search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • தா.பழூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன் கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 34), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பார்த்திபனை செல்வராஜ் மகன் சவுந்தரராஜன் (25) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும், அவரது தம்பி செல்வகுமார் (19) தான் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை குத்தியுள்ளார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தகராறை விலக்கி விட்டு காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கத்தியால் குத்தியதாக செல்வகுமார் மற்றும் சவுந்தரராஜனை கைது செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.
    • நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவில் பூசாரி சுப்பிரமணி (67). இவர் கடந்த 2017 -ம் ஆண்டு ஜுலை மாதம் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எ.பள்ளிப்பட்டி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட் நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா வாதாடினார்.

    • கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது.
    • தலைமறைவான மவுலியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் இக்கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது. இங்கு விபச்சாரம் அதிக அளவு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை, கொரட்டூரை சேர்ந்த பிரியதர்ஷினி(வயது23) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குகன்(வயது24) என்பவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள கார்த்திக் லாட்ஜுக்கு இளம் பெண்ணை அழைத்து வந்து தங்க வைத்தார்.

    பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் கார்த்திக்(வயது35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அநாகரீகமாக பேசி திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மவுலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் என்பவர் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்றும், முடி வியாபாரி என்றும், தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒயர் திருடிக் கொண்டிருந்த குமாரை மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சந்திரமூலசமுத்திரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மின் ஒயர்களை அதே ஊரைச் சேர்ந்த குமார் (வயது 38) என்பவர் திருடிக் கொண்டிருந்தபோது அந்த கிராம மக்கள் பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி இவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
    • வாலிபருக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்து தென் கொரிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

    தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194 பேர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    இதனால், விமானத்தில் இருந்த பயணகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார்.

    இந்நிலையில், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்க தகவல் வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டுசின்னப்பராஜ் மகன்ரீனா ஸ்டீபன் ராஜ் (19),பணிக்கன் குப்பம்முருகன் கோவில் தெரு, நாகப்பன் மகன்ராஜ்குமார்(19) ஆகியோர் 50 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக தகவல் வந்ததின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் இவர்களைகாடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்துஇவர்கள் இருவரையும்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன்,சப்.இன்ஸ்பெக்டர்பிரேம்குமார் கைது செய்துஅவர்களிடம் இருந்துமுதல்செய்துபண்ருட்டிகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிச் சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயிலர் மணிகண்டனுக்கும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சிறைசாலையில் பணிபுரிந்து வந்த வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஜெயிலர் கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தூண்டுகோலாக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (38). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முத்துலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரி வீட்டில் இருந்த முத்துலட்சுமியை தாக்கி கனகராஜ் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இதில் அவரது மகள் தீக்காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த பின் மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அதில் கனகராஜுற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • பண்ருட்டி அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல்  (வயது 42)கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்க்கும் 4 பேர் அங்கு வந்து அவர்களும் ஏரியில் குளித்தனர். இந்நிலையில் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கொத்தனார் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருகும் இடைேய தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு ,ராஜசேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்பு காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார்.
    • ஆசிரியருக்கு 1.31 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு.

    பிரான்சில் உள்ள பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பிரான்சில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோ என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார்.

    இதுதொடர்பாக விக்டர் மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.31 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கல்வி வாரியம் தெரிவித்தது.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    கரூர்:

    எர்ணாகுளம்-காரைக்கால் செல்லும் ெரயிலில் மாலதி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பயணம் செய்தார். அப்போது அதே ெரயில் பெட்டியில் பயணித்த கணேஷ்குமார்(வயது 62) என்பவர் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் (மாலதியின் மகள்) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து கரூர் ெரயில் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி நசீமாபானு போக்சோ சட்டத்தின் கீழ் கணேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட திருச்சி இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி, அவருக்கு உதவியாக இருந்த கரூர் இருப்புப்பாதை சப் இன்ஸ்பெக்டர் கேசவன், நீதிமன்றக்காவலர் பூபதி ஆகியோரை தமிழ்நாடு ெரயில்வே காவல் துறை துணை இயக்குனர் வனிதா, சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), திருச்சி மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் பாராட்டினர்.

    ×