search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வில் நடந்த முறைகேட்டால் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி இன்னும் பதவி ஏற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த முறை கேட்டால் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வு சீர் குலைந்துள்ளது.

    ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப் பெண்களைப் பெறுகிறார் கள். ஆனால் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    கல்வி மாபியா மற்றும் அரசு எந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த வினாத்தாள் கசிவுவை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. சட்டம் இயற்று வதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.

    இன்று நாட்டின் அனைத்து மாணவர் களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும், உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

    இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்கள் குரலை நசுக்க விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

    • 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
    • தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    இந்நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், பேசிய அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்.

    தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.

    ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

    ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

    ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது

    வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது

    பங்குச் சந்தை முறைகேட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும், இதனால் பயனடைந்தவர்கள் யார் என தெரிய வேண்டும்" என்று புள்ளி விவரங்களுடன் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    • அமேதி தொகுதியில் கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி.
    • காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது.

    டெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போதைய மக்களவை தேர்தலை போன்று, கடந்தமுறை (2019) நடந்த தேர்தலிலும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    கடந்தமுறை அவர் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதிரானி தோற்கடித்தார்.

    காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தி கடந்தமுறை தோல்வியை தழுவிய அமேதியில் போட்டியிடவில்லை.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் இந்த முறையும் பாரதிய ஜனதா கட்சி சாரபில் ஸ்மிருதி ரானியே போட்டியிட்டார்.

    கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்த அவரை, இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் ஈடுபட்டனர்.

    அதற்கு தகுந்தாற்போல் தேர்தல் பிரசாரத்துக்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினர். மேலும் சமாஜ்வாடி கட்சியினரும் பிரசாரத்தில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த முறை தேர்தலில் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி ரானியை, தற்போது தோற்கடித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது. இந்த வெற்றி அவர்களுக்கு இனிப்பான பழிவாங்கலாக இருக்கிறது. 

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
    • காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார். மாதா மாதம் பெண்களுக்கு 8,500 ரூபாய் அவர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரபிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ஏராளமான முஸ்லீம் பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் 1 லட்ச ரூபாய்க்கான கேரண்டி கார்டு உடன் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த உத்தரவாத அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு ரசீது கிடைத்ததாக சில பெண்கள் தெரிவித்தனர்.

    தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் 1 லட்சம் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது இந்தியா கூட்டணி வென்றுள்ளதால், இந்த உத்தரவாத அட்டையை சமர்ப்பிக்க வந்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை தோற்கடித்த பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லாலிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.

    கிஷோரி லால் 5,39,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியை அவர் தோற்கடித்துள்ளார்.

    • ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவை
    • இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு இன்று ராகுல்காந்தி வருகை தந்தார். அப்பொழுது காங்கிரஸ் கொடியுடன் தொண்டர் ஒருவர் ராகுல் காந்தியை கட்டி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    • நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
    • மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான 4-ந்தேதிக்கு பிறகு ராகுல்காந்தி தியானத்துக்கு சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    'ஜூன் 4-ந்தேதி மாலை, இளவரசரும்(ராகுல் காந்தி) தியானத்திற்குச் செல்வார்.குகையைத் தேடும் பணி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, பிரதமர் மோடி தேசிய ஒற்றுமையின் உச்சம். காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டியது. கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டுதல், முத்தலாக் நீக்கம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல். முழு உலகிலும் இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டியது உள்ளிட்டவை யெல்லாம் சாதாரண சம்பவங்கள் இல்லை.

    இதனால்தான் பிரதமர் மோடி மீது இறைவனின் மகத்தான கருணை இருப்பதாக நான் எப்போதும் கூறுகிறேன். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தவுடன், அசுர சக்திகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மிக பலம் பெற கன்னியாகுமரிக்கு தியானம் செய்யச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிடவில்லை.

    அதிகாரம் வருவதும் போவதும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை உணர்கிறார்கள். மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள் என்றார்.

    • மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான பிரச்சினைகளில் தேர்தலில் போராடி வெற்றி பெற்றோம்.
    • காங்கிரஸ் கட்சியினருக்கு இந்தியா கூட்டணியின் அரசு அமையப் போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    கடைசி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் 7-ம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகிறது.

    தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நாட்டின் மகத்தான மக்களுக்கு வணக்கம் செலுத்தும் போது, காங்கிரஸ் கட்சியினருக்கு இந்தியா கூட்டணியின் அரசு அமையப் போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன்.

    நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் காப்பாற்ற உறுதியாக நின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான பிரச்சினைகளில் தேர்தலில் போராடி வெற்றி பெற்றோம்.

    விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை திசைதிருப்ப பலமுறை முயற்சித்தாலும் அவர்களின் குரலை உயர்த்தினோம்.

    கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு இயந்திரங்களை வைத்துள்ள அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்

    இந்தியா ஜெயிக்கப் போகிறது" என்று பேசியுள்ளார்.

    • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா?
    • மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை (1982) எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை" என்ற பிரதமரின் கருத்து எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு (இறப்பு 1955) 'காந்தி' படம் வெளிவந்த பிறகுதான் (1982) மகாத்மா காந்தியைப் பற்றி தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
    • தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது.

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மகாத்மா காந்தியைப் பற்றி அறிய 'முழு அரசியல் அறிவியல்' படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் பாட்லிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார். அவருடன் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார்.

    இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி இருக்கும் மேடை திடீரென கீழே சாய்ந்தது. அவரின் பாதுகாவலர்கள் விரைவாகச் செயல்பட்டு ராகுலை பிடித்தனர். எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்த போதிலும், ராகுலுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வை பதற்றப்படாமல் ராகுல் காந்தி சமாளித்தார்.

    • இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

    தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

    மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த நிகழ்வில் அலட்சியம் காட்டப்படாது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×