search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121412"

    காஞ்சிபுரத்தில் சோமஸ்கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன்மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.

    இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடுகள் நடந்ததாக பக்தர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலையினை ஆய்வு செய்து அதில் கடுகளவு தங்கம் கூட கலக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

    அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இதில் பழைய சிலையினை வைத்து வீதி உலா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    ஆனால் விழாவையொட்டி நேற்று சுவாமி திருவீதி உலா வரவில்லை. இதனால் பழைய சிலையினை சீரமைக்க அறநிலையத்துறையினர் தாமதம் செய்வதாக பக்தர்கள் கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாமல்லபுரத்தில் இருந்து ஸ்தபதி குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்கள் முன்னிலையில் பழைய சோமஸ்கந்தர் சிலையை சீரமைத்தனர். ஏற்கனவே சிலைக்கு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்து இருந்தது.

    நேற்று காலை கோவிலுக்கு வந்த பொன்.மாணிக்கவேல் சிலை சீரமைப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது பழைய சிலையினை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாளை (இன்று) முதல் பழைய சிலை வீதி உலா நடைபெறும்.

    ஒரு ஏ.டி.எஸ்.பி. மற்றும் 30 பேர் கொண்ட எனது தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்” என்றார்.

    இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் கூறும்போது, “கோர்ட் உத்தரவுப்படி முறையாக சிலையினை சீரமைக்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது” என்றார்.

    கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது சுவாமிகள் நகரில் உள்ள 4 ராஜவீதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். 3-ம் நாள் திருவிழாவில் நேற்று மட்டும் உற்சவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் எழுந்தருள்வார். ஆனால் 3ம் நாள் திருவிழாவான நேற்று சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சுவாமி வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    பூண்டி ஏரி ரூ.258 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #PondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதன் உயரம் 35 அடி.

    3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 760 சதுர மைல் நீர்வரத்து பரப்பளவு கொண்ட ஏரியில் 16 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி நீளம் கொண்ட இரும்பு ‌ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

    ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.

    மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.

    பூண்டி ஏரி சுமார் 40 வருடங்களாக தூர் வாரப்படாததால் தான் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக வெளியேறி விடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பேய் மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இப்படி 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி.

    மேலும் பூண்டி ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தங்கு தடையின்றி நிலத்தடி நீர் கிடைக்கும். ஏரியை தூர் வாராததால் மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது.

    இதனை தவிர்க்க பூண்டி ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ. 258 கோடி மதிப்பீட்டில் பூண்டி ஏரி தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து பூண்டி ஏரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அவர்கள் பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கந்தசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எத்திராஜ், பொதுக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், இணைச் செயலாளர் கோவிந்தராஜன், இளைஞர் அணிச் செயலாளர் சீனிவாசன், கிளைச் செயலாளர் ராஜசேகர், பூண்டி விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் புல்லரம்பாக்கம், தலையஞ்சேரி, ஈக்காடு, தண்ணீர்குளம், சிறுகடல் வரை பாய்ந்து செல்கிறது. அங்குள்ள மதகு வழியாக புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் இனைப்பு கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த கால்வாய்க்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கண்டலேறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தால் பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர். இந்த தண்ணீர் தங்கு தடையின்றி புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்றடைய ஏதுவாக கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. #PondiLake

    கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை இந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 25&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ்  WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு சார்பில் விண்ணப்பங்கள் அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    எனவே தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், பாளையம் அண்ணா நகரில் உள்ள 3 தெருக்களில் போக்குவரத்துக்காக 3 பாலங்கள் இருந்தன.

    தற்போது கழிவுநீர் செல்வதற்காக பாலங்களை இடித்து விட்டு கால்வாய் கட்டி விட்டனர். ஆனால் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் கழிவுநீர் செல்ல வசதியும், காவிரி கூட்டு குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக குரும்பலூர் பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாளையம் அண்ணா நகரில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவும், காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் புவனேந்திரன் மற்றும் அதன் நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மோகனூர் அல்லது ஈரோட்டில் இருந்து காவிரி நீரை நாமக்கல், தா.பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூர் லாடபுரம் ஏரிக்கு கொண்டு வந்தால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த காவிரி நீரை மருதையாற்றுடன் இணைத்தால் கொட்டரை, ஆதனூர் அணை வரை தண்ணீர் செல்லும். இதனால் பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையும் முழுமையாக தீர்ந்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள கத்துக்குளத்திற்கு கிராம மக்கள் செலவில் புதிதாக வெட்டிய வரத்து வாய்க்காலை ஒதியம் மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வரைபட கணக்கில் அளந்து கணக்கில் சேர்க்க வேண்டும். பழைய வரத்து வாய்க்காலை சில பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பினை அகற்றி பழைய வரத்து வாய்க்காலை கிராம மக்கள் சார்பில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாடாலூர் அ.தி.மு.க.வினர் சார்பில் கொடுத்த மனுவில், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சி பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான ஆயத்த பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. ஜவுளி பூங்கா அமையவுள்ள நிலத்தை சிப்காட் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பஞ்சாயத்து மூலம் ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அணுகுசாலையும் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க தொழில் முனைவோர்கள் முன்வந்துள்ளனர். இதன் மூலம் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட ஜவுளி பூங்காவை விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    சிறுபாக்கம் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

    அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Mukkombu
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த பகுதியை கலெக்டர் ராசாமணி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் பகுதியில் கொள்ளிடத்தில் உள்ள 6 முதல் 13 வரையிலான தூண்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அணையின் 9 மதகு சட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ளது. முக்கொம்பை பொறுத்த வரை காவிரியில் 41 மதகுகளும், கொள்ளிடத்தில் இரு பிரிவாக 45 ‌ஷட்டர்களும் உள்ளன. அவற்றில் 10 ‌ஷட்டர்கள் உறுதியாக உள்ளது. மற்ற சட்டர்களின் ஸ்திர தன்மை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூரில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு முக்கொம்பிற்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

    கொள்ளிடம் அணை உடைந்துள்ளதால் வெள்ள பாதிப்புகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படாது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் காவிரி வழியாக தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    கொள்ளிடத்தை பொறுத்தவரை ஆற்றில் கூடுதலாக வரும் உபரி நீர் மட்டுமே திறந்து விட பயன்படுத்தப்படும். தற்போது அணை இடிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொள்ளிடம் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.

    உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mukkombu
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நூர்சாகிபுரம் ரெயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    இந்தப்பணியின் போது, காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    ரெயில்வே சுரங்கப்பணி தொடங்கும் போது மாற்றுப்பாதை அமைக்காமல் விட்டதால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் குடி தண்ணீர் குழாயும் உடைந்து கிடைக்காமல் போனதால் பெரும் இன்னலுக்கு மேற்கண்ட கிராமத்தினர் ஆளாகி உள்ளனர்.

    எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் காலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேற்கு புறம் உள்ள ரெயில்வே மழை நீர் கடக்கு சிறிய பாலம் வழியாக குழாயை கொண்டு சென்று குடிதண்ணீர் வழங்கவும், மாற்றுப்பாதை அமைத்து பள்ளி நேரங்களிலாவது அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ரூ.5 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமரா, சோலார் மின் வசதியுடன் தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா சீரமைத்து திறக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா, ரூ.5.2 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. வெங்கட் நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்கா குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காக்களில் நடைபயிற்சி செல்ல நவீன நடைபாதைகள், சிறுவர் விளையாட்டுத் திடல், கிரானைட் இருக்கைகள், மின்வசதி, பசுமை புல் தரை, மரக்கன்றுகள், நிழல் கூடாரம், அமைக்கப்பட்டுள்ளது.

    குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் பூங்காவில் சி.சி.டி.வி. கேமராக்கள், சோலார் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜ் பாயிண்ட்கள், திறந்த வெளி உடற்பயிற்சி தளம், கூழாங்கற்கள் நடை பாதை, இயற்கை கருங்கல் நடைபாதை, செயற்கை நீருற்று, அலங்கார மின் விளக்குகள், இறகு பந்து மைதானம், புல்தரை செயற்கை குன்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்காக சிறப்பு நடைபாதை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    பொது மக்கள் பயன்பாட்டுக்காக மறுசீரமைக்கப்பட்ட இந்த 2 பூங்காக்களை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திறந்து வைத்தனர். 50 ஆயிரம் பேர் இந்த பூங்காவினால் தினமும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×