என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துப்பாக்கி"
டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் முக்கியமானது காசியாபாத் ரெயில் நிலையம் ஆகும். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். #DelhiMetroStation #PistonBullet
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி, அவனை அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு வீடியோவை சமூக வலைத்தளங்களில் நேரலையில் பரப்பிய குற்றச்சாட்டில் 18 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். துப்பாக்கிச்சூடு வீடியோவை பரப்பியது மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்களுடன் மசூதியின் புகைப்படங்களை வெளியிட்டது என 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அடுத்த மாதம் 8-ந் தேதி மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள புனித தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 55 மில்லியன் (சுமார் ரூ.377 கோடி) டாலர் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமதாரர்கள் தங்கள் வசம் உள்ள ரிவால்வர், பிஸ்டல், ரைபிள், தோட்டா ரக துப்பாக்கி முதலான அனைத்து ரக துப்பாக்கிகளையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு படைக்கலன்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். 7 நாட்களுக்குள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க தவறும் உரிமதாரர்கள் மீது படைக்கல சட்டம் மற்றும் விதிகளின்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று கோவை வந்த இவர் இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அவர் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் இருந்து சத்தம் கேட்டது.சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 5 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ஜெயதுரையிடம் விசாரித்தனர்.
கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக லைசென்சு தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் தவறுதலாக தோட்டாக்களை சூட்கேசில் எடுத்து வந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி லைசென்சுக்கான ஜெராக்சை காட்டினார். ஒரிஜனல் லைசென்சை இன்று கொண்டு வந்து காட்டுவதாக கூறினார். அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். #DMK
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு சீட் பிடித்தனர். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்ய 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தார்.
இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ்களில் சீட் பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச்சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். போலீசார் இந்த செயலை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினர்.
போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12-ம் நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது.
இந்த வரிசை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி 12 மணிநேர கடையடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது.
பூரி ஜகநாதர் ஆலயத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தகர்த்தபடி பலர் ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர்ம் தீபக் குப்தா ஆகியோர் பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் போலீசார் நுழைய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். #PuriJagannathtemple #SC #PolicemanShoes
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை செல்லும் வழியில் வனப்பகுதியில் குரங்குநாட்டு ஓடை உள்ளது. இங்கு உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் தனியார் நிலத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதுகுறித்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மகும்பல் பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கி என்று தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, ஒரு கும்பல் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியது. அந்த கும்பல் நாட்டு துப்பாக்கியை காட்டி வனத்துறையினரை மிரட்டி, சந்தன மரங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டது. அவ்வாறு மர்ம கும்பல் தப்பிச் செல்லும் போதும் நாட்டு துப்பாக்கியை போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செங்கோட்டை முத்தழகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முஸ்தபா(வயது 47), புளியரை புதுகாலனி தெருவை சேர்ந்த கருப்பசாமி(30), புளியரை வாட்டர்டேங் தெருவை சேர்ந்த சுரேஷ், புளியரை வடக்கு தெருவை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி, கற்குடியை சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 5 பேரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக பயன்படுத்த வைத்து இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு துப்பாக்கி தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டன்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருமலைராயபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சந்தேகப்படும் படியாக காணப்பட்டனர்.
உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் எல்லை கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 35). ரமேஷ் (28) என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் அதில் பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எனினும் இந்த துப்பாக்கிகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது. இதனை சப்ளை செய்தது யார்? எதற்காக இவர்கள் துப்பாக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீகார் மாநிலம் பிடாபூர் மாவட்டம் வைசாலி பகுதியை சேர்ந்தவர் சரண்.
என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா குமாரியை திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக சரணை கடத்தினர். சரணும், அவரது நண்பர் சவுரவ்சும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பிரியங்காவின் உறவினர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றனர். 12 முதல் 15 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
சரண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தாயார் வீனா தேவி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சரணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பிரியங்கா தந்தை அரவிந்த்ராய் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.
துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்