search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    • மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில்100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள். இதன்மூலம் இவர்கள் மாவட்ட மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக தடகள சங்கம் சார்பில் 35 -வது மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது. இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் பாரதி தலைமையில் 23 பேர் கலந்து கொண்டனர். இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி சவுமியா 3000 மற்றும் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் இவர் தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவி சவுமியாவுக்கு சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர் எஸ் .சுந்தரன், செயலாளர் கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன் ,பயிற்சியாளர் பாரதி மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

    • ஆக்கி போட்டியில் உலக சாதனை படைத்த சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
    • சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி

    சிவகாசி

    சிவகாசியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் ஜியாஸ்ரீ (வயது 9). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவி ஜியாஸ்ரீ, சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஆக்கி விளையாடிக் கொண்டே சென்று 39 நிமிடம் 30 வினாடியில் சென்று சாதனை படைத்தார். அவரது பெயர் முதன்முறையாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

    இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், உறுப்பினர்கள் ராஜேஷ், வெயில்ராஜ் மற்றும் ரேணு நித்திலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • குளச்சல் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ்.இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார்.

    இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (வயது 19).இவர் கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரு கிறார். நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்தாராம்.வீட்டு மொட்டை மாடியில் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது ஜாபியா ஜாஸ்மினின் பள்ளி தோழன் சுங்கான் கடையை சேர்ந்த அஜின் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து புளியமரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அஜின் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் மாணவியை தாக்கினார். இதில் படுகாய மடைந்த ஜாபியா ஜாஸ்மின் உடையார் விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக குளச்சல் போலீசார் அஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவில் மொட்டை மாடி ஏறி சென்று கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      கன்னியாகுமரி:

      அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிகளில் பஙகேற்ப தற்காக குமி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேயர் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இதையடுத்து இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு வந்தார். அவரை கப்பல் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

      பின்னர் அவர் அங்கு இருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்கு விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

      விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விளக்கினார்கள். அப்போது விவேகானந்தர் மண்டபம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் செல்பி எடுத்துக் கொண்ட னர்.

      தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர்சிலையை பார்வையிட சென்றார். அங்கு வந்து அவரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவள்ளுவர்சிலையை பார்வையிட்டார். அங்கு நடை பெற்று வரும் ரசா யன கலவை பூசும் பணியை அவர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆரோக்கிய சஞ்சனாவை மணக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

      மாணவிக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

      அவரிடம் மேல்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேட்டார். அப்போது கலெ க்டர் ஆக ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர், மாணவியிடம் அவரது படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

      இதைத் தொடர்ந்து சேனவிளையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தொடக்கக் கல்வி துறையை தனித்துறையாக நிர்வாக ரீதியில் பிரித்து ஆணையிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

      • கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
      • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      விருதுநகர்

      திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (22). இவரது சகோதரி கவிதா (18). சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் கருப்பசாமி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் திருமணமான ராமபாண்டி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி சம்பத்தன்று தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      விருதுநகர் அருகே உள்ள பெரியபேராளியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பெத்தக்காள் (38). இவர் மனநிலை பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மகளுடன் சென்ற பெத்தக்காள் மட்டும் திடீரென மாயமானார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      சாத்தூர் அருேக உள்ள ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பாலமுருகன் (18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      விருதுநகர் ஐ.டிபி.டி.காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகள் ஆர்த்தி (20). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக திருமணமான தினேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

      • மாணவி அவருடைய தாயுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர்களை வழிமறித்து சுதாகர், மாணவியை காதலிப்பதாக கூறி மிரட்டி உள்ளார்.
      • இதில் சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

      வல்லம்:

      தஞ்சை அருகே உள்ள ஒரு கிராம பகுதியை சேர்ந்த் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

      தஞ்சை அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 21). இவர் பள்ளி மாணவியான சிறுமியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

      மாணவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தன்னை காதலிக்க சுதாகர் வற்புறுத்தி வந்துள்ளார்.

      இது குறித்து மாணவி அவருடைய தாயாரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாய் சுதாகரின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

      அப்போது சுதாகரின் தாயான கலையரசி என்பவர் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று தாயிடம் கூறியுள்ளார்.

      சம்பவதன்று மாணவி அவருடைய தாயுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர்களை வழிமறித்து சுதாகர், மாணவியை காதலிப்பதாக கூறி மிரட்டி உள்ளார்.அப்போது சுதாகர் மாணவியின் கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

      அதனை தடுக்க முயன்ற மாணவியின் தாயையும் சுதாகர் தாக்கி உள்ளாரர். இதில் சிறுமி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

      இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுதாகர் (வயது 21) மற்றும் சுதாகரின் தாயார் கலையரசி (45) ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

      • புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
      • மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      கன்னியாகுமரி:

      கருங்கலை அடுத்த தொலையாவட்டம் கம்பளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17-வயதான மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

      கடந்த 13-ந்தேதி சனிக்கிழமை மாணவியின் தந்தை மற்றும் தாய் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த தந்தை வழி உறவினரான கொத்தனார் வேலை பார்க்கும் 41-வயதான ஜாண் செல்வன் என்பவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மாணவியை மிரட்டியும் உள்ளார்.

      இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம்,சிறுமி நடந்தவற்றை கூறிய நிலையில் சம்பவம் குறித்து தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

      புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த ஜாண் செல்வன் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

      • மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
      • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

      விருதுநகர்

      சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.

      அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

      இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.

      அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

      அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

      • ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
      • பிளஸ்-2 மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

      மங்கலம் :

      திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை அருகே உள்ள செல்வகணபதிநகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு வி.ஜெயம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

      இதில் வி.ஜெயம் அறக்கட்டளை நிறுவனதலைவர் ஜெயம் என்.மகேந்திரகுமார், செயலாளர் லீலாஜெயந்தி, பொருளாளர் பத்மநாபன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பிரமணியம், செல்வராஜ்,குப்பாதோட்டம் ராமசாமி, பொன்னுச்சாமி, சி.பி.ஆறுமுகம், சுல்தான்பேட்டை நந்தகுமார்,சுல்தான்பேட்டை ஜோதி, கண்ணையன், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, புத்தூர் மகேஷ், சுல்தான்பேட்டை மகேஷ், முக்கந்தர் மணி, புத்தூர்மணி, கணபதிபாளையம் கருப்புசாமி மற்றும் வி.ஜெயம் குரூப்பை சேர்ந்த பண்ணையார் லோகநாதன்,பத்மநாபன்,அஜீத்கோவிந்தன், வெற்றி அரவிந்த் ,வெற்றி பிரபாகர் , ஸ்ரீதர், என்.சரவணக்குமார்,சன்ஷைன் சண்முகம், செல்வராஜ்,ஆர்.கருப்புசாமி,எஸ்.கருப்புசாமி,மகேஷ்வரன், பி.சந்திரசேகர், சுந்தரமூர்த்தி, ஏ.சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
      • சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார்.

      கடலூர்: 

      கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நன்னிகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மகள் சுகப்பிரியா (வயது 16). இவர், உளுந்தூ ர்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் இவரது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகமன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டி யம் பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்த மதுரை மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
      • கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

      மேலூர்

      தமிழக அரசின்பள்ளி கல்வித்துறை சார்பில் 44-வது சதுரங்க ஒலிம்பி யாட்-2022 மாநில அளவிலான சதுரங்க போட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

      இப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மற்றும் 2 இடங்களை பிடித்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு விளை யாடினர். மொத்தம் 6 சுற்றுகள் கொண்டதாக போட்டி நடைபெற்றது.

      இப்போட்டியின் முடிவில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அ.சோலையம்மாள் 5 சுற்றுகளில் வெற்றி பெற்று, 3-ம் இடம் பெற்றார்.

      போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பதக்கமும், சான்றிதழும், ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினர்.

      ஏற்கனவே மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரதீப், தேவ்நாத், .கலைச்செல்வி ஆகிய 3 பேர் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்யும் வாய்ப்பும், விமானத்தில் செல்லும் வாய்ப்பும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

      போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மேலூர் வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, குளோரி, அ.வல்லா ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை மணிமேகலை, இம்மாணவிக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான செந்தில்குமார், அ.வல்லா ளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், சேர்மன் குமரன், உதவித் தலைமை ஆசிரியர்

      வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன், கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

      • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷாதேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.
      • மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

      உடுமலை :

      சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷா தேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.

      இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மங்களம் ரவி உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சிவசங்கர், துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் அய்யப்பசாமி, நிர்வாகிகள் கண்ணப்பன், ரஜினி பிரசாந்த், சித்தார்த்தன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

      ×