search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையை பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
    • மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட திருமலையப்பபுரம் ஊராட்சியின் கீழ் 6 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று கூட்டம் நடைபெற இருப்பதாக பஞ்சாயத்தில் இருந்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதன்படி வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையையும் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.

    இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென புதிய பூட்டுகளை வாங்கி வந்து அறைகளை பூட்டி சென்றுள்ளார். இதனால் இன்று மனுக்கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனுக்கும், பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இருப்பதை தலைவரிடம் தெரிவிக்காதது தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பணி முடித்து ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென வங்கியின் அலாரம் அலறத் தொடங்கியது. தொடர்ந்து அலாரம் அடிக்கவே அந்தப்பகுதி மக்கள் இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாரம் அடித்தபடியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தினர்.

    இந்த சம்பவம் நேற்று இரவு திருமங்கலம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் கார் பேரணியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.
    • தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை களை விளக்கி கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை முடி யும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் மாநில பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜன்,

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பேரணியின் ஒருங்கிணைப்பாளர் நயினார் பாலாஜி, மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுபாஷ், கன்னியாகுமரி நகர தலைவர் கனகராஜன் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் வட்டார தலைவர்கள் சுயம்பு, சுயம்புலிங்கம் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துராமன் மீனாதேவ் உள்பட திரளான பாரதிய ஜனதாவினர் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந் ததும் குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பாரதிய ஜனதாவினரிடம் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டிருந்த பாரதிய ஜனதாவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியாக பாரதிய ஜனதா தலைவர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கார் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் கார் பேரணியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். அவர்களை காந்தி மண்டபம் முன்பு இருந்து பாரதிய ஜனதா கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

    • போலீஸ் குவிப்பு-சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு
    • போலீசார் பலத்த பாதுகாப்பு

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் அருகே மேக்கோடு என்ற இடத்தில் புதுக்கடை பாரதிய ஜனதா பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது சில அமைப்புகளை சேர்ந்த 4 பேர் தாக்குதல் நடத்தினர்.

    இதில் தொடர்புடைய நபர்களை உடனே கைது செய்ய கேட்டு திங்கள்நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது தொடர்பாக குற்றவாளி களுக்கு உதவி செய்ததாக திருவிதாங்கோடு, கோட்டார் பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள் நகரில் நாளை (8-ந் தேதி) காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதற்கிடையில் போலீஸ் துறை யினர் ஒருதலை பட்சமாக செயல் படுவதாக கூறி பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் திங்கள் நகரில் நாளை காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 17-ந் தேதி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர்ந்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு கிராமத்தில் பெரியாரின் முழு உருவச் சிலை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினர் , பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×