search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 124678"

    ஆந்திர மாநிலத்தில் உயிரை காப்பாற்ற பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கடத்தப்பட்ட 2.71 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுகளை விசாகப்பட்டினத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #DRIseize #DRIraid #cannabisseized #cannabisinambulance #VisakhapatnamDRIseize
    ஐதராபாத்:

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மற்றும் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தின் வழியாக சிலர் பெரிய அளவிலான கஞ்சா கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, அம்மாவட்டம் முழுவதும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் துணையுடன் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.



    அப்போதும் அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை மடக்கி பரிசோதனை செய்தபோது 1,813 கிலோ அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் உள்ளே மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உடனிருந்தவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் உள்நாட்டு மதிப்பு சுமார் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #DRIseize #DRIraid #cannabisseized   #cannabisinambulance in #VisakhapatnamDRIseize
    திண்டுக்கல் அருகே நள்ளிரவில் ஆம்புலன்சை கடத்தி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னாளபட்டி:

    சின்னாளபட்டியில் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. கொடைரோடு, சின்னாளபட்டி, அம்பாத்துரை ஆகிய 3 இடங்களில் இந்த ஆம்புலஸ்கள் இயங்கி வருகிறது.

    நேற்று இரவு சின்னாளபட்டி பிரிவில் ஒரு ஆம்புலன்சை நிறுத்தி விட்ட டிரைவர் அருகில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது.

    இது குறித்து தொண்டு நிறுவன நிர்வாகி பாஸ்கரன் அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்சை திருடிய நபர்களை தேடி வருகின்றனர். ஆம்புலன்சுக்குள் இறந்தவர்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பெட்டியும் இருந்தது. அதனையும் சேர்த்து கடத்தல் கும்பல் எடுத்து சென்றுள்ளனர்.

    ஈரோட்டில் இன்று விடுமுறை கேட்டு ஆம்புலன்சில் அரசு பஸ் டிரைவர் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது35). இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாபு தமிழக போக்குவரத்து கழகத்தில் கடந்த 5 வருடமாக பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பாபுக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பாபு மனைவி மலர்கொடி சென்னிமலை ரோடு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளரிடம் நடந்த விவரங்களை கூறி கணவருக்கு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுமுறை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று பாபு தனது மனைவியுடன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாபு தனது மனைவியுடன் துணை மேலாளர் அறைக்கு சென்று துணை மேலாளரை சந்தித்து விடுமுறை கடிதத்தை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திரும்பி சென்றார். 

    பாகிஸ்தான் நாட்டில் லாகூர் நகரின் அருகே உயிர் காக்கும் அரசு ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் வைத்து 15 வயது சீக்கிய சிறுமியை இருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #SikhGirl #Ambulance
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது நன்கானா பைபாஸ் சாலையில் நின்றிருந்த அரசு ஆம்புலன்சிலிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர்.



    இதையடுத்து ஆம்புலன்ஸ் அருகே சென்றபோது, அதிலிருந்த 2 பேர் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    கீழே விழுந்த பெண் தனது மகள் என்பதை அறிந்து அவர்கள் கதறினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹசன் அலி, சமீன் ஹைதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Pakistan #SikhGirl #Ambulance
    காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.
    வேலூர்:

    காட்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியா 3-வதாக கர்ப்பமானார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 8 மணியளவில் மணிவண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

    அதில் சத்தியாவை ஏற்றிக்கொண்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் வித்யா உடனிருந்தார். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சத்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்தி சத்தியாவுக்கு மருத்துவ உதவியாளர் வித்யா பிரசவம் பார்த்தார். சத்தியாவுக்கு ஆம்புலன்சிலேயே இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் பெண் குழந்தைகள்.

    உடனடியாக சத்தியாவும், குழந்தைகளும் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    காங்கேயம் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காங்கேயம்:

    காங்கேயம் தாலுகா பூசாரிவலசைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவருடைய மனைவி வெண்ணிலா (21) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்றுகாலை காங்கேயத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி வெண்ணிலாவை ஏற்றிக்கொண்டு வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றது.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவ உதவியாளர் சுந்தரமகாலிங்கம், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் ஆகியோர் பிரசவத்திற்கு உதவி செய்தனர். அதைத்தொடர்ந்து தாயும், சேயும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    மேட்டுப்பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உப்பு பள்ளத்தை சேர்ந்தவர் பூபாலன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று இரவு 12.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் நந்தினியை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது.

    வரும் வழியில் நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதில் வந்த நந்தினியின் தாய் சரசு, ஆம்புலன்ஸ் டிரைவர் நந்த குமார், அவசர மருத்துவ உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

    நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    காட்பாடி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

    குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் தனது பாட்டியை கட்டை வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு தூக்கி வந்த பேரனின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Ambulance #GrandmainCart
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்டி மாவட்டத்தில் உள்ளது கமல்பூர் கிராமம். இங்கு வசிக்கும் சிறுவன் சோட்டு (12). இவனது பாட்டி அனரா தேவி (85).

    அனரா தேவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நிலை மோசமானது. இதையடுத்து, சோட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை

    நேரம் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த  சோட்டு, அங்கிருந்த கட்டை வண்டியில் அனரா தேவியை வைத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    உ.பி.யில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வாடிக்கையாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி அகதி முகாமைச் சேர்ந்தவர். ராமமூர்த்தி(27) கூலிதொழிலாளி.

    இவரது மனைவி வெண்ணிலா(22) இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் யோகி தாசினி என்ற பெண்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் வெண்ணிலா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று இரவு பிரசவவலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அவருக்கு காலை 7.45 மணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெண்ணிலாவை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து வெண்ணிலாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. பின்னர் வெண்ணிலா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். #Tamilnews
    ×