search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பெரிய தாயி (60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இருவரு க்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவர் முத்து ஏற்கனவே இறந்து விட்டார். பெரிய தாயி வீட்டின் அருகிலேயே டிபன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.

    பெரியதாயின் 2-வது மகள் அம்பிகா, மருமகன் கருணாகரன் 2 பேரும் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் அம்பிகாவின் 3 குழந்தைகளுடன், பெரிய தாய் பஞ்சலிங்க புரத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெரியதாயி தனது 3 பேரக் குழந்தை களுடன் சின்னம்மாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு அங்கேயே தங்கி விட்டனர்.

    பின்னர் காலை பஞ்சலிங்க புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் ரூ.24 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் வெற்று பத்திரத்துடன் கூடிய பையை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் பத்திர விற்பனையாளராக உள்ளார்.

    இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளின் முன்பக்க கூடையில் ரூ.60,000 பணம் மற்றும் வெற்று பத்திரத்துடன் கூடிய பையை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்டு அவரை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர். சுவாமிமலை அருகே வந்தபோது பணத்தை திருடி கொண்டு தப்பினர்.

    இது குறித்துழ சுந்தர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்ப ட்டது.

    தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர்.

    திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கபிஸ்தலம் மந்தகார தெருவை சேர்ந்த செந்தில் ராம்குமார் (47), கோவிந்தகுடி கம்மாளர் தெருவை சேர்ந்த குழந்தைவேலு (24), பட்டீஸ்வரம் நந்தமேட்டை சேர்ந்த வெற்றி (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியு ள்ளனர்.

    • அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    உடுமலை:

    உடுமலைஅருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 49 ).இவர் ஐஸ்வர்யா நகர் சாலையில் நின்ற போது ஏரி பாளையத்தைச் சேர்ந்த அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    • இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.
    • நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை கார் ஜன்னலில் இருந்து அள்ளி வீசினார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். இதில், தனது பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பணத்தை அள்ளி வீசியதாக மெக்கர்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அள்ளி வீசிய பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 16 கோடி ஆகும்.

    மேலும், இதுகுறித்து மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கைல் கென்னடி கூறுகையில், "நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமான நிலைக்கு பங்களிக்கிறது" என்றார்.

    • வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 6-வது வார்டு ஓடைக்காரத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ஷீலாதேவி(34). இவர் கூடலூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிவேல்பிள்ளை தெருவில் நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து ஷீலாதேவி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது வெள்ளக்கோட்டை பகுதியில் 6 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இதையடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார், சூதாடிய வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (வயது 31), சோலையப்பன் (41), கீழத்தெரு ரமேஷ் (52), திருச்சுழி ரூபன் (41), அன்பு நகர் ஆறுமுகம் (40), முஸ்லிம் கிழக்கு தெரு பாதுஷா (35) ஆகியோரை கைது செய்தனர்.

    • நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம் பாளையத்தை சேர்ந்த 3பேர் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டும், நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்போலீஸ் நிலையத்தில்புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்நேற்று பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்உடுமலை சாலையில்மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோட்டில் கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஒப்படைத்தார்.
    • தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த 26-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது தபால்தந்தி நகருக்கு செல்லும் வழியில் அவர் வைத்திருந்த பணப்பையில் இருந்து ரூ.36 ஆயிரத்து 500 தவறி விழுந்துவிட்டது. இதுபற்றிஅறிந்த நவநீதகிருஷ்ணன் அவர் சென்ற வழியில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பொன்னுராஜ் என்பவர் ரோட்டில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்தார். அதில் ரூ.36 ஆயிரத்து 500 இருந்தது. அதனை அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அது நவநீதகிருஷ்ணன் தவற விட்ட பணம் என்பது தெரியவந்ததால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவற விட்ட பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த பொன்னுராஜை, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.

    • விருதுநகர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மதுராபுரி என்ற கம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவரும், இவரது மனைவியும் நூற்பாலைகளில் வேலை செய்கின்றனர். சம்பவத்தன்று செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேலு(வயது64). இவர் சம்பவத்தன்று அடகு நகைகளை மீட்க ரூ.70 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அடுத்த மாதம் தான் நகையை மீட்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணத்துடன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.

    அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

    • சரவணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.
    • காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சர வணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.

    இன்று காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.22,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஜோதிமணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    இதே போல் அழகாபுரம் நகரமலை அடிவாரம் சரவணா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. காவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 11 பவுன் தங்க மோதிரம், ரூ.5500 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்கள் கற்றுத்தரப்பட்டது.
    • ஏ.டி.எம். பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை குறித்து கற்றுத்தரப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை தெரிந்து கொள்ள கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களில் சுமார் 780 கற்போர்கள் பயின்று வந்தனர்.

    இவர்களின் கற்றலை மதிப்பிடும் வகையில் 38 மையங்களில்அடிப்படை எழுத்தறிவு தேர்வுநடை பெற்றதுதேர்விற்கு முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியரும் அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர்

    தேர்வு நடைபெற்ற மையங்களை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி ஐசக் ஞானராஜ் கவிதா ஆகியோர் மையங்களை பார்வையிட்டனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறும் போது முழுவதும் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படைத் திறன்களை கற்றுத் தரப்பட்டது.

    ஏடிஎம் பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, அஞ்சல் நிலையங்களில் பணம் செலுத்தும் முறை, ஆகியவை கற்றுத் தரப்பட்டது.

    இத்தேர்வை கோயில்கள் பள்ளிகள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று தேர்வு வைக்கப்பட்டது இத்தேர்வில் கற்போர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர் என்றார்.

    ×