search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169049"

    • மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது.
    • குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது.

    அசாம் மாநிலத்தில் போலீசார் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியாத போலீசாருக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தை தொடர்ந்து அரியானாவிலும் உடல் எடை அதிகம் கொண்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

    குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், இதன்மூலம் குற்றமல்லதா மாநிலமாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

    உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவல்துறையினர் 3 மாதங்களில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில் அரியானா அரசும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸ்சை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸ்சை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
    • புதிதாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் பகல்-இரவு நேரங்களில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போலீசார் ேராந்து செல்வதற்கு வசதியாக புதிதாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் காவல் நிலையத்திற்கு 2 வாகனங்கள், காங்கயத்திற்கு 2, பல்லடம்-2, உடுமலைபேட்டை-2, திருமுருகன்பூண்டி-2, வெள்ளகோவில்-2 என காவல்நிலையங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை இன்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., சசாங் சாய் அந்தந்த காவல் நிலைய போலீசாரிடம் வழங்கினார். இதன் மூலம் எளிதாக ரோந்து பணியை மேற்கொள்ள முடியும் என போலீசார் தெரிவித்தனர்.  

    • வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
    • கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (65) விவசாயி, இந்த நிலையில் இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சை நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ன வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.

    • மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்தார். அவரால் நடக்க முடியவில்லை. கையில் சிறிய கைத்தடியை அவர் வைத்திருந்தார். இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டு தேசிங்கு அங்கு விரைந்து சென்றார். அவர் மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து உதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    அவரது ஆக்சிஜன் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டும் சரியான அளவில் இருந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தேவை இல்லை என்று தெரிவித்தனர். இதனால் மூதாட்டியை போலீசார் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். இதன்படி வடபழனியில் உள்ள காப்பகத்தில் மூதாட்டி சேர்க்கப்பட்டார். போலீசாரின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    • தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை நகரில் ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜர்புரம் கவுதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

    போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கி உள்ளது. இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்கு கோவையிலிருந்து போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜிமோகன் என்பவர் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே ஓடினார். அந்த வீடியோவில் எனது கை, கால்கள் நன்றாக உள்ளது. ஆனால் போலீசார் இன்று என்னை பிடித்து விடுவார்கள் என வீடியோ பதிவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதையடுத்து மற்ற 3 பேரும் அங்கு இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அவர்களும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனையடுத்து போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ரவுடிகள் கும்பலை சேர்ந்த புள்ளி பிரவீன், பிரசாந்த் மற்றும் அமர்நாத் என தெரியவந்தது.

    இதனை அடுத்து கைதான 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • மது பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் கீழ விளையையை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35) கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி சுஜிதா (27) என்ற மனைவியும், 2 குழந்தை களும் உள்ளனர். சுஜிதா, குமரி மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேஷ், கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் மறு வாழ்வு மையம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பிறகு சில நாட்கள் மது பழக்கத்தை மகேஷ் கைவிட்டுள்ளார். ஆனால் சமீபகாலமாக மீண்டும் அவர் மதுவுக்கு அடிமையானார். இதனை மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மகேஷ் மன வேதனை அடைந்தார். மதுவை கைவிட முடியாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். இதனைக் கண்ட உறவினர்கள், மகேசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து இரணியல் போலீசில், சுஜிதா புகார் அளித்தார். அதன் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர்.
    • சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கி உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வந்தனர்.

    இந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் வாகன ஆவணத்தை கேட்டனர். அப்போது இருவரும் இது எங்கள் சித்தப்பா வாகனம் என்றும், ஆவணங்கள் வீட்டில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

    போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எங்களை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். உடனே வாருங்கள் என்று கூறினார்.

    அப்போது சம்பவ இடத்துக்கு பெண் ஒருவர் வந்தார். அவரது கணவரும் உறவினருமே போலீசில் பிடிபட்டிருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் விடுவிக்குமாறு கூறி அந்த பெண் அதிரடி காட்டினார். போலீசாருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட அவர் ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இதனை காவலர் வெள்ளதுரை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த தொப்பியால் திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தக்கலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
    • 23 வயது இளம்பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த வர் ஜெபின் (வயது 27), மெக்கானிக் கல் என்ஜினீயர்.

    வெளிநாட்டில் பணி யாற்றி வந்த இவர், 23 வயது இளம்பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலியுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர், உறவினர்கள் மூலம் திருமணம் செய்ய பெண் கேட்டும் உள்ளார்.

    இந்த நிலையில் ஜெபின் மீது, பெண்ணின் தந்தை தக்கலை போலீசில் திடீ ரென புகார் கொடுத்தார். அதில், ஜெபின் தனது வீட்டில் அத்து மீறி நுழைந்ததாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் வெளியிட்டது, அத்து மீறி வீட்டில் நுழைவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் தக்கலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.

    இந்த நிலையில் கைதான ஜெபின், தன்னை காதலித்து விட்டு இளம் பெண் ஏமாற்றியதாக கண்ணீர் விடுத்து வருகிறார்.

    இது பற்றி அவரது தரப்பில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    நானும் இளம்பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கல்லூரி செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந் தோம். ஷாப்பிங், டேட்டிங், என பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்தோம். அப் போது காதலிக்கு விலை யுயர்ந்த பொருட்களை பரிசாக வாங்கி கொடுத் துள்ளேன்.

    இன்ப சுற்றுலாவாக கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளோம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு நான் (ஜெபின்) வேலைக்காக வெளிநாடு சென்றேன். நான் காதலித்த பெண்ணும் தக்கலையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சக நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

    இதை அறிந்து அவரை கண்டித்தேன். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர், என்னுடன் பேசுவதை தவிர்த்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நான் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினேன். தொடர்ந்து காதலி வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுப் பார்த்தேன்.

    ஆனால் அவரின் பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்காமல் உறவினர்களை திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் நான் காதலித்த பெண் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீ ஒரு சைக்கோ. உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது. என்னை மறந்து விடு. எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே என கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற நான், காதலியின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் காதலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டி நியாயம் கேட்டேன். ஆனால் என் மீது புகார் கொடுத்து கைது நடவடிக்கை எடுத்துவிட்ட னர்.

    மேற்கண்ட தகவல்களை போலீஸ் விசாரணையின் போது ஜெபின் தெரிவித்துள் ளார். இது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    • போக்குவரத்தில் குழப்பம் எழுந்தது
    • உடனடியாக சரி செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

    கேகே நகர்.

    திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவிற்கு உட்பட்டது மன்னார்புரம் பகுதி. இந்த பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் போக்குவரத்து சிக்னலில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சிக்னல் கட்டுப்பாடு இன்றி விபத்து ஏற்படும் வகையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து மாலைமலர் சார்பில் அரியமங்கலம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உதவிஆய்வாளர் சீனிவாசன் உடனடியாக சிக்னல் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வழைக்கப்பட்டனர். சுமார் இரவு 9:30 மணி முதல் சிக்னல் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அனைத்து சிக்னலும் சீரமைக்கப்பட்டு இன்று காலை முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் அப்பகுதியில் நடைபெறவிருந்த விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்படுத்திய காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து சென்றனர்.

    • போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மதுரை

    மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • பணமோசடி குறித்து 796 வழக்குகளும், நிலஅபகரிப்பு தொடர்பாக 400 வழக்குகள்
    • அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு வழக்குகள் 580 பதிவாகி உள்ளது.

    நாகர்கோவில், ஏப்.9-

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 5 வகையான வழக்குகள் பதிவாகின்றன. வேலை வாய்ப்பு மோசடி, வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றுதல் தொடர்பாக 400 புகார்களும், பணமோசடி குறித்து 796 வழக்குகளும், நிலஅபகரிப்பு தொடர்பாக 400 வழக்குகளும், வரதட்சணை கொடுமை மற்றும் அது சம்பந்தமான வழக்குகள் 100, அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு வழக்குகள் 580 பதிவாகி உள்ளது.

    இதில் தக்கலை சப்-டிவிஷனில் 200 வழக்குகளும் குளச்சல் சப்-டிவிஷனில் 150 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். குற்றங்கள் நடைபெறும் முன்பே தடுப்பது என முடிவு செய்து இதற்கு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் வந்தால் அதன் உண்மை தன்மையை அறிய விளம்பரம் வந்த அன்று போலீசார் நேரில் விசாரித்து மோசடியென தெரிந்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    13 ஆயிரத்து 900 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். இதில் 9,700 வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. மேலும் 4000 வழக்குகள் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிடும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 10,716 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 8000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. 2000 மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தால் உரிமையா ளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் புகார் அளிக்கலாம். இது வரை குமரி மாவட்டத்தில் 3 கந்து வட்டி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் அங்கீ காரம் இல்லாமல் செயல் படும் இயற்கை மையங்கள், மசாஜ் கிளப்புகள் குறித்து பொது மக்கள் புகார் அளிக்கலாம். அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும். இதற்காக பொது சுகாதாரதுறை இணை இயக்குனர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோருடன் இணைந்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள 33 போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×