என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வனப்பகுதி"
- நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.
கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.
மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.
முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
டிஎன்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.
இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
அருகே வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து ஏராளமான குரங்குகள் இந்த இடத்தில் நமக்கு ஏதாவது உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா? என வந்து செல்லும்.
இதை கண்ட ராமலிங்கம் அந்த குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க எண்ணினார்.
குரங்குகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கி வந்த ராமலிங்கத்திடம் குரங்குகள் அன்பாக பழக தொடங்கியது. அவரும் குரங்குகளுக்கு தோழனாகி விட்டார்.
தண்ணீர் மட்டும் வழங்கி வந்த ராமலிங்கம் பிறகு தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்ற உணவுகளையும் வழங்கி வருகிறார்.
மேலும் அந்த குரங்குகள் விளையாட ஊஞ்சலும் கட்டி உள்ளார். உணவை ருசித்த குரங்குகள் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி உற்சாகமாக விளையாடுகிறது.
தினமும் அங்கு 20 குரங்குகள் வருகிறது. ராமலிங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அவரது தோளில் உரிமையுடன் உட்கார்ந்து அவர் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது.
இந்த அபூர்வ காட்சி தினமும் நடந்து வருகிறது. #monkeys
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.
வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.
இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.
விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.
இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியையொட்டிய வனப்பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன.
இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் உள்ளதா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்