்டு, வாழப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு மாலையில் கெடாரில் முடித்துக்கொண்டார்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வெவ்வேறு இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தனர். இதையடுத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க அங்கிருந்து வெளியேறினார்கள்.

    பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை(புதன்கிழமை) வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக வாக்குச்சாவடிகள் மும்முரமாக தயார் படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 பேர் ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 29 பேர் ஆவார்கள்.

    இந்த தேர்தலில் 552 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகள் 276-ம், வி.வி.பேட் கருவிகள் 276-ம் ஆக மொத்தம் 1,104 எண்ணிக்கையிலான எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    தேர்தலுக்கு இன்று ஒரு நாளே இருப்பதால் பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி (சனிக்கிழமை) பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    பதிவானவற்றில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள்  சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்.

     

    ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [ ஜூலை 5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

     

    சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின்தங்கினார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழிமுறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.
    • தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டனர்.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர்.

    இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.

    தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசிய போது, யூடியூபரால் கிண்டலுக்கு ஆளான சம்பவம் அரங்கேறியது. செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசி வந்த போது, யூடியூபில் பிராங்க் செய்யும் நிகோ ஓமிலனா தனது கையில் L (தோல்வியாளர் என்பதை குறிக்கும் வகையில்) என்ற ஆங்கில எழுத்து கொண்ட காகிதத்தை தூக்கி காண்பித்தார்.

    இதைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் "இதை பிடித்துக் கொள்ளுங்கள் ரிஷி, உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது," என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இவர் 7.49 மில்லியன் ஃபாளோயர்களை வைத்திருக்கிறார்.

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் தனித்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் என்பதால், பிரதமர் பேசிய மேடை அருகே எளிதில் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

    • இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
    • இதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்ஷிதா மூர்த்தியுடன் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

    இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

    தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

    பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    • பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது.
    • இந்த முறை ஏராளமான தமிழர்கள் களம் காண்கின்றனர்.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர்.

    உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.

    இந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

    • கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்.
    • பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    டெல்லியில் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் ஒட்டி இந்தியா கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்

    தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர் கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்

    பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
    • இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய அவர், "காணாமல் போன தேர்தல் ஆணையர்கள்' என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயேதான் இருக்கிறோம். இப்போது காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று மீம்ஸ் போடலாம் என்று கிண்டலாக பேசினார்.

    மேலும் பேசிய அவர், "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் 39 இடங்களில் மட்டும் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்" என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி ஏழு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் எண்ணுவதற்கு முன் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்தது. அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முதலில் வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

     


    இதைத் தொடர்ந்து பேசிய அவர், "நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர்."

    "இந்த தேர்தலில் மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர். இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும். வாக்குப்பதிவை ஒட்டி நாடுமுழுக்க 135 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் நான்கு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன."

    "தேர்தல் திருவிழா காலக்கட்டத்தில் நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். வாக்கு எண்ணிக்கை பணி மிகவும் வலுவான ஒன்று ஆகும். இது கடிகாரம் இயங்குவதை போன்றே மிக சரியாக நடைபெறும்," என்று தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
    • ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற ஏழாம் கட்ட வாக்குப்பதிவோடு வாக்குப்பதிவு முழுமை பெற்றது.

    இன்றைய ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு நடைபெற்றது. 18 ஆவது பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்றுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    • 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
    • தாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இன்று மட்டும் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அந்த வகையில், பீகார் மாநிலத்தின் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் யாதவ். இவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்துள்ளார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு தான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம், ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும்."

    "இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்," என்று தெரிவித்தார்.

    • 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஜார்க்கண்ட்:

    பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

    7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 57 தொகுதிகளில் 26.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பீகார்- 24.25 சதவீதம்

    சத்தீஸ்கர் - 25.03 சதவீதம்

    இமாச்சல பிரதேசம் - 31.92 சதவீதம்

    ஜார்க்கண்ட்- 29.55 சதவீதம்

    ஒடிசா- 22.64 சதவீதம்

    பஞ்சாப்- 23.91 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 28.02 சதவீதம்

    மேற்குவங்காளம்- 28.10 சதவீதம்


    ×