search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • ஏழுமணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
    • ஹேமந்த் சோரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்டதும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பிரேக். வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போர். ஒவ்வொரு கணமும் நான் போராடினேன். ஒவ்வொரு கணமும் போராடுவேன். ஆனால், சமரசம் செய்ய மண்டியிடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ நான் பயப்படமாட்டேன். நான் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது.
    • சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக நேற்றிரவு அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரும் ராஜினாமா செய்து கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

    இதனால் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    • டெல்லியில் நேற்றுமுன்தினம் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
    • சொகுசு கார் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். பணமுறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிம் விசாரணை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்குள் ஆஜராகி பதில் அளிக்கும்படி 10-வது முறையாக சம்மன் அனுப்பியது.

    இன்று ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 13 மணி நேரம் சோதனை நீடித்துள்ளது. அப்போது சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், தனக்கும் தன்னைத் சார்ந்த சமூகத்தினருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக எஸ்.சி./எஸ்.டி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயல்களால் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சல், உளவியல் பாதிப்பை எதிர்கொள்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளர் நான் இல்லை. அதேபோல் கைப்பற்றதாக கூறப்படும் பணம் என்னுடைய அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று ராஞ்சியில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள் மொராபதி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஜார்னா பால் கூறுகையில் "ஹேமந்த் சோரன் குறிவைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் பழங்குடியினர் என்பதால். ஆனால் அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவருக்காக எந்த எல்லை வரும் செல்வோம். அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடன் நாங்களும் சிறைக்குச் செல்வோம்" என்றார்.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து, பிப்ரவரி 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடரந்து குற்றம்சாட்டி வருகிறார்.
    • இருந்த போதிலும் அமலாக்கத்துறை தொடந்து சம்மன் அனுப்பி வருகிறது.

    டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனால் அவருக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், முதல் சம்மனை திருப்பி அனுப்பினார். அதன்பின் தொடர்நது இரண்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

    சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் ஆஜராக நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி பரபரப்பான தகவலை வெளியிட்டார். ஆனால் சோதனையும் நடத்தப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில்தான் 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வருகிற 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுவாரா? என்பது சந்தேகம்தான்.

    • செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
    • கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.

    ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

    கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

    • மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.
    • ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.

    ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை மந்திரியும், பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று காலை ஆஜர் ஆனார். லாலு பிரசாத் யாதவ் மூத்த மகளும், எம்.பி.-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

    சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்கு ஆஜர் ஆவதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் வெளியே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக, பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார். அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில், லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
    • ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.

    ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவருடன், மூத்த மகளும் ராஜ்யசபா எம்பி-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

    லாலு பிரசாத்-ன் விசாரணைக்கு முன்னதாக ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மிசா பார்தி, "அமலாக்கத் துறை விசாரணைக்கு நாங்கள் வருவது புதிதல்ல. பாஜக-வின் பின்னால் இல்லாதவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்பட்டு வருகிறது. விசாரணை அமைப்புகள் எப்போதெல்லாம் எங்களை அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஜனவரி 31வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம் என ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

    இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.

    அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    • எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம்.
    • அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை.

    8-வது முறையாக அனுப்பியபோது, என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என்றார்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த சோரன் கைது செய்யப்படலாம். இதனால் அவரது மனைவியை முதலமைச்சாராக்க முயற்சி செய்து வருகிறார் என செய்திகள் பரவிய நிலையில், இந்த செய்தியை திட்டவட்டாக மறுத்து வந்தார் ஹேமந்த் சோரன்.

    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
    • முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்கள் அனுப்ப பட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், 8 வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, தனது வீட்டிலேயே வைத்து தன்னை விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

    அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக-வினர், " ஏழாவது சம்மன் வரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஹேமந்த் சோரனின் ஆணவம், எட்டாவது சம்மனில் மறைந்தது" என விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியினர், "பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது. இதற்கு முன்பே ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது" என கூறினர். 

    ×