search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    இவர்கள் ஓட்டு போடுவதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டது.

    ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் ஓட்டுகளை அனுப்பி விட்டனர். ஆனால் இன்னும் சில ஊழியர்கள் தபால் ஓட்டை போடாமல் கையில் வைத்துள்ளனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23-ந்தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.

    இதற்காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக்கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #BSNL
    சென்னை:

    மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கின்ற வசதிகள் பி.எஸ்.என்.எல்.-ல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.

    நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நிறுவனத்திற்கு இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படாததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் (ஏ.யூ. ஏ.பி.) சார்பாக நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.

    20-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த ஸ்டிரைக்கில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    நலிவடைந்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இதில் 1,800 பேர் அதிகாரிகள் ஆவார்கள்.

    ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டன. ஒருசில இடங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    சென்னையில் பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் செயல்படவில்லை. இண்டர் நெட் இணைப்பு, ப்ரீ பெய்டு, போஸ்ட்பெய்டு புதிய இணைப்பு மற்றும் பில் தொகை வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

    நெட்ஒர்க் பிரச்சனை எதுவும் ஏற்பட தற்போது வாய்ப்பு இல்லை. டெலிபோன் செயல்பாட்டிலும் எந்த இடையூறும் இருக்காது என்றாலும் டெலிபோன் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஊழியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

    வாடிக்கையாளர்கள் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. மற்றபடி செல்போன், டெலி சேவையில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போராட்டம் குறித்து ஏ.யூ.ஏபி. தொழிற்சங்க தலைவர் சண்முகசுந்தர ராஜன் கூறியதாவது:-

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நலிவடைய செய்து அதனை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதற்காக மறைமுகமான வேலைகளை செய்து வருகிறது. பி.எஸ்.என்.எல். வளர்ச்சியை தடை செய்து அதனை முழுமையாக தனியாருக்கு கொடுப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது. தனியாருக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் போது பி.எஸ்.என்.எல்.-க்கு ஏன் தாமதப்படுத்த வேண்டும்? இதன்மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறி செல்ல ஊக்குவிக்கிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும். இன்று அதிகாலையில் இருந்தே வேலைநிறுத்தம் தொடங்கி விட்டது. அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. சேவை மயங்களும் செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BSNL
    2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக மறியல் செய்தனர்.

    திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர். எம்.ஜி.ஆர். சிலை முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோ‌ஷம் போட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 4 ஆயிரம் பேரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இதே போல் தேனி நேரு சிலை முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலுக்கு முயன்றனர். சுமார் 2, 500 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜேக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதனால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி காணப்பட்டது. ஒரு சில அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்குமார், ஸ்ரீதர், அருணாசலம், இன்னாசி முத்து, மைக்கேல்ராஜ், சாமிநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். முன்னதாக மறியல் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று மாவட்டம் முழுவதில் இருந்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்- பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து 5 திருமண மண்டபங்களில் அடைத்தனர். #tamilnews
    ரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

    போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.   #RafaleDeal #HAL #RahulGandhi 
    ஊதியம் வழங்காத தனியார் சிமெண்டு தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மருதையான் கோவில் அருகே ஜேப்பியார் என்கிற பெயரில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை உள்ளது. இந்த சிமெண்டு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், 14 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகை வைப்பு நிதியில் தொகை செலுத்தப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், வழங்கவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் சிமெண்டு தொழிற்சாலை அலுவலக ஊழியர்கள் 13 பேரை வெளியே போக விடாமல், உள்ளே சிறை பிடித்து தொழிற்சாலை வளாக நுழைவு வாயிலில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை தொடங்கினர்.

    அப்போது அவர்கள் கடந்த 8 மாதங்களாக வேலை இழந்து தவித்து வருவதாகவும், ஆகவே, ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் ஜேப்பியார் தொழிற்சங்க தலைவர் அறிவழகன் தலைமையில் நடந்து வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    திருவள்ளூரில் புதிய டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை உடைத்து 2 ஊழியர்களை தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதற்கு பெரியகுப்பம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாவர் என கூறினார்கள்.

    இதனால் இந்த கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று இந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கபட்டது.

    இதையடுத்து பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிலர் கடைக்கு சென்று விற்பனையாளர்கள் ஆனந்த், பாபு ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். வேலை செய்யவிடாமல் தடுத்து கடையில் இருந்த மதுபான பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    எம்.எல்.ஏ. அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உட்பட பல்நோக்கு ஊழியர்கள் அனைவரையும் மழை நிவாரண பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #KiranBedi #PondicherryGovernor

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று நீர்நிலைகளை ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தர விட்டு வருகிறார்.

    அதன்படி கவர்னர் மாளிகையின் சார்பில் 204-வது வார இறுதிநாள் ஆய்வு இன்று நடந்தது. கவர்னர் கிரண்பேடி, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளோடு நகர பகுதியில் ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் உதவியுடன் நகரில் உள்ள 4 வாய்க்கால்களை தலா ரூ.7 லட்சம் செலவில் சீரமைக்க கவர்னர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

    நகர பகுதியில் உள்ள பெரியவாய்க்கால், சின்ன வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் நிதியளித்தும் பணியை மேற்கொள்ள பொதுப் பணித்துறையின் பல்நோக்கு ஊழியர்கள் அங்கு இல்லாததை கண்டு கவர்னர் கோபம் அடைந்தார்.

    பருவமழைக்காலம் முடியும்வரை பல்நோக்கு ஊழியர்களை காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 10 மணி வரையும் 2 ஷிப்ட் முறையில் பணி செய்ய வைக்கும்படி பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியருக்கு உத்தரவிட்டார்.


    அப்போது பல்நோக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஊழியர்கள் சாலை பணி, நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணி, சட்டமன்ற அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை ஏற்க மறுத்த கவர்னர் கிரண்பேடி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் உள்ள அனைத்து பல்நோக்கு ஊழியர்களையும் உடனடியாக துறைக்கு திரும்ப அழைக்கும்படியும், பருவமழைக்காலம் முடியும் வரை அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதன்பின் மாற்று பணிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

    மேலும் வாய்க்கால் துப்புரவு பணியை செய்யாமல் காலம் கடத்தும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறும்போது, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டியது அவசியம். இதை செய்தால் மழை பாதிப்பு இருக்காது. நிவாரண நிதியும் வீணாகாது என்றார். #KiranBedi #PondicherryGovernor

    பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma
    நொய்டா:

    பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம்-ஐ நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி அருகே நொய்டாவில் உள்ளது.

    அதில், அதிபரின் செயலாளராக பணியாற்றும் ஒரு பெண், தன் கணவர் ரூபக் ஜெயின், சக ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து அதிபரின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக்கொண்டு, அவரை பிளாக்மெயில் செய்தனர்.

    அந்த தகவல்களை வெளியிட்டால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நற்பெயர் கெட்டுப்போகும் என்றும் எனவே, வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ரூ.20 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டி வந்தனர். இதுபற்றி நொய்டா போலீசில் விஜய் சேகர் சர்மா புகார் செய்தார்.

    அதன்பேரில், அந்த பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 4-வது நபரான ரோகித் சோமல் என்பவனை தேடி வருகிறார்கள்.  #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma 
    கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் பங்குகளில் 3 ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற கும்பலை கண்காணிப்பு காமிரா காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் பிரிவில் ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பணியில் இருந்த ஒண்டிப்புதூரை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பங்கில் தூங்கிக் கொண்டு இருந்த ஊழியர்கள் எழுந்து ஓடி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் தேவராஜனை கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.இதைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் கருமத்தம்பட்டியில் உள்ள சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் சென்றனர். அங்கு பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார் மற்றும் தீரன் குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அவர்களிடம் இருந்த பணப் பையை பறித்து சென்றனர். காயமடைந்த தேவராஜ், பங்கஜ்குமார் , தீரன் குமார் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து ஊழியர்களை குத்தி விட்டு பணப்பையை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கேரள பதிவு எண் கொண்டதாக இருந்தது. எனவே கொள்ளையர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சேலம் அரசு மருத்துவமனையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை ஊழியர்கள் சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் மேரி (வயது 67). இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் மேரி சேலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ஆஸ்துமா நோய் அதிகமானது. இதையடுத்து அவரை உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நேற்று நள்ளிரவில் மேரி கடுமையாக இருமினார். அவர் விடாமல் இருமி கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த ஊழியர்கள் மேரியை தூக்கிக் கொண்டு சென்று மகப்பேறு பிரிவு அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றனர்.

    இதனால் இரவு முழுவதும் அவர் கதறி அழுதபடி இருந்தார். இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த பொது மக்கள் மேரியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தவர்களிடம் எப்படி நோயாளியை வெளியில் தூக்கி வீசலாம் என்று கேட்டு சண்டை போட்டனர். இதையடுத்து மேரியை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய ஊழியர்கள் யார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அமராவதி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், நான்கு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அரசுக்கு சொந்தமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு 50 அலுவலக ஊழியர்கள் 250 தொழிலாளர்கள் மற்றும் 70 தற்காலிக தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டும் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் சம்பளம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கறுப்பு பேஜ் அணிந்து வேலை செய்தல், அலுவலகம் முன்பு தர்ணா, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினர்.

    தொடர்ந்து இன்று தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர். இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படவில்லை என்றால் உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டடம் நடத்துவோம் என்று போராட்ட கூட்டுக்குழு கூறினர்.

    டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    ×