search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105688"

    சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய அவரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது மகள் பிரியங்கா (வயது22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் பிரியங்காவிடம் கூடுதலாக உங்கள் வீட்டில் இருந்து நகை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கார்த்திக் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ந்தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கடந்த 5-ந்தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். 
    குழந்தை கருப்பாக பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாராயணத் தேவன்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜா (வயது 26). இவருக்கும் கூடலூர் எல்லைத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பிரபாகரன் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது திருமணத்தின் போது பெண் வீட்டார் 30 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கருப்பாக இருந்ததால் கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மனோஜாவையும், அவரது குழந்தையையும் திட்டி வந்தனர்.

    மேலும் பிரபாகரனுக்கு 100 பவுன் நகையுடன் வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இதனால் மனோஜாவிடம் கூடுதல் பணம் ரூ.3 லட்சம் வாங்கி வரச் சொல்லி அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனோஜா புகார் அளித்தார். விசாரணை நடத்துமாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் மனைவியை கொடுமைபடுத்திய ஆசிரியர் பிரபாகரன், அவரது பெற்றோர் மொக்கராஜ், ஜெயா, உறவினர் சங்கீதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரம் ஒண்டி வீரன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). இவருக்கும் துர்கா தேவி (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 32 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் படி துர்கா தேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார்.

    மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டால்தான் திருமணத்தின் போது கொடுத்த நகைகளை திருப்பி தருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக மனைவி போலீசில் புகார் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாகுறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மங்கைகரசி (26).

    இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த மங்கைகரசி கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் மங்கைகரசி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் சரவணன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சரவணன் வீட்டுக்கு போலீசார் நேற்று மாலை சென்றனர். வீட்டில் இருந்த சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் சொல்லும் போது போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று சரவணனிடம் போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சரவணன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர், 2-ம் திருமணம் செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிச்செல்வி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    எனக்கும், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 3ம் பவுன் நகையும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

    குழந்தை இல்லாததை காரணம் காட்டி, கூடுதலாக 10 பவுன் மற்றும் பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர்.

    இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்னையும், குழந்தையையும் ஏற்க கணவர் மாரிமுத்து மறுத்துவிட்டார். மேலும் அவர் சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

    இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை மாரிமுத்து 2-ம் திருமணம் செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாரிமுத்து, அவரது பெற்றோர் சுந்தரலிங்கம்-பாப்பா, சகோதரிகள் பொன்னுத்தாய், திலகராணி மற்றும் எலிசபெத்ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    ஈரோடு அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் அமானுல்லா கான் வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமானுல்லா கான் ஹவச்சா கையில் இருந்த குழந்தையின் தலையில் அடித்தார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தையின் உணர்வு பறிபோனதாக கூறினார். இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஹவச்சா கேரளா சென்றார். அங்கு பல ஆஸ்பத்திரிகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை அளிக்க அளிக்க குழந்தை அசைவற்று மோசமான நிலையை எட்டியது.

    குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்ய ஈரோடு வந்தார். ஈரோட்டில் உள்ள போலீசில் குழந்தையின் மருத்துவ குறிப்புகளை இணைத்து கணவர் மீது புகார் அளிதார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹவச்சா நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகாரை கூறினார். உரிய போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்காத காரணத்தையும், உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

    தந்தையால் தாக்கப்பட்டு உணர்வு இழந்து அசைவற்று கிடக்கும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இதன்பேரில் ஈரோடு மகளிர் போலீசார் அமானுல்லாகான் மட்டும் அவருடைய தாய், அக்காள், சித்தி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று அமானுல்லாகான் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் பெமினா பேகம் (வயது 32). இவருக்கும், பரமக்குடி பார்த்திபன் நகர் செய்யது அலி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    சவுதியில் பணியாற்றிய செய்யது அலி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தொழில் செய்வதற்காக கூடுதல் நகை-பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

    இதனால் தாய் வீடு வந்த பெமினா பேகம், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரட்சணையாக 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    போலீசார் விசாரணை நடத்தி செய்யது அலி, அவரது பெற்றோர் ஜின்னா, ரோசர் செரிமா, உறவினர்கள் நஜிதா, சாகுல் அமீது, ‌ஷர்மிளா பினு, பக்ருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    திருச்சியில் நாளை நடைபெற இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் ரூ.15 லட்சம் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. #Dowryharassment
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவ ரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (12-ந்தேதி) மணப்பாறையில் நடைபெறுவதாக இருந்தது. அருண்குமார் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.



    இந்த நிலையில் அவர், சூரியகலாவிடம் தனக்கு ரூ.15 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறினாராம்.

    இதனால் மனம் உடைந்த சூரியகலா, இது தொடர்பாக அருண்குமாரின் தாய் மல்லிகா, மாமா கிருஷ்ணன், சகோதரி ஜெயபிரபா ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரியகலா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் ரூ.15 லட்சத்தை முழுமையாக தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட சூரியகலா, மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அருண்குமார் மற்றும் மல்லிகா, கிருஷ்ணன், ஜெயபிரபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அருண்குமார் தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெற இருந்த திருமணம் வரதட்சணையால் நிறுத்தப்பட்டு விட்டது. #Dowryharassment
    வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜோகியாகேடா என்ற கிராமத்தில் உள்ள சமேதீன் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என  கூறப்படுகிறது. இதனால், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை தினம் தினம் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகளால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இறந்த பெண்ணின் வீட்டார் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #UttarPradesh
    வரதட்சணை தராததால் திருமணத்துக்கு மறுத்ததாக சென்னை போலீஸ் அதிகாரி மீது முன்னாள் காதலி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்தபோது அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண் குமார் (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    பின்னர் வருண்குமார் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பயிற்சிக்காக புதுடெல்லி சென்றார். பிரியதர்ஷினியும், ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்காத நிலையில் வருண் குமாருக்கு உதவுவதற்காக டெல்லி சென்று தங்கினார்.

    இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு வருண் குமார்- பிரியதர்ஷினி இடையேயான காதலை இருவரது பெற்றோரும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். 2012-ம் ஆண்டு திருமணம் செய்ய தேதியும் குறிக்கப்பட்டது.

    வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு வருண்குமாரின் பெற்றோர், பிரியதர்ஷினி மற்றும் அவரது பெற்றோரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், பி.எம். டபிள்யூ. கார் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டனர்.

    வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும், இல்லையெனில் திருமணம் கிடையாது என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். மேலும் வருண்குமாரும் திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

    இதனால் திருமணம் நின்றது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரியதர்ஷினி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் வருண்குமார் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

    அவரது மனுவை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்து விட்டதால் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து வருண் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் மீதான வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து வருண்குமார் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் முழு விவரங்களையும் ஆராய்ந்து அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

    இதற்கிடையே வருண் குமார்- பிரியதர்ஷினி திருமணம் நின்ற பின்பு வருண்குமார், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரையும், பிரியதர்ஷினி வக்கீல் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகாதேவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் கல்யாணி, சகோதரர் சந்திரபோஸ் ஆகியோர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, இளைய ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
    கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் கோமதிபுரம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பூர்ண பிரியா (வயது 32). தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். விவாகரத்து பெற்ற பூர்ண பிரியா, 2-வது திருமணத்திற்காக தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதன்மூலம் ராஜீவ் கண்ணா (32) என்பவர் தொடர்பு கொண்டார். அவருக்கும் பூர்ண பிரியாவுக்கும் கடந்த 1-ந் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 3-ந்தேதி மேலும் ரூ.25 லட்சம் வேண்டும் என ராஜீவ் கண்ணா கேட்டதோடு திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் டாக்டர் பூர்ண பிரியா புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜீவ் கண்ணா, அவரது தந்தை பாலமுருகேசன் (62), தாயார் புஷ்பம் (60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    ×