search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானியம்"

    • மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சலி ஆகியவைகள் 50 சதவீத மானியத்தில் மலிவான விலையில் கிடைக்கும்.
    • விதைகளை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் விநியோகம் ெசய்ய அறிவுறுத்தினார்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டாரத்தில் சம்பா, தாளடி இலக்காக சுமார் 14000 ஹெக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், குடவாசல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

    அப்போது சம்பா,தாளடி சாகுபடி க்கேற்ற நெல் விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கு ஏற்ற ரகமான விதைநெல் மற்றும் விதைநெல் இருப்பு நிலையை ஆராய்ந்த அவர் விதை நெல்லை மிகத் தூய்மையாக பரா மரித்து கிடங்கினைசுத்த ப்படுத்தி,பூச்சி மேலா ண்மையினை மேம்படுத்தி உரிய காலத்தில் விவசாயி களுக்கு விற்பனை செய்திட வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், நெல் நுண்ணூ ட்டம், பயிர் நுண்ணூட்டம் ஆகியவற்றின் இருப்பு நிலையை ஆராய்ந்தார்.

    நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் ஆத்தூர் கிச்சலி ஆகியவற்றின் இருப்பு நிலையை ஆராய்ந்த அவர், 50 சதவீத மானியத்தில் மலிவான விலையில் கிடைக்கும் இவ்விதைகளை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் விநியோகம் செய்திட அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வட்டார உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர் முருகன், தாமரைச்செல்வன் மற்றும் கிடங்கு மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
    • கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பகுதிவேளாண் உதவி இயக்குனர் திலகவதி செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது,

    தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக மரபுசார் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 21- 22 ம் நிதி ஆண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    அதன்படி அறுபதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என்பதால் இந்த மரபு சார் நெல் ரகங்களை திரட்டி பல மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 33 அரசு விதைப் பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

    இவ்வாறு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுனி, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய ரகங்களில் கருப்பு கவுனி மற்றும் கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் மட்டுமே விவசாயிக்கு வழங்கப்பட உள்ளதுமதுக்கூர் வட்டாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 12.50 என்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக அமைச்சர் அறிவுரைப்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அறிவுரைபடியும் பாரம்பரிய விதை நெல்கள் உற்பத்தி செய்யப்பட்டு உண்மை நிலை விதைகளாக மரபு சார் நெல் ரகங்கள் இனத்தூய்மையுடனும் விதை தரத்துடனும் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் மேற்கண்ட பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி விதைகளை தங்களுக்கு என சேமித்து வைக்கவும் அரிசி ஆக்கி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய ரகங்களும் 500 கிலோ மட்டுமே வரப் பெற்றுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ரூ.138.39 கோடி மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #SalemCollector
    சேலம்:

    வேளாண்மை துறை மானியம் குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் 161 நீர் வடிப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 72578 எக்டர் நிலப்பரப்பில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளில் நிலம் சமன்படுத்துதல், கல்வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை, கசிவு நீர்குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல், பண்ணை உற்பத்தி பணிகளில் பழமரக்கன்றுகள் நடவு செய்தல், பண்ணைக்கருவிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளில் தையல் எந்திரங்கள் வழங்குதல், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் ஆகிய 10,112 பணிகளுக்காக ரூ.56.10 கோடி செலவிடப்பட்டது.

    வோளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் 5 எச்பி, 7.5 எச்பி மற்றும் 10 எச்பி திறனுடைய திறந்தவெளி கிணறு மோட்டார் பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்புகள் மாநில அரசின் நிதியிலிருந்து 40 சதவீதமும், மத்திய அரசின் நிதியிலிருந்து 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் மூலம் 30 சதவீதம் என 90 சதவீதம் மானியமாகவும் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதமுமாக இந்த மோட்டார் பம்புகள் வழங்கப்படுகிறது.

    வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக அனுமதிப்படும் மானிய தொகையாக 35 பிஎச்பி டிராக்டர் ரூ.63,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (3 எச்.பி. மேல்) ரூ.20,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (5 எச்பி வரை) ரூ.25,000 மானியமும், கலப்பை (5 எச்.பி) ரூ.19,000 மானியமும், கலப்பை (9 கொளு) ரூ.44,000 மானியமும், டிஸ்க் கலப்பைக்கு ரூ.44,000 மானியமும் உள்பட பல மானியமும் வழங்கப்படுகிறது.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், செரி ரோடு, சேலம்1. என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். #SalemCollector
    மத்திய அரசு மானித்துடன் கூடிய விலையில் வேளாண் கருவிகள், இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    பெரம்பலூர்:

    மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் 8 குதிரைத்திறன் முதல், 70 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப் பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.

    இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை சம்பந்தப்பட்ட விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மானிய தொகை வரவு வைக்கப்படும்.

    மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இணையதள முகவரியில் விவசாயிகள் வேளாண் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானிய விலை வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

    புகைப்படம் 1, பான் கார்டு ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலவரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்து மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ.2.83 அதிகரித்தது. #Cylinder #Subside
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் உடைய மற்றும் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான, சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.

    இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரித்து உள்ளது. இதன் மூலம், ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை இனி ரூ.484.67 ஆக உயர்கிறது.

    இதைப்போல மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

    உள்நாட்டு மானியமில்லா சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஜி.எஸ்.டி. அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் திடீர் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வு நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy #Tamilfilms
    சென்னை:

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி. மாசிலாமணி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இத்தேர்வுக் குழுவினர், 2007-ம் ஆண்டுக்கு 14 திரைப்படங்களுக்கும், 2008-ம் ஆண்டுக்கு 18 திரைப்படங்களுக்கும், 2009-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2010-ம் ஆண்டுக்கு 21 திரைப்படங்களுக்கும், 2011-ம் ஆண்டுக்கு 17 திரைப்படங்களுக்கும், 2012-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2013-ம் ஆண்டுக்கு 12 திரைப்படங்களுக்கும் மற்றும் 2014-ம் ஆண்டுக்கு 23 திரைப்படங்களுக்கும் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு 149 திரைப்படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.

    தேர்வு செய்யப்பட்ட 149 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் மானியத்தொகைக்கான காசோலைகளை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 10 தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியமாக தலா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilfilms
    விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

    கமுதி:

    கமுதி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் பொன் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது. மகளிரணி நிர்மலா தேவி வரவேற்றுப் பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் கணபதி, கமுதி நகர் தலைவர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அழகு மலை, நல்லுச்சாமி, போஸ், ராம்தாஸ் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் மானியம் வழங்குவதிலும், விவசாய கடன் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுகிறது.

    விவசாயிகளின் நலனில் வேளாண் மைத்துறை முறையாக சரியாக செயல்படுவது இல்லை.

    மேலும் சில தொண்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என பலரும் குற்றம் சாட்டினர்.

    இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    நடுத்தர வருவாய் பிரிவினர் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வீட்டின் பரப்பளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. #PMAY
    புதுடெல்லி:

    ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-1 என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு ரூ.9 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் முதல் பிரிவினர் 4 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் 2-ம் பிரிவினர் 3 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் ஆவர். அதாவது, அவர்களுக்கான வட்டியில் மேற்கண்ட சதவீதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த வட்டி மானியம் பெற தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வாங்கும் வீட்டின் சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புற பரப்பளவு (கார்பெட் ஏரியா) 120 சதுர மீட்டராகவும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வாங்கும் வீட்டின் உட்புற பரப்பளவு 150 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர்வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர்வரையும் இருக்கலாம்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் அதிகமானோர் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சலுகையால், மெட்ரோ நகரங்களை ஒட்டிய புறநகர்கள் மற்றும் சிறு நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று கட்டுமான தொழில் நிறுவன அதிபர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைவான வருமானத்துடன் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோருக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் பிறக்கும் என்றும், கட்டுமான தொழில் வளரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 
    ×