search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுன்"

    வெள்ளகோவில் அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38) இவர் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன், வெள்ளகோவிலில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு முருகேசன் தனது ஒர்க்‌ஷாப்புக்கு சென்றுவிட்டார்.

    இவரது மனைவி மகாதேவி குழந்தையுடன் கோவிலுக்கு சென்று விட்டார். ஒர்க்‌ஷாப் வேலை முடிந்து மாலை 3 மணிக்கு முருகேசன் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டின் கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் உள்ளே சென்றுபார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 2 பவுன் வளையல், ½ பவுன் மோதிரம், ½ பவுன் தங்க காசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

    வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், யாரோ மர்ம ஆசாமி வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து கதவு பூட்டை நெம்பி திறந்து உள்ளே சென்று, பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அங்கு இருந்த பணம், நகை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தான் கூட்டுறவு வங்கியில் ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்துடன் ரூ.15 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சத்தை பீரோவில் வைத்திருந்ததாக முருகேசன் கூறினார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
    தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கமலா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலா, குழந்தைகளுடன் அரியலூர் தாலுகாவிற்குட்பட்ட குந்தபுரத்தில் உள்ள தனது அக்காள் சித்ரா குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கமலா, சித்ரா குடும்பத்தினருடன் சேர்ந்து தூங்க சென்றார். அப்போது அவர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மர்மநபர்கள் சித்ரா வீட்டிற்குள் திடீரென்று புகுந்தனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கமலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர்.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த கமலா சங்கிலியை கையில் பிடித்து கொண்டு திருடன், திருடன்... என சத்தம் போட்டார். ஆனாலும் மர்மநபர்கள் விடாமல் சங்கிலியை பிடித்து இழுத்தலில், சங்கிலி மர்மநபர்கள் கையில் சிக்கியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து கமலா, அவரது சகோதரி சித்ரா, அவருடைய கணவர் நல்லதம்பி ஆகியோர் மர்மநபர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் வயல் பகுதி வழியாக மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து கமலா திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
    பெரம்பலூரில் தலைமை ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு போனது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கமலாதேவி (வயது 52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். கமலாதேவி பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கணவர் சந்திரசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், கமலாதேவி தான் பணிபுரியும் பள்ளி அருகே உள்ள கட்டிடத்தின் முதல்தளத்தில் வாடகைக்கு தனியாக வசித்து வருகிறார்.



    இந்த நிலையில் கமலாதேவி நேற்று முன்தினம் காலை வீட்டிலும், மதியம் பள்ளியிலும் ஆயுத பூஜையை முடித்து விட்டு, தொடர் பள்ளி விடுமுறையினால் திருச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கமலாதேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதே கட்டிடத்தில் தரைத்தளத்தில் குழந்தைகளுக்கான உணவு பொருட் களை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யும் துரைராஜ்(41) என்பவரின் கடையின் வெளிப்பக்க பூட்டும் உடைக்கப்பட்டு, கடைக்கு உள்ளே நுழைவு வாயிற் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினர் இதுகுறித்து கமலா தேவிக்கும், துரைராஜுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிபோய் திருச்சியில் இருந்து உடனடியாக கமலாதேவி புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். இதைபோல் துரைராஜும் கடைக்கு வந்தார். கமலாதேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டும், அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து கமலாதேவி அதிர்ச்சி அடைந்தார். லாக்கரில் இருந்த ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்கள் வைத் திருந்ததாகவும், அவைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    தரைத்தளத்தில் உள்ள கடையில் ஏதும் திருட்டு போகவில்லை. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கமலாதேவி தொடர் பள்ளி விடுமுறையினால் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவின் லாக்கரை கம்பியால் நெம்பி, அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், ரொக்கத்தை திருடி சென்றுள்ளதாகவும், தரைத்தளத்தில் உள்ள கடையில் பணம் ஏதும் வைக்கப் படாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வலங்கைமானில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவருடைய மனைவி மங்கையர்கரசி. சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கையர்கரசி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப்படை போலீசார் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    வீட்டின் ஓட்டை பிரித்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக போலீசில் விசாரணை செய்து வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜரெத்தினம் மனைவி தேவசுந்தரி (வயது54). ராஜரெத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டார். தேவசுந்தரியின் மகன் மற்றும் மகள் வெளியூர்களில் உள்ளனர். இதனால் தேவசுந்தரி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தேவசுந்தரி வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு மதியம் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தன.மேலும் தேவசுந்தரி வீட்டிற்குள் பெட்டியில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே இறங்கி 6 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டதாக தேவசுந்தரி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமிஅம்மாள் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு உதவியாக பொன்செல்வி (40) என்பவர் உடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில், ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். மற்ற 2 பேர், வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் லட்சுமி அம்மாளையும், பொன்செல்வியையும் தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டினர்.

    மேலும் அவர்கள் அணிந்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் லட்சுமி அம்மாள் புகார் செய்தார். அதன் பேரில், பெண்களை தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை எழில்நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை எழில் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 79). ஓய்வு பெற்ற ஆசிரியரான, இவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். மேலும் சுகுமாரின் மனைவி இறந்து விட்டதால், எழில்நகரில் உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டுப்போட்டு பூட்டி விட்டு, தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சுகுமார் சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று காலையில் சுகுமாரின் மூத்த மருமகன் மனோஜ் சசிக்குமார், எழில்நகரில் உள்ள தனது மாமனார் சுகுமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது, வீட்டின் ஒரு அறையில் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்த 17 பவுன்நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சுகுமாருக்கும், புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கும் மனோஜ் சசிக்குமார் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடங்களை சேகரிக்கப்பட்டது.. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 17 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் எழில்நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
    பனப்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் பீரோ லாக்கரை உடைத்து 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
    பனப்பாக்கம்:

    பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 60). ரியல் எஸ்டேட் தரகராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். மகள் சரண்யா பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மனைவி இறந்தபின் மகள் சரண்யாவுடன் அசோக் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி சரண்யா வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

    அசோக் வீட்டை பூட்டிவிட்டு பனப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்றார். மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்து சரண்யா வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தனது தந்தை அசோக்கிற்கு போனில் தெரிவித்தார். அவரும் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அசோக் புகார் அளித்தார். அதன்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமேதா திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
    ஆரணி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37), ஆரணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரமேஷ் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்கம் உள்ள கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    முத்துப்பேட்டை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம், டி.வி. ஆகியவற்றை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது45). இவர் நேற்று காலை குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அறிவழகன் வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த
    டி.வி. திருட்டு போய் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மற்ற பொருட்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து அறிவழகன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருடைய தந்தை தெட்சிணாமூர்த்தி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதி சாலையில் கடந்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்தநிலையில் விசேஷங்கள் முடிந்து நேற்று காலை சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் பணம், பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சுரேஷ் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

    கோட்டூர் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்- ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். #Robbery
    கோட்டூர்:

    கோட்டூர் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்-ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காசன்குளம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கணேசன்(வயது 52). இவர், சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர், திருராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை 9 மணியளவில் கணேசனும் அவருடைய மனைவியும் தங்களது வீட்டை பூட்டி விட்டு தங்கள் மகன் படிக்கும் பள்ளியில் அவனை கொண்டு சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து தங்களது பள்ளிக்கு பணிக்கு சென்று விட்டனர்.

    ஆசிரியர் தம்பதியினர் தினமும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். இதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தனர். நேற்று வழக்கம்போல் ஆசிரியர் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டதை தெரிந்து கொண்டதும் மர்ம நபர்கள் கணேசன் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

    அங்கு வந்த அவர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

    நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்த கணேசனும், அவருடைய மனைவியும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அருகே உள்ள பாலம் வரை ஓடி சென்று நின்று விட்டது.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்-ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கோட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரசா என்கிற சரஸ்வதி (வயது 55). இவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராதாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், பட்டு சேலைகள், வெள்ளி கிண்ணம் மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பாபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×