search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடகாவில் கபினி அணையிலிருந்து இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வந்தடைந்தது.

    காலை முதல் 4500 கன அடியாக வந்த நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கபினி அணையிலிருந்து 20,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,260 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.

    • அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன.
    • 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன

    தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

    தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுமாக மொத்தம் 58 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது. இதைப்போல நாடு முழுவதும் 706 மருத்துவக் கல்லூரிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் 113- ஐயும் சேர்த்து மொத்தம் 819 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரிக்க இருக்கிறது.

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.

    கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

    அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


    • புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
    • தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.

    இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.

    அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
    • அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.

    சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

    அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.

    நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது.

    பள்ளிக் கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க போவது கிடையாது.

    மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. சமூக நீதி படை என்ற பரிந்துரை குறித்து முழு விவரம் இல்லை. பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
    • அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    "சாகர் கவாச்" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம்-புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.

    இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்ச ரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை

    சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்

    மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.

    இதேபோல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    நாகை மாட்டம்

    நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதி களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.
    • பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ம் தேதி தமிழகம் வருகை தர இருந்தார்.

    சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைப்பதற்காக ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

    நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார்.
    • கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதன்பின்னர் தெலங்கானா மாநில ஆளுநர் பதவி வழக்கங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதிவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

    தமிழிசை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக இருந்த அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் இந்நாள் அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி பாஜகவை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பணியில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் பேச்சுகள் சென்றது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

    இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில்தான் தமிழக பாஜகவின் அந்நாள் தலைவரான தமிழிசைக்கும் இந்நாள் தலைவரான அண்ணாமலைக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தமிழிசை முன்வைத்துள்ளார்.

    சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழிசை கூறியதாவது, கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

    சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ள்ளார். மேலும் வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழிசையின் இந்த கருத்துக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
    • இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    கோவை:

    கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு, மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளி த்த பேட்டியில் கூறியதா வது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஒட்டு மொத்த தமிழகமுமே கலை ஞரை கொண்டாடி வருகி றது. தமிழகத்தின் வளர்ச்சி க்கும், இந்தியாவில் ஜன நாயகம் காப்பாற்றப்படுவதற்கும் முதல் காரணம் கலைஞர் கருணாநிதி தான்.

    ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கருணாநிதி ஆவார். இன்றைய நாளில் அவரை நாம் கொண்டாடி வருகி றோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுக ளில் எண்ணற்ற மகத்தான சாதனைகளையும், மக த்தான நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும். இந்த வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சியையும், பல மடங்கு அற்புதமான திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டுவார்.

    தேர்தலின் போது கொடு க்கப்பட்ட வாக்குறுதியை போல கோவை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். சிறு, குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை, கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    சென்னையிலும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த கோடை வெப்பம், நேற்று சற்று தணிந்தே காணப்பட்டது. மாலை நேரங்களில் மேகமூட்டங்கள் தென்பட்டன. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீட்டர், கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவானது.

    இதற்கிடையே தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், வருகிற 5-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேபோல் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வஙகக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    ×