search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
    • எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி அரசு கருத்து தெரிவித்து உள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் டெல்லியில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

    அந்த அப்பீல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? என்பது தெளிவாகும்.

    அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயக கொள்கைகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் நேற்று பேசும்போது, "எந்தவொரு வெளிநாட்டு தூதரும் ராகுல்காந்தி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை" என்று தெரிவித்து உள்ளார்.

    • கடந்த 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது.
    • ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.

    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பலமுறை சொல்லிவிட்டேன். பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அம்மாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதனை அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்ததற்கு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிக்க சென்றுவிட்டதாக துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் கல்வி இடைநிற்றலை புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரத்துடன் வெளியிட வேண்டியது அமைச்சரின் கடமை. அதை அவர் செய்வார் என்று நம்புகிறேன்.

    கடந்த 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது. ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் தொடரலாம் என்ற நிலையை ராகுல் காந்தி ஒத்துக் கொள்ளவில்லை.

    பின்னர் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாநில பொருளாளர் ஆர் மனோகரன், மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் பலர் உடன் இருந் தனர்.

    • போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
    • ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது.

    நெல்லை:

    அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் அறவழி மவுன போராட்டம் இன்று நடைபெற்றது.

    மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

    போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.

    பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன், சங்கரபாண்டியன் ஆகியோர் காந்தி சிலையிடம் மனு அளித்தனர். இதில் பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், சொக்க லிங்ககுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், பரணி இசக்கி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று அறவழியில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதானி குறித்து பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பதற்காகவே ராகுல்காந்தியை பதவிநீக்கம் செய்துள்ளனர். எனவே எங்களின் மக்கள் போராட்டம் தொடரும்.

    ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது. அவர் இந்திய பிரதமர் ஆவதற்கு ஏதுவாக எங்களது இந்த போராட்டம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி 1-ம் கேட் காந்திசிலை முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
    • மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

    மங்கலம் :

    மோடி பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    இந்தநிலையில் மத்திய அரசு பொய்யான வழக்கு போட்டதை கண்டித்தும் மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மங்கலம் நால்ரோடு அருகே நடைபெற்ற கண்டன ஊர்வலம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சபாதுரை தலைமை தாங்கினார்.இதில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலாகண்ணன், அப்துல்அஜீஸ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி, மகிளா காங்கிரஸ் மகளிர்அணி மாநில செயலாளர் நவமணி , முன்னாள் வட்டார துணைத்தலைவர் தங்கவேல்,காங்கிரஸ் அலாவுதீன், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அர்ஜூனன், ரபிதீன் ,எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர்.
    • போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி எம்.பி.யாக இருக்கிறார்.

    லண்டன் சென்று இருந்த ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும், இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தி பாராளுமன்றத்தை 5 நாட்கள் முடக்கினர். அதே நேரத்தில் காங்கிரஸ் அதை மறுத்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

    இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் 'பாரத் ஜோடோ' யாத்திரையை கடந்த செப் டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ந் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    காஷ்மீரில் அவர் பேசும்போது 'இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்' என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது.

    பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள். 3 மணிநேரம் காத்திருந்து அவரிடம் இந்த நோட்டீசை கொடுத்தார்கள்.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று ராகுல்காந்தி வீட்டுக்குச் சென்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர்.

    ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காங்கிரஸ் முதல்முறையாக இடதுசாரியுடன் இணைந்து திரிபுராவில் போட்டியிட்டும் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க முடியவில்லை.
    • 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் 24 சதவீத எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிடம் இருந்தனர்.

    புதுடெல்லி:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

    இந்த 3 மாநிலங்களில் 180 தொகுதிகள் உள்ளன. ஆனால் இதில் காங்கிரசுக்கு 8 இடம் மட்டுமே கிடைத்து உள்ளது. திரிபுராவில் 3-ம், மேகாலயாவில் 5-ம் பெற்றது. நாகாலாந்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

    டெல்லி, சிக்கிம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசின் வெற்றியால் பூஜ்ஜிய பட்டியலில் இருந்து அம்மாநிலம் தப்பியது. எனினும் இப்பட்டியலில் புதிதாக நாகாலாந்து சேர்ந்துவிட்டது.

    பல மாநிலங்களில் காங்கிரசுக்கு சொற்ப எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். 403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிர சுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். 9 மாநிலங்களில் காங்கிரசுக்கு 10-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.

    பீகாரில் 19, தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கை அக்கட்சிக்கானதா என்பதில் உறுதி இல்லை. ஏனெனில் கூட்டணி பலத்தில் வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள்.

    மற்றொரு புள்ளி விவரப்படி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 4,033 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 16 சதவீதம் (658 எம்.எல்.ஏ.க் கள்) மட்டுமே காங்கிரசுக்கு உள்ளனர். 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் 24 சதவீத எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிடம் இருந்தனர்.

    காங்கிரஸ் முதல்முறையாக இடதுசாரியுடன் இணைந்து திரிபுராவில் போட்டியிட்டும் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க முடியவில்லை.

    அடுத்து விரைவில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைப்பதுடன் மற்ற மாநிலங்களையும் கைப்பற்றினால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

    அப்போதுதான் அதன் பலன் காங்கிரசுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் எனக் கருதப்படு கிறது. இந்த சவால்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், முக்கிய தலைவரான ராகுலும் சவாலாக ஏற்று களம் இறங்குவார்களா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

    • மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.
    • காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை மாறாக மிகுந்த அன்புடன் இதயத்தை கொடுத்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்து 3500 கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை... நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.

    தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்றார். வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. ராணுவ வீரனின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும்.

    ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள். இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவனரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும். அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி. ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள், இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல மாறாக அவர்கள் பயப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நான் இது குறித்து யோசித்தேன். பின்னர், எனது வீடான ஜம்மு காஷ்மீரில் எனது மக்களுடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது வெள்ளை சட்டையை சிவப்பு நிறமாக மாற்ற அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை, மாறாக மிகுந்த அன்புடன் அவர் இதயத்தை கொடுத்துள்ளனர்' என்றார்.

    • பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என விளக்கம்.
    • எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உறுதியுடன் இருப்பதாக தகவல்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால், தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிய இந்தியாவின் தேச தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், புதிய இந்தியாவின் புதிய தந்தை, தேசத்திற்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். சுதந்திர போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு எதிர்க்கிறீர்களோ அவ்வளவு பயிற்சி பெறுகிறேன்.
    • எதிர்கட்சிகள் அனைத்தும் பொது பார்வையுடன் மக்களை அணுக வேண்டும்.

    புதுடெல்லி:

    ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல்காந்தி எம்.பி. பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து ராகுல் காந்தி இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது மக்களை சந்திப்பதற்காகதான் நான் பாதயாத்திரை செல்கிறேன். காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்னால் செல்ல முடியாது.

    மக்களிடம் நேரடியாக சென்று பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது.

    பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு எதிர்க்கிறீர்களோ அவ்வளவு பயிற்சி பெறுகிறேன். யாத்திரையில் ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரசுடன் இருக்கிறார்கள். ஆனால் சில அரசியல் நிர்பந்தங்கள் இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

    எதிர்கட்சிகள் அனைத்தும் பொது பார்வையுடன் மக்களை அணுக வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று பார்வையை திறம்பட எதிர்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற குழு பரிந்துரை குறித்து அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. ராகுல் காந்தி நடைப்பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

    108 நாட்கள் 2,800 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான். ஆனால் இதுபற்றி அண்ணாமலை பேசியுள்ளது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ராகுல்காந்தியுடன் கமல்ஹாசனும் சித்தாந்த அடிப்படையில் ஒரே பார்வை கொண்டவர்கள்.

    இதனால் தேர்தல் கூட்டணி ஏற்படுமா? என்று இப்போது சொல்ல முடியாது. ராகுல் காந்திக்கு நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம். மற்ற தலைவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றி கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வடமலைக்குறிச்சியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதிராஜசேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும்.

    சென்னை:

    ராகுல்காந்தி தற்போது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தற்போது யாத்திரைக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. 150 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக 'அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் 'கையோடு கை கோர்ப்போம்' ஆகிய மாபெரும் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ரஞ்சன்குமார் மாநில நிர்வாகிகள் முருகானந்தம், பலராமன், சிரஞ்சீவி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், செயல் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆலோசனை வழங்கினார்.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரையின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

    இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிகாட்டுதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நோட்டீசுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வழங்கி இருந்தது. அவை நிர்வாகிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அந்த வழிகாட்டுதல் நோட்டீசில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வட்டார அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று கூடி அதற்கென்று பொறுப்பாளர்களை நியமித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் நடைபயணமாக சென்று ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் நோக்கங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் 1 மாதம் இந்த நடைபயணங்கள் நடத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட வேண்டும்.

    கட்சிக்கொடி ஏற்றி, ராகுல் காந்தி பாதயாத்திரை நினைவு கல்வெட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும். பாத யாத்திரை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடிதத்தை வீடு, வீடாக வினியோகம் செய்ய வேண்டும்.

    கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் இதற்கு பார்வையாளர்களாக செயல்பட வேண்டும்.

    பா.ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். இது தொடர்பாக ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பொது மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண காணொலி காட்சிகளை பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகளில் முக்கிய இடங்களில் திரையிட வேண்டும்.

    புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும். இந்த பேரணியில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிடுவார்.

    தமிழகத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் பிரசார இயக்கம் மாநில அளவில் 2023 ஜனவரி 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான பார்வையாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்படுவார்கள்.

    அதேபோல், மாவட்ட அளவில் ஜனவரி 15-ந் தேதியிலிருந்து 30-ந் தேதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தம்மை கடுமையாக வருத்திக் கொண்டு இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை முழுமையாக பயன்படுத்துகிற வகையில் மேற்கண்ட செயல் திட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

    இத்தகைய செயல் திட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான ஆதரவை மக்களிடையே திரட்ட முடியும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரி வெல்ல பிரசாத் ஆகியோர் பேசும்போது, "ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்," என்றனர்.

    • ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார்.
    • பாத யாத்திரையில் பங்கேற்ற கமலுக்கு, ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    கடந்த 24ந் தேதி டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் தமது கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்து கொண்டார். செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் அவர் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றமைக்காக கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அப்போது நன்றி தெரிவித்தார். 


    பின்னர் இருவரும் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

    மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×