search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர்"

    • பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 10 நக்சலைட் உடல்கள் மீட்பு.
    • ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெஜ்ஜி காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர்.

    கோன்டா மற்றும் கிஸ்தாரம் பகுதியில் உள்ள கேராஜ்குடா, தந்தேஸ்புரம், நகராம், பந்தர்பாதர் கிராமங்களில் நடைபெற்ற சண்டையில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    கொல்ல நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாவட்ட ரிசர்வ் காவலர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 207 நக்சலைட் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    • 5 பேர் கொண்ட நக்சலைட் குழு உணவு பொருட்கள் வாங்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்.
    • துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்.

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர்.

    இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்.
    • பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும் இடத்தை நெருங்கும்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டததில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கண்டறிந்தனர். அந்த இடத்தை நெருங்கும்போது பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

    இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தானில் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களை வேட்டையாடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.
    • பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்த போதிலும், அவ்வப்போது இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

    இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    உயிரிழந்த 11 பயங்கரவாதிகளும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    • ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரிப்பு.
    • அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்ததன் பேரில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆக்னூர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பரூக் அப்துல்லா பதில் கூறுகையில் "என்கவுண்டர்கள் தொடர்ந்து நடைபெறும். பயங்கரவாதிகள் வந்து கொண்டிருக்கும் வரை, அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவார்கள்

    தலைமைச் செயலகம், அரசு அதிகாரிகள் அலுவலகம் ஒரு தலைநகரில் இருந்து மற்றொரு நகருக்குச் செல்லும் தர்பார் நகர்வு நடைபெறும்.

    எல்லோரும் தீபாவளி கொண்டாட வேண்டும். இது மிகப்பெரிய திருவிழா. இந்த பகுதியில் செல்வம் குறைவாக இருப்பதால், கடவுளும் லட்சுமி தேவியும் இங்குள்ள மக்களுக்கு செழிப்புடன் அருள்பாலிக்கட்டும். இன்று, பெரும்பாலான கடைகள் இங்கு காலியாக காட்சியளிக்கிறது" என்றார்.

    • கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.
    • கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.

    10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.

        

    • பல பகுதிகளை சேர்ந்த கிராமங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டன.
    • 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-தன்டேவாடா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோவல், நெந்தூர், துள்துளி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேற்று தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இன்று நண்பகல் நெந்தூர் - துள்துளி அருகே உள்ள காடுகளில் என்கவுன்டர் நடந்தது. தீவிர எச்சரிக்கையுடன், காடுகளுக்குள் பின்வாங்கிய சில மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும், இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய என்கவுண்டர்களில் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றன.

    துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஏ.கே. சீரிஸ் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த என்கவுண்டர் அமைந்துள்ளது.

    • கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
    • காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

    குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது போன்ற சூழ்நிலைகள் தற்போதைய விடியா திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • இன்று நீலாங்கரை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் என்கவுண்டர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வந்த வீடு முன்பு அவரை ரவுடிக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமு கருமான அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆற்காடு சுரேசின் நெருங்கிய கூட்டாளியான இவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டவுடன் பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்து செயல்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சீசிங் ராஜாவை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதை அறிந்த சீசிங் ராஜா ஆந்திராவுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்தான். கடந்த 2½ மாதங்களாக சீசிங் ராஜாவை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறியபடி இருந்தனர்.

    பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அவன் ஆந்திராவில் இருப்பது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து சீசிங் ராஜா நூலிழையில் தப்பினான்.

    இருப்பினும் போலீசார் ஆந்திராவிலேயே முகாமிட்டு அவனது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர். இதற்கிடையே வேளச்சேரி பகுதியில் மதுபான பார் ஊழியர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் சீசிங் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் வேளச்சேரி போலீசார் அவனை தேடிவந்தனர்.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து சீசிங் ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29-வது குற்றவாளியாக அவன் கைது செய்யப்பட்டான்.

    அவனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நீலாங்கரை பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா போலீசாரிடம் தெரிவித்தான்.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் அவனை அழைத்து சென்றனர்.

    சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரை நோக்கி செல்லும் வழியில் கலைஞர் கருணாநிதி சாலையை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.

    இதையொட்டி செல்லும் சிறிய மண்பாதை வழியாக சென்றால் அப்பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலை சென்றடைய முடியும். அந்த கோவிலுக்கு பின்பகுதியில்தான் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா கூறியதையடுத்து அங்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை அடையாளம் காட்டிய சீசிங் ராஜா அங்கி ருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென்று போலீசாரை நோக்கி சுட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சாதுர்யமாக விலகிக் கொண்டனர். இதனால் யார் மீதும் துப்பாக்கி குண்டு பாயவில்லை. போலீசாரின் வாகனம் மட்டும் சேதம் அடைந்தது. சீசிங் ராஜா தொடர்ந்து சுட்டதால் இன்ஸ்பெக்டர் விமல் தற்காப்புக்காக சீசிங் ராஜாவை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன.

    இதனால் நிலை குலைந்த சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பலியானான். இருப்பினும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் சீசிங் ராஜாவை தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சீசிங் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ராயப் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சீசிங் ராஜா உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களில் இது 2-வது என்கவுண்டராகும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    புழல் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியபோது அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு உள்ளான்.

    சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் ரவுடிகள் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். கடந்த 2½ மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் ரவுடிகள் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தலைமறைவாக உள்ள மற்ற ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அவர்களும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி.
    • பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து சதி வேலையில் ஈடுபட திட்டமிடுவதை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் அவ்வப்போது முறியடித்து வருகின்றன.

    ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் நவ்ஷேராவில் உள்ள லாம் செக்டார் பகுதியில் பங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக வீரர்கள் கண்டுபிடித்தனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தாக்கல் நடத்த தொடங்கினர். அதனைத் தொடர்ந்து வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு ஏ.கே. 47 உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்கிறது என ராணுவம் தெரிவித்துள்ளது.

    • மூன்று இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரர்கள் துப்பாக்கிச்சண்டை.
    • இரண்டு இடங்களில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேடுதல் வேட்டை நடைபெற்றது. குப்வாரா மாவட்டத்தின் மச்சல் என்ற இடத்தில் சந்கேத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    அதேபோல் குப்வாரா மாவட்டத்தின் டங்தார் என்ற இடத்திலும் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    மேலும் ரஜோரி மாவட்டத்தின் லத்தி என்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த மூன்று என்கவுண்டரிலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
    • நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் பேசியதாவது,

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடுங்கொலை செய்யப்பட்டார். இந்தியாவை ஆண்ட கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு இன்று வரை இந்த அரசு ஒருவரை கூட கைது செய்யவில்லை. காவல்துறை என்கவுண்டர் செய்வது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல.. அந்த வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இப்போது கூலிப்படை கொலைகள் நடைபெறுகிறது அதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அதுபோல மின்கட்டண உயர்வு பற்றியும் நாம் பேசியாக வேண்டும். திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிட்டுகளுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    ×