search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • வேலூரில் நாளை நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.
    • உள்துறை மந்திரி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

    வேலூரில் நாளை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். உள்துறை மந்திரி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

    • மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக உயர்ந்துள்ளது.
    • ரூ.7 லட்சம் வரையிலான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9 ஆண்டுகளில் புதிய கல்வி நிறுவனங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகள் வழங்கியும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றி உள்ளார்.

    மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக உயர்ந்துள்ளது.

    ரூ.7 லட்சம் வரையிலான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. காப்பீடு, மலிவான பயணம் என பிரதமர் மோடி நடுத்தர வர்த்தகத்தினரை நிதி ரீதியாக ஆதரித்து வருகிறார்.

    இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.
    • கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

    இதன்படி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.

    இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட்ட இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் களம் இறங்க முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் வகையிலேயே அமித்ஷாவின் சென்னை பயணம் அமைந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானத்தில் இன்று இரவு 9 மணி அளவில் அமித்ஷா சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் அவர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குகிறார்.

    அங்கு வைத்தே அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் நள்ளிரவு வரை பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது அமித்ஷாவின் வழக்கம்.

    அந்த வகையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    இதன் பின்னர் நாளை 2 கூட்டங்களில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதில் ஒன்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். இன்னொன்று பொதுக்கூட்டமாகும். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகால் மண்டபத்தில் வைத்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    அங்கு சுமார் ஒரு மணி நேரம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அமித்ஷா பின்னர் கிண்டி ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

    மாலையில் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்காக நாளை பிற்பகலில் அமித்ஷா ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார்.

    பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ள வேலூர் கூட்டத்தில் பேசும் போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டம் போட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    மாநில அளவில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு தேவையான, செல்வாக்கு மிக்க தொகுதிகளை கேட்டுப்பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே அமித்ஷாவின் இலக்காக உள்ளது.

    குறிப்பாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் தென் சென்னை போன்ற பாராளுமன்ற தொகுதிகளை கேட்டு பெற்றால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்பதும் அமித்ஷாவின் கணக்காக உள்ளது.

    தென்சென்னை தொகுதியில் இதற்கு முன்பு பாரதிய ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் தனித்து போட்டியிட்டு 1 லட்சம் ஓட்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று வேலூரிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். இதன் காரணமாகவே சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை வேலூரில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் முடிவு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் உள்ள தனது வீட்டில் கால் வலிக்காக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். அவர் இன்று மாலை அல்லது நாளை காலையில் அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

    ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்தித்து பேசுவாரா? என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக அமித்ஷா முன் கூட்டியே ஆலோசனை கூட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்வது அரசியல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேகத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    • அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது.

    வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

    வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்த யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.

    இதில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமித்ஷா காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.
    • வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (8-ந்தேதி) சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந் தேதி (ஞாயிறு) தமிழகம் வருகிறார்.

    11-ந்தேதி காலையில் டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து பள்ளிக்கரணை வருகிறார்.

    அங்கு தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது.

    எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது. வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்

    சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

    வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கொச்சி வந்தார்.

    கொச்சியில் அவர் திருச்சூர் கத்தோலிக்க பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

    ஆனால் இந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை மத்திய மந்திரி அமித்ஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் கேரளாவுக்கு வரும்போது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் கத்தோலிக்கர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன்பின்பு கேரளாவில் உள்ள சில கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள். அதன்பின்பு பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த நிலையில் கேரளா வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசியிருப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    • அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.

    சென்னை:

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வலைதளத்தில் நடக்கும் மோதல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் 'அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

    அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

    தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கும் பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவற்ற தலைவர்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும்.

    அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது.

    பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்.
    • மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடிகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 4 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு சென்றார். அங்கு மைதேயி, குகி சமூக தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். பிரச்சனைக்கு தீர்வு காண உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மோரே பகுதிக்கு அமித்ஷா நேற்று சென்றார். இந்த பகுதி இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ளது.

    அதை தொடர்ந்து காங்போக்பி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று குகி சமூகத்தினரை சந்தித்தார். அந்த பகுதியில் உள்ள சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்தார். இம்பாலில் மைதேயி சமூகத்தினர் தங்கியுள்ள நிவாரண முகாமுக்கும் அவர் சென்றார்.

    இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இம்பாலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக நிவாரண முகாம்களில் உள்ள குகி மற்றும் மைதேயி குழுக்களை சந்தித்து விவாதித்தேன்.

    கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐேகார்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை விரைவில் அமைக்கப்படும்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும். மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இங்கு நிலவும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும். மணிப்பூர் கவர்னர் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட அமைதி குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் அனைத்து அரசியல் கட்சிகள் மைதேயி, குகி சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்று உள்ளனர்.

    கலவரத்தில் காயம் அடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கு நிவாரணம் நாளை அறிவிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால் உடனே ஒப்படைக்க வேண்டும். மணிப்பூர்-மியான்மர் எல்லை பாதுகாப்பாக இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
    • அப்போது அவர், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்கள் என்றார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாமே? - அமித்ஷாவுக்கு ஒவைசி கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், தெலுங்கானா அரசு கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒப்புதல் அளித்து வருகிறது. ஆனால், ஸ்டீயரிங் என் கையில் உள்ளது என்று அவர் (அமித் ஷா) கூறுகிறார். ஸ்டீயரிங் என் கையில் இருந்தால், உங்களுக்கு ஏன் வலி ஏற்படுகிறது?

    பழைய நகரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடியுமா என தெரிவித்தார்.

    • செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை.
    • சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை. சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களின் நடத்தையை காட்டுகிறது. நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை காங்கிரஸ் ஊன்று கோலாக்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×