search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரம் உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க உள்ளது.
    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 431 மனுக்கள் பெறப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 431 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
    • ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்ட த்தில், பொது மக்கள் பட்டாமாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 163 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்க ளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்தினாளிகளுக்கு சுயதொழில் வங்கி கடன் மானியம் ரூ.178334 மற்றும் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.2780 மதிப்பிலான காதொலி கருவி என மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு கொடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பா.ஜ.க. கிளைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர்.

    அவர் மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியூர் சென்றார் . அப்போது அவர் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகனின் இறப்புக்கு நிவாரணம் கோரி முனியாண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் மனு கொடுத்தார். அந்தமனு விசாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும் படி பரிந்துரைக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் முனியாண்டி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்த கோரிக்கை
    • கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான செ.சுகுமார், மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, விடுதிக்கு வந்து சுடுநீரில் குளிப்பது அல்லது கைகால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது வழக்கம். இதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதில், அரியலூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மட்டும் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்கள் விடுதியில் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், அக்கல்லூரி முதன்மையர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவ மனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் சுமார் 391 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.   தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.5,350 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.2,14,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 6 கல்லூரி மற்றும் 29 பள்ளி விடுதி என மொத்தம் 35 விடுதி மாணவர்களிடையே நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.  முன்னதாக, திண்டிவனம் தாசில்தார் வெங்கட சுப்பரமணி சாலை விபத்தில் உயிரிழந்ததையொட்டி, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, தனித்துனை கலெக்டர் விஸ்வநாதன், கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மதுரை

    மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 7- வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில கூட்டமைப்பு சார்பில், 3 கட்ட போராட்டங்கள் நடத்த அறிவித்துள்ளனர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். அதே நேரம், தங்களது கோரிக்கை யை மனுவாக தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களிடமும் வழங்க திட்டமிட்டனர்.

    இதன்படி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், விஜயமனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி சாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி ஆகியோரிடம் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு வழங்கினர்.

    • மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்
    • மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் கடலூர் வருவாய் கோட்டத்தில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் 3 சக்கர மோட்டார் சைக்கிள், வங்கி கடன், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்.

    இதனை தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரகாஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, மண்டல துணை தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
    • வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

    இதில் முருகேசன், ரங்கசாமி, சக்திவேல், பராசக்தி, ராணி, சுந்தர், சண்முகம்,சண்முகம், சிவராஜ், சுப்ரமணி, அருண்குமார், துரைசாமி, பாஸ்கர் முருகேசன், சந்திரசேகரன், பழனிசாமி, பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த, 2006-க்கு முன் ராணுவத்தில் ஓய்வு பெற்ற ஜூனியர் கமிஷன் அலுவலர்களுக்கு இந்த பென்ஷன் சலுகைகள் கிடைப்பதில்லை.
    • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலுவைத்தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பினர் கேப்டன் கிருஷ்ணன் தலைமையில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் இந்திய ராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதில், நாடு முழுவதும், 32 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள். இதில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணை, ஏழு, எட்டு பத்திகளில் தளர்வுகள் அளித்து அனைத்து ஓய்வூதி யர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும். மேலும் ராணுவ சேவை ஊதியமானது அதிகாரிகள், அலுவலர்கள், வீரர்க்களுக்கு வழங்குவதில் மாறுபாடு உள்ளது இதையும் நீக்க வேண்டும். பணியில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் மற்றவர்களை போல் பென்ஷன் வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் இறந்த நிலையில் வழங்கப்படும் விதவை பென்ஷனில், அடிப்படை ஊதியத்தில், 60 சதவீதம் வழங்க வேண்டும். கடந்த, 2006-க்கு முன் ராணுவத்தில் ஓய்வு பெற்ற ஜூனியர் கமிஷன் அலுவலர்களுக்கு இந்த பென்ஷன் சலுகைகள் கிடைப்பதில்லை. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலுவைத்தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரகாஷ், மாதவன், ஆறுமுகம், சுபேதார் சடகோபன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
    • பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை.

    கிருஷ்ணகிரி,

    சூளகிரி துப்புகானப்பள்ளியை அடுத்த டி.குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சலகிரி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது. ஆனால் அந்த பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் எங்களுக்கு மயான வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறோம். இது குறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×