search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது.

    சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சந்திராயன் 3 எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும்.

    இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும்.
    • லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம்.

    சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நிலவை காட்டி உணவு ஊட்டுவது தாய்மார்களின் காலாகாலத்து பழக்கம். பிஞ்சு மனதை அப்படி என்னதான் வசியம் செய்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை, நிலவை பார்த்ததும் மதிமயங்கும் குழந்தைகளும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுகின்றனர். பூமியின் துணைக்கோள் நிலவு என்பதாலோ என்னவோ, ஏதோ ஒரு ஈர்ப்பு இரண்டுக்கும் இடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும், நிலவு என்று நாம் அழைக்கும் சந்திரன் மீதான ஆராய்ச்சிகள் 1950-ம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஷியா இடையேதான் கடும் போட்டி நிலவியது. இரு நாடுகளும், சந்திரனின் வடதுருவத்தை ஆராய விண்கலங்களை அனுப்பியது. இதில், முதலில் வெற்றி பெற்றது ரஷியாதான் என்றாலும், 1969-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது.

    நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' அனுப்பியது.

    இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு சீறிக்கொண்டு புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் பயண திட்டம் 10 கட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது.

    முதற்கட்டமாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், உந்தப்பட்டு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. பூமிக்கு அருகே 170 கி.மீ. தூரத்திலும், தொலைவில் 36 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இவ்வாறு விண்கலத்தை சுற்ற வைக்கப்பட்டது 2-வது கட்டம்.

    பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், அதை வெகுதூரத்தில் உள்ள நிலவு நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதுதான் 3-வது கட்டம். கடந்த 1-ந்தேதி தொடங்கிய 3-வது கட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், சரிசமமாக இருக்கும் சம ஈர்ப்பு விசைப்புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதுதான் 4-வது கட்டம் ஆகும். இந்த பணி எளிதானது அல்ல என்றாலும், துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    காரணம் என்னவென்றால், சம ஈர்ப்பு விசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறி செல்லும் வாய்ப்பு இருந்தது. அதனால், அந்த பிசிறுகளை சரிசெய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பணிகள் 5-வது கட்டத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம ஈர்ப்பு விசை புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலம் கொண்டுவரப்பட்டது.

    அங்கிருந்து உந்து விசை கொடுத்து விண்கலத்தை தள்ளிவிட்டால், புவி ஈர்ப்பு விசை பிடியில் இருந்து, நிலவு ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 சென்றுவிடும். இதுதான் 6-வது கட்டம். இந்த பணிகள்தான் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு நடக்க இருக்கிறது.

    21 நாட்களுக்கு பிறகு, 6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது. அவை சரியாக நடக்க வேண்டும். இதை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் வந்தவுடன், நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கும். இதுதான் 7-வது கட்டம். அடுத்து, விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து, நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு விண்கலத்தை கொண்டுவந்து நிறுத்த வேண்டும். இது 8-வது கட்டம்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் உள்ளே உந்துகலம் (புரோபல்சன் மோடுலே) தரையிறங்கி கலம் (லேண்டர்) என்ற 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இதில், லேண்டர் உள்ளே ரோவர் கருவி இருக்கிறது. விண்கலத்தை அப்படியே நிலவில் தரையிறக்க முடியாது. முதலில், விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும்.

    அவ்வாறு பிரித்து, லேண்டரை அதிகபட்சம் 100 கி.மீ. முதல் குறைந்தபட்சம் 30 கி.மீ. வரை நீள்வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அதன்பிறகு கடும் சவாலான 9-வது கட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் இம்மாதம் 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நடக்க இருக்கிறது. அதாவது, லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது இந்த இடத்தில்தான். எனவே, சந்திரயான்-3-ஐ பத்திரமாக தரையிறக்க லேண்டரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பாதுகாப்பாக லேண்டரை தரையிறக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

    லேண்டர் தரையிறங்கியதும், அதில் உள்ள 4 சுவர்களில் ஒன்று, சாய்வுப் பலகைப் போல திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த வழியாக, லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம். அதன்பின்னர், ரோவர் தனது ஆய்வு பணியை தொடங்கும்.

    இத்தனை பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும். தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெறும்.

    அடுத்து, 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ரோபோக்களையும் அனுப்பி சோதனை செய்ய திட்டம் வகுத்துள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெற்றால், இந்தியாவும் சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இப்போது, பூமியில் இருந்து நிலவைப் பார்ப்பதுபோல், அப்போது நிலவில் இருந்து பூமியை பார்க்க முடியும். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் புதிய வழி பிறக்கும்.

    • நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.
    • நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 நிறைவு செய்தது.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

    இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மேலும், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை கடந்த ஜூலை 30ம் தேதி நிறைவு செய்தது என இஸ்ரோ தெரிவித்தது.

    நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    இந்நிலையில், நிலவை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தை நாளை சந்திரயான்- 3 நெருங்குகிறது.

    நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 செல்கிறது.

    • சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது.
    • இதையடுத்து, நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

    ஐதராபாத்:

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

    இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசியதாவது:-

    சிங்கப்பூருக்காக இஸ்ரோ மேற்கொள்ளும் பிரத்யேக ஏவுதல் இதுவாகும். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது சிங்கப்பூர் நாட்டினருக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மீதான நம்பகத் தன்மையைக் காட்டுகிறது.

    எங்களுக்கு விண்வெளியில் சரியான சுற்றுப்பாதை சாதனையாக உள்ளது.

    இந்த பயணத்தின் மூலம் விண்வெளி குப்பைகளை குறைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.

    4-வது நிலை 535 கி.மீ. முதல் 300 கி.மீ. சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும். விண்வெளிக் குப்பைகள் அபாயத்தைக் குறைக்க இஸ்ரோ பயனுள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அடுத்த ஏவுதல் பி.எஸ்.எல்.வி. சி-57 ஆதித்யா-எல்1 ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆள் இல்லாத விண்கலம் விண்ணில் செலுத்தி சோதனை இடப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திட்ட இயக்குனர் பிஜூ கூறுகையில், 'பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 530- 570 கி.மீ. உயரம் வரையான சுற்று வட்டப் பாதையில் அதிக அளவிலான செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி கழிவுகள் உள்ளன.

    எனவே 350 கி.மீ. புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது குறித்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டில் உள்ள பி.எஸ்-4 (4-வது நிலை) மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.

    • 'டிஎஸ்-சார்' செயற்கை கோள், சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இணைந்து உருவாக்கப்பட்டது.
    • ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றது. ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

     இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சார்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த 'டிஎஸ்-சார்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

    'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

    இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.  மற்ற செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    செயற்கை கோள்களை செலுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கை கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். 

    • சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே 4 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், 5வது கட்டமாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் 127609 கிமீ x 236 கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்லியமாக கணித்த பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதையை இஸ்ரோ உறுதி செய்யும்.

    அடுத்து முக்கியமான நிகழ்வாக, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் விண்கலம் உந்தி தள்ளப்படும். இந்த செயல்முறை ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவில் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். பின்னர் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். பின்னர் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும். 

    • ‘டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்- சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட், ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட 'சி-55' ராக்கெட் போன்று 'கோர்-அலோன்' என்ற நவீன பயன்பாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் எஸ்.டி. என்ஜினீயரிங் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல் மற்றும் துல்லியமாக பெறக்கூடிய படங்கள் மற்றும் 'ஜியோஸ்பேஷியல்' என்ற தொழில்நுட்ப துறைக்கு இதைப் பயன்படுத்த முடியும்.

    'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் ஆனது 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் வழங்க முடியும். துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும்.

    23 கிலோ எடை கொண்ட 'விலேக்ஸ்- ஏஎம்' என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், 'ஆர்கேட்' என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், 'ஸ்கூப்-2' என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் 6 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இஸ்ரோவின் அனைத்து முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் பைபர் கேபிள்கள் வழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கேபிள்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்கிறது.

    எனவே வரும் 26-ந்தேதி வரை சென்னை, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட இஸ்ரோவுக்கான இணைப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். கேபிள் செல்லும் நெடுஞ்சாலைகளில், சாலை பராமரிப்பு பணி உட்பட எந்தப்பணிக்கும் பள்ளம் தோண்டுதல் தொடர்பான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ராக்கெட் ஏவுவதற்கு எந்த தடையும் இல்லாத தகவல் தொடர்பு சேவையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு இஸ்ரோ கடிதம் அனுப்பியுள்ளது.

    • 4-வது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே மூன்று கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில், நான்காவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது.

    நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 25-ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு 5 முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே இரண்டு கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது. மூன்றாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 20ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இதன் முதல் கட்டமாக 15ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 173 கி.மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீட்டர் தொலைம் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வந்தது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இரண்டாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்படுகிறது. நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின்  விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு  நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், அதன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
    • மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. புவியின் சுற்றுப்பாதையில் நுழைந்து சுற்றி வரும் விண்கலத்தின் செயல்பாடு இயல்பாக உள்ளது. இந்த நீள்பட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அந்த வகையில் சுற்றுப்பாதையை உயர்த்தும் முதல் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. விண்கலம் இப்போது பூமிக்கு நெருக்கமாக 173 கிமீ, அதிகபட்ச தொலைவாக 41,762 கி.மீ. என்ற சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.

    கடந்த 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. வீடியோ எடுத்து வெளியிட்டன. அன்றைய தினம் முழுவதும் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வெளியாகின.

    அவ்வகையில், சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் (எல்விஎம்-3) சீறிப்பாய்ந்து சென்ற காட்சி விமானத்தில் இருந்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்ற விமானத்தின் ஜன்னல் வழியாக ஒரு பயணி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது அதில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர் (ஓய்வு) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பிவி வெங்கடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவை எடுத்த பயணியின் புகைப்படத் திறமையை சிலர் வியந்து பாராட்டி உள்ளனர்.

    ×