search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 131652"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    • 132 பேரில் 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

    விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிக அளவில் தமிழக பயணிகள் இருந்துள்ளனர். இந்த ரெயிலில் மொத்தம் 867 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் 127 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் இருந்து சென்ட்ரல் வரும் வழியில்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போதுதான் அவர்களில் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதேபோன்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழக பயணிகள் 5 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 132 தமிழர்கள் 2 ரெயில்களிலும் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    அதே நேரத்தில் காயம் அடைந்த தமிழர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக 5 அல்லது 6 மணி நேரம் கழித்தே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பற்றிய விவரங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த 132 பேரில், 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 35 பேரின் செல்போன் இணைப்புகள் மட்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளன என்று வருகிறது. இவர்கள்தான் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
    • ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் 847 பேர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் விவரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.

    ஆனாலும் தமிழக பயணிகள் அதிகளவில் பயணித்து இருப்பதால் அவர்களை மீட்க ஒடிசா அரசுடன் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவவும் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வரவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர்களும் உடனடியாக செல்ல வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு சென்றது.

    இக்குழுவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணீந்தர ரெட்டி, குமார் ஜெயந்த் உள்ளிட்ட 5 அதிகாரிகள் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புறப்பட்டு சென்ற அதிகாரிகள் குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளை பார்த்து ஆறுதல் கூறியதோடு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

    தமிழக பயணிகள் குறித்து முழு விவரங்களை பெற்று அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உதவிகள் செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    • ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார்.
    • ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்.

    பாலாசோர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர்கள் ரகு, கிரண், வைசாக், விஜிஷ் ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்னை வந்து கேரளா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் எதிர்பாராதவிதமாக ரெயில் விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் 4 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

    ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார். மற்ற 3 பேரும் மறுபுறம் உள்ள வாசல் வழியாக தப்பினர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து விபத்துக்குள்ளான ரெயிலில் சிக்கிகொண்ட பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் உதவி செய்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் படுகாயம் அடைந்து வலியால் அலறிய சத்தம் நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது.
    • சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது.

    நெல்லை:

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோரமண்டல் ரெயில் விபத்தில் இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அந்த ரெயிலில் பயணித்து உயிர் தப்பியவர்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தப்பளகுண்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது 45) என்பவரும் ஒருவர் ஆவார். விபத்து குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஜார்கண்ட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அங்கு சபை ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். நாங்கள் விபத்துக்குள்ளான ரெயிலில் 2-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணித்தோம். நேற்றிரவு 7 மணியளவில் திடீரென நாங்கள் அமர்ந்திருந்த பெட்டி குலுங்கியது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருந்த நாங்கள் அனைவரும் பெட்டிக்குள் கீழே விழுந்தோம். உடனே ரெயில் தடம் புரண்டதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

    இதனால் ரெயில் பெட்டியில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக அதில் இருந்து உடனடியாக அலறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேறினார்கள்.

    அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது. சுமார் 9 பெட்டிகள் வரை இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. இதில் சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. அதில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் நெஞ்சை உறைய செய்தது. பின்னர் அங்கு நிற்கவே மிகவும் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. இதனால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு புவனேஸ்வருக்கு கிளம்பி வந்து விட்டோம். இப்படியொரு சம்பவம் நடந்துவிடும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து.
    • சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.

    சென்னை:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இன்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666).

    இன்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.12509).

    ஹவுராவில் இருந்து பெங்களூரு வரவேண்டிய ரெயில் (எண்.12863) ஹவுராவில் இருந்து நேற்று பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு சென்னை வரும் ரெயில் (எண்.12839).

    இதேபோல் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் ரெயில் (12245), (12551), இன்று பகலில் பெங்களூருவில் இருந்து புறப்படும் வண்டி எண். 12684, 12253 ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் (15630) மற்றும் பெங்களூருவில் இருந்து புறப்படும் (22503) ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே

    இடிபாடுகளுக்குள் சிக்கி

    இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

    பாதிக்கப்பட்ட

    ஒவ்வொரு குடும்பத்திற்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    மீட்புப் பணியாளர்க்குத்

    தலைதாழ்ந்த வணக்கம்

    இருந்த இடத்தில்

    எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

    கண்ணீர்

    கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


    • ரெயில் விபத்தில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
    • ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருக்கிறார்கள்.

    ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த ரெயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்களில் பலரும் பாலாசோர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.

    இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைபடுகிறது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ரத்த தானம் செய்தனர். இதனை ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். தற்போது இப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் இருப்பதாகவும், தேவைப்படுவோருக்கு அவை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பியூட்டி பார்லரில் அர்ச்சனா வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தகவல்
    • அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.

    ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

    ஆரம்பகாலத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த அர்ச்சனா, பின்னர் பியூட்டி பார்லரில் சேர்ந்ததாகவும் அங்கு ஜெகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ததாகவும், பியூட்டி பார்லரில் வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.


    அர்ச்சனாவின் வலையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) கட்சித் தலைவர்கள் சிக்கியிருக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் அர்ச்சனாவுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டால் ஒடிசாவில் 22 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்எஸ் சலுஜா கூறி உள்ளார்.

    இதற்கு முன்பு வேறு சில வழக்குகளில் செய்தது போன்று, அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்களை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும் சலுஜா குற்றம் சாட்டினார்.

    18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது. தங்கள் தலைவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதுபற்றிய ஆதாரங்களை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கோவை சரக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரின் ஈரோடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, இசக்கி மற்றும் போலீசார் பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 53), திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த ஜான்சன் பிரபு (28) என்பது தெரியவந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி கேரளாவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மோகன், ஜான்சன் பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். 

    • வெள்ளப்பெருக்கால் வட மாவட்டங்களில் அதிக பாதிப்பு.
    • 58 மீட்புக் குழுக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    புவனேஸ்வர்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஜார்க்கண்டில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்படுவதால், வட ஒடிசாவில் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் ஒடிசா வட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    தேசிய பேரீடர் மீட்பு படையினர், மாநில பேரீடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அடங்கிய 58 மீட்புக் குழுக்கள் பாலசோர் மற்றும் மயூர்பாஞ்ச் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 763 கிராமங்களில் 5 லட்சம் பேர் மாயமாகி உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

    மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சிண்டா பகுதியில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், அது விரைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒடிசாவைக் கடந்து விட்டதால் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் உள்ள காலஹண்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Odishabusaccident
    காலஹண்ட்:

    ஒடிசாவின் காலஹண்ட் மாவட்டம், கேசிங்கா பகுதிக்கு அருகே இன்று காலை பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்தது .

    இதில் 2 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து விபத்து குறித்த விசாரணையில் அப்பகுதி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

    இதேபோல் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று சாலையின் வளைவில் திரும்ப முற்படும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 மாணவர்கள் படுகாயமுற்றனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Odishabusaccident





    ஒடிசாவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் ரூ.60 வீதம் 7 நாட்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Odisha #NaveenPatnaik
    புபனேஷ்வர்:

    ஒடிசாவின் பத்ராக், ஜாஜ்பூர் மற்றும் கேந்த்ராபாரா பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 நாட்களுக்கு தினமும் ரூ.60 வழங்கவும், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.45 வழங்கவும் உத்தரவிட்டார். 90 டன் அரிசி, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    ×