search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150339"

    • கொத்தடிமையாக இருந்த பீகார் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த கீழான் மறைநாடு கிராமத்தில் ஒரு தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பேப்பர் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரீஷ் (வயது17), சுரேஷ்குமார் (13) ஆகிய 2 சிறுவர்கள் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • ஏரியை ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.
    • போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரம்பட்டி அருகே உள்ள சூரக்கல்மேட்டில் குண்டல் குட்டை ஏரி உள்ளது.

    இந்த ஏரி 24 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிலத்தில் 10 ஏக்கா் நிலத்தை அருகில் வசிப்பவா்கள் ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.

    இதையடுத்து ஏரி நில ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறையினா் நோட்டிஸ் அனுப்பினா். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளாததால் நேற்று ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய்த் துறையினா், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா். பின்னா் ஏரியில் புதிதாக கரை கட்டப்பட்டது.

    • கழிவு நீர் தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்கா அருகில் கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

    அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

    இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டி லிருந்து சவாரிக்கு செல்வ தாக மனைவி மேரி லதா விடம் கூறிவிட்டு சென் றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இதை யடுத்து அவரது மனைவி மேரிலதா கிறிஸ்துராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    கிறிஸ்துராஜ் மாயமானது குறித்து மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கிறிஸ்துராஜ் ஆசா ரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதியில் ரோட்டோரத்தில் ரத்த காயங்களுடன் கிடப் பதாக நேசமணி நகர் போலீ சுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    காயங்களுடன் கிடந்த கிறிஸ்துராஜை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .

    கிறிஸ்துராஜ் ரத்த காயங் களுடன் கிடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவையும் போலீசார் மீட்டு நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கிருஷ்ணராஜை தாக்கியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சவாரிக்கு அழைத்து சென்று கிறிஸ்துராஜை யாராவது தாக்கினார்களா? முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. கிறிஸ்துராஜ் ரத்த காயங்களுடன் கிடந்த பகுதி யில் உள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.
    • சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் ஆலத்தூர் ஆய்வாளர் தமிழரசி, காரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் புதுக்குறிச்சி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


    பத்திரமாக காப்பு காட்டில் விடப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மண் சாலையில் நேற்று அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற இளைஞர்கள், அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

    • காப்பகத்தில் ஒப்படைப்பு
    • ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.

    கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் 28 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது.
    • அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முருகன் கோவில் பின்புறம் 28 சென்ட் அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கரூர் அல்லது குளித்தலை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். கிருஷ்ணராயபுரம் தாலுகா மருத்துவமனை கோவக்குளத்தில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லை. எனவே தற்போது பேரூராட்சி அலுவலர்களால் மீட்கப்பட்ட 28 சென்ட் நிலத்தில் மருத்துவமனை அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் வட மாநில தொழிலாளி தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    ஒடிசா மாநிலம் ஜெரபேடா அடுத்த கஞ்சிரா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ்குமார் பேரா (வயது 38). இவர் தனது நண்பர்களுடன் சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை சரோஜ்குமார், தான் தங்கி இருந்த வீட்டு கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சரோஜ்குமார் மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகார் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரோஜ்குமாருக்கு ஊர்வசி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

    • மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கலைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கலைச்செல்வியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்
    • கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் குன்னம் ஆய்வாளர் சுசிலா, கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்ததில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அருகே ததேயபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ் மற்றும் நீரோடி பகுதியை சேர்ந்த நபர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 5, பேர் என மொத்தம் 7 பேர் லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    படகு 30 நாட்டிங்கல் தொலைவில் சென்றபோது படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்தது. இதில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இதை பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்கள் கண்டனர் .உடனடியாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அனீஸ் மற்றும் உடன் சென்ற நபர் நேற்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.

    ×