என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க."
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
- எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது
நாகர்கோவில் :
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோ விலில் நேற்று நடந்தது.
அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசி னார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
மதுரையில் நடைபெற்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது. தொண்டர்களிடம் புதிய தெம்புடனும் எதிர் காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
நினைவுகள் அழிவதில்லை. வெற்றிகள் முடி வதில்லை. அ.தி.மு.க.-வின் வெற்றிகள் மறைவதில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக நாம் ஒவ்வொருவரும் முனைப்போடு போர்க ளத்தில் நிற்பது போன்று செயல்பட வேண்டும். எதிரி கள் நமக்கு செய்யும் துரோகங்களை மக்களின் வாக்குகளால் வீழ்த்திக் காட்டி வெற்றி வாகை சூட வேண்டும். இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதி களில் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், பொன் சுந்தர்நாத், ஜீன்ஸ், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,குளச்சல் நகர கழக செயலாளர் ஆண்ட்ரோஸ் , குளச்சல் சட்ட மன்ற தொகுதி முன்னாள் கழக செயலாளர் ஆறுமுகராஜா , முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ் , அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
- சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
அதிமுக பொது குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், தென்கரை ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா, ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, 5-வது வார்டு செயலாளர்அசோக், 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் துரை கண்ணன், ஜெயபிரகாஷ், மாரி, பேட்டை பாலா, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, பால் பண்ணை ராஜேந்திரன், பிரேம், சுரேஷ், ராஜா, பாலுசாமி, மணி, அழகர் ஜூஸ்கடை கென்னடி, பி.ஆர்.சி. மகாலிங்கம் முள்ளிப்பள்ளம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் :
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு தடைவிதிக்க மறுத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பினை வரவேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த தீர்ப்பை வரவேற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பஸ்களில் பயணித்த பயணி களுக்கு பஸ்சில் ஏறி இனிப்புகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை அநாகரிகமான முறையில் பேசி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
- அவதூறாக பேசியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் அநாகரிக மான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், செங்கோட்டை ரஹீம், தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடிகளை பிரிப்பது தொடர்பாக கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி யினருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கட்சிகளின் சார்பாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தற்போது ள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடி களை இரண்டாக பிரித்து வாக்குசாவடி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக விளக்க மளிக்கப்பட்டு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகானந்தம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் டி.ஆர்ஓ., லா வண்யா, தேர்தல் தனி தாசில்தார் ஹென்றி பீட்டர் மற்றும் வருவாய் தாசில் தார்கள், தேர்தல் தனித் துணை தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
- முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி,
மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் 3 வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
- மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.
செங்கோட்டை:
மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்று பேசினார். தொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
700 வாகனங்கள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் குடும்பத்துடன் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. எனவே அன்று அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூருக்கும் ஒதுக்கப் பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வர வேண்டும். வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
குடிநீர் வசதி
ஒவ்வொரு வாகனத் திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப் பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருசேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து மீண்டும் ஊருக்கு பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். மாநாட்டை வெற்றி அடைய செய்து அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே. முருகன், பரமேஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது.
மதுரை
அ.தி.மு.க மாநாட்டு வளாகத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடைபெறும் அதி.மு.க மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களும் பொது மக்களும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலையில் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாடு இதுவரை யில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. நடத்தும் இந்த மாநாட்டை கண்டு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருப்பது மலை யோடு மோதுவது போன்றதாகும்.
நீட் தேர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிய தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது. அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.
குறிப்பாக பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராணுவ சிப்பாய்களாக பங்கேற்போம் என ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர்
ஆர். பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது-
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் மதுரை மாநகரில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வெகு விமரிசையாக நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் தலைமை தாங்கி மாநாட்டை தொ டங்கி வைத்து மாநாட்டில் வீர உரையாற்றுகிறார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர், நகரம் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி கூட்டுறவு பிரதிநிதிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன். மாநாட்டில் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளும் ராணுவ கட்டுப் பாடுடன் ராணுவ சிப்பாய்களாக பணியாற்றி சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குண்டல்பட்டி, பழைய தருமபுரி வழியாக வந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டத்திற்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சக்திவேல், மாதையன், முன்னா, நாகராஜன், நாகேந்திரன், கார்த்தி, மாதேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
மதுரையில் வருகிற 20ம் தேதி அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று மாநாடு நடைபெறும் நாள் அன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த வெற்றி ஜோதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, குண்டல்பட்டி, பழைய தருமபுரி வழியாக வந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டத்திற்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 ரோட்டில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏக்கள் கோவிந்த சாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். இந்த தொடர் ஓட்டம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு, இலக்கியம்பட்டி, கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி வழியாக தொப்பூர் சென்ற டைந்தது.
அங்கு இந்த வெற்றி ஜோதி சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்ல தம்பி, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், செந்தில்குமார், கோபால், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர பொருளாளர் பார்த்திபன், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், முன்னா, நாகராஜன், நாகேந்திரன், கார்த்தி, மாதேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.
- மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை:
உவரி அருகே நவ்வலடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் வீடுகளுக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பாடங்களையும், போதனைகளையும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கல்வித்துறை முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர் மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் ஊர்வலமாக நடந்து சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வள்ளியூர் அருண்குமார், வள்ளியூர் பேரூர் கழக துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் ஆவுடை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
- மாநாட்டிற்காக உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. வரலாற்றின் எழுச்சி மாநாடு வரும் 20-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்காக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்