search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158928"

    • தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 1989-92-ம் ஆண்டு வரை கட்டிடவியல், மின்னியல், மின்ணணுவியல், எந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் தற்போது 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே கல்லூரியில் படித்த வகுப்பறையிலேயே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வர் தங்கமணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பா ளர்களாக 1989-92-ம் ஆண்டு பயிற்றுவித்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரமுடியாத முன்னாள் மாணவர்கள் இணையம் மூலமாக கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிரிந்து கொண்டனர்.

    முடிவில், கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை முன்னாள் மாணவர்கள் கருத்தரங்கத்திற்கு அமைத்து கொடுத்தனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
    • பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.

    தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் உள்ள தேரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரைவீரன், வெடி கார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

    நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வாணவேடிக்கையுடன் அருகிலுள்ள காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர். அப்போது கோவிலை சேர்ந்த சேர்வை காரர்கள் (பூசாரிகள்) தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

    அந்த சமயத்தில் காட்டுக் கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலத்துடன் கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். பின்னர் சாட்டை அடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர்.

    அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்துக்கருப்பு, பில்லி சூனியம், பேய் பிடித்தல் ஆகிய வற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். #tamilnews
    ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. #RSS #FutureBharat #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.

    இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RSS #FutureBharat #RahulGandhi
    குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

    குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ-மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×