search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு"

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உண்டாகி கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அண்மையில் எச்சரிக்கை செய்து இருந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த்(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன், இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சேலம் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியது தொடர்பாக விடுதலை சிறுத்தை தொண்டரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசி விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 20-ந் தேதி வெளியானது.

    ஏற்கனவே ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் தகவல் பரப்பியதால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. இதற்கிடையே கெங்கவல்லியிலும் ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கானிகேர், ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மற்றொரு சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் வெளியிட்டது கெங்கவல்லி அருகே உள்ள புனல் வாசல் கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டரான மகாலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து சென்ற போலீசார் கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்கள் சமூகம் தொடர்பாக அவதூறு பரப்பிய மகாலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கெங்கவல்லியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

    பின்னர் ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மகாலிங்கத்திடம் விசாரித்த போது, பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து அந்த சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலைதளங்களில வெளியிட்டது தெரியவந்தது.

    இதற்கிடையே சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் சேலம் ஜே.எம்.5 கோர்ட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் தங்கவளவன் உள்பட பலர் ஒரு புகார் கொடுத்தனர். அதில் மகாலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தது போல பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதனை அம்மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து கெங்கவல்லி சுற்று வட்டார பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக வேலூர் இந்து இயக்க பிரமுகரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொது செயலாளர். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிற மதத்தைப்பற்றி அவதூறு பரப்பியதாக இவர் மீது திருச்சி பொன்மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு வேலூர் வந்த பொன்மலை போலீசார் ராஜகோபாலை கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்து சென்றனர்.
    காணொலி காட்சிகள் மூலம் நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவருமான சுப. உதயகுமார் இன்று நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விசு பேசும் காணொலி காட்சி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர் விசு என் பெயரை குறிப்பிட்டு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

    இது பற்றி நான் அவருக்கு என் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். என்னை பற்றி பேசும் அவதூறு கருத்துக்களை நீக்கிவிடும்படி கூறியிருந்தேன்.

    ஆனால் அவர் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாகவும், உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியும் விமர்சித்து இருந்தார்.

    இது பற்றி நான் சென்னையில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நடிகர் விசு எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசி வருகிறார்.

    நடிகர் விசுவின் கருத்துக்களால் நானும், என் குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் விசுவால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது குறித்து வெற்றிவேல் போலீசில் புகார் அளித்தார்.
    ராயபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்‌ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இதையடுத்து தர்ம ரக்‌ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.
    சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக நேற்று 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவர், தனது மனைவியின் கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மகப்பேறு பிரிவில் பணியில் இருந்த டாக்டர் பவானிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயக்குமார், அந்த பெண் டாக்டரை செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை முகநூல், ‘வாட்ஸ் அப்’ போன்றவற்றில் பதிவேற்றம் செய்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர் பவானி கொடுத்த புகாரின் பேரில் விஜயக்குமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளத்தில் டாக்டர் பவானிக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த 10 நபர்களையாவது போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    டாக்டர் பவானி, தனது கணவர் சூரியபிரகாசுடன் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள செல்வாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்தினால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக நேற்று காலை திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்த மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவமனை டீன் நடராஜன் மற்றும் முதுநிலை டாக்டர்கள் முன்னிலையில் பவானியின் கணவர் டாக்டர் சூரியபிரகாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மருத்துவ கல்விஇயக்குனர், போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
    ×