என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பசுமாடு"
- பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது.
- இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ளது பிதாத்வாத் கிராமம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கோவர்தன் பூஜை நடத்துவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடவுள் கிருஷ்ணருக்காக நடத்தப்படும் இந்த பூஜையில் மக்கள் தரையில் படுத்து, தங்கள் மீது பசு மாடுகளை ஓடவிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது. அப்போது பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்படி இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
- கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
- நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.
*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.
*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.
*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.
*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.
*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உண விற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது இன்னும் மேன்மை தரும்.
- நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
- பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
குழந்தை பாக்கியம் பெற
கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன.
கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.
திருமணம் நடைபெற
நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத் தரும்.
ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
வியாதி நீங்க:
ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது.
செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது.
சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும்.
இந்தக் கோபூஜையினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம் தீர:
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.
சனிபகவான் தோஷம் விலக
சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும்.
இத்தகு அதி விசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.
- பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜானகி (வயது55). இவரது 3 பசுமாடுகள் நேற்று மாலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தபோது. அப்பகுதியில் கிடந்த மர்மபொருள் ஒன்றினை மாடுகள் கவ்வியபோது அந்த மர்ம பொருள் வெடித்தது.
இதில் ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் பசு மாடு வாய் கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகளை சமூகவிரோதிகள் சிலர் இதுபோல வெடி வைத்து வேட்டையாடுவதாக அப்பகுதிபொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அது வெடித்ததில் பசு மாடு வாய் கிழிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
- அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
- நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.
தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.
உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.
- கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
- சீர்காழியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடு 10 அடி பள்ளத்தில் விழுந்தது.
மயிலாடுதுறை:
சீர்காழி சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.
இவரது பசுமாட்டை காலை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் கீழத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு விழுந்தது.
10அடி பள்ளத்தில் விழுந்த மாட்டின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தனர்.
பின்னர் தொட்டியில் விழுந்த பசு மாட்டினை மீட்க சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை மீட்க முயன்றனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்.
பசு மாட்டை கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது.
மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
- பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
- சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.
- பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித் திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52), விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி மீது பசுமாடு ஒன்று சென்றபோது மூடி உடைந்து 12 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் எந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றி பொக்லைன் எந்திரம் மூலம் பசுமாட்டை கயிறு கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
- கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
- எதிர்பாராத விதமாக 5 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு சொந்தமான பசு மாட்டை அதே பகுதியில் உள்ள அசோகன் என்பவருடைய வயலில் உள்ள தரிசு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 15 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. இதனை பார்த்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் பிணைத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பசு மாட்டினை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர்.
- பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை
எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் வேடசந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி (38) மற்றும் அவரது மனைவி சத்யா (34) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்