என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174124"
- மதுரை கடை வீதிகளில் செல்போன்-லேப்டாப் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கீழ வைத்திய நாதபுரத்தை சேர்ந்தவர் முத்து வழிவிட்டான். இவர் கே.வி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் செல்போன் மாயமானது. இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய தத்தனேரி முருகன் மகன் கணேசன் (20), சரவணன் (19) ஆகியோரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்த சுப்புக்காளை மகன் காளிதாஸ் (24). இவர் மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிர மணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மாடக்குளம் மெயின் ரோடு சித்தன் என்ற வினோத்குமார் (34) என்பவரை கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த சேகர் மனைவி வள்ளி (24). இவரது வீட்டிலும் 2 செல்போன்கள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக தி.மு.க. மீதும், தமிழக அரசு மீதும் தேவையற்ற பரப்புரையை செய்துவருகிறார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஆதீன மடம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான மடமாகும். இந்த மடத்திற்கு என தனி சம்பிரதாயங்களும் சடங்குகளும் உண்டு.
மறைந்த 292 -வது ஆதீனம் அருணகிரிநாதர் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் எண்ணற்ற தொண்டுகளை செய்துள்ளார். ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமும்,திறமையும் நிறைந்தவர்.
அவர் காட்டிய அன்பால் தமிழர்கள் அனைவர் மனதிலும் அருணகிரிநாதர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.
தற்போது புதிய ஆதீனமாக பதவியேற்றுள்ள மதுரை ஆதீனம் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக தி.மு.க. மீதும்,தமிழக அரசு மீதும் தேவையற்ற பரப்புரையை செய்துவருகிறார். கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்கிறார். கோயில் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார்.
ஏற்கனவே கோயில்க ளில் பல்வேறு முறை கேடுகள் நடத்தப்பட்ட காரணத்தால்தான் அறநிலை துறை தொடங்கப்பட்டது மதுரை ஆதீனத்துக்கு சொத்துக்கள் வந்தது எப்படி?. அவர் நிர்வகித்துவரும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் பெறப்படும் வாடகை களுக்கு உரிய முறையில் ரசீது வழங்கப்படுகிறதா? என்பதை எல்லாம் அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அரசியல் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யட்டும் அதற்கு அவர் இன்னும் சில தியாகங்களை செய்தாக வேண்டும்.
மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக இருந்துகொண்டு ஆதீன மடத்தின் மாண்புகளை சீர்குலைத்து வருகிறார்.
சங்கரமடத்திற்கு பாடம் புகட்டியது கடந்த கால திராவிட அரசு எனவே ஆதீன மடத்திற்குள் நடக்கும் அத்துமீறல்களை கண்டு அரசு வேடிக்கை பார்க்க கூடாது. எனவே மதுரை ஆதீனம் தொடந்து மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை விதைத்தால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் பிரிவினைவாத கருத்துக்களை தெரிவிப்ப தை அவர் நிறுத்திவிட்டு மடத்தின் மாண்புகளை காக்கும் வகையில் செயல்படுவது அவருக்கு நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
- மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.
கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.
இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 996 அரசு பள்ளிகள், 493 அரசு உதவி ெபறும் பள்ளிகள், 253 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 1,742பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.
மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கப்பட்டது. பல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை வரவேற்க தோரணங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- மதுரையில் 3,415 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம் நடந்தது.
- 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
மதுரை
சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.
வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 3415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 415 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசியை 86.5 சதவீதம் பேரும், 2-வது தவணையை 67 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றார்.
- மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
- மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தெற்குமண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கான புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17-ந் தேதியாகும்.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்ப ப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்ப ந்தப்பட்ட அளவில் ஏற்க னவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது.
தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப டமாட்டாது. குறைகளை "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்" ஜே.பிரதீப்குமார் உதவி இயக்குநர், அஞ்சல்துறைத்தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
pg.madurai@indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
- மதுரை அருகே உள்ள கோவில் திருவிழாவில் அலங்கார வளைவு சரிந்து விழுந்தது.
- மின்கம்பி அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.
மதுரை
மதுரை எம்.கே.புரம் தண்டு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக நேற்று அங்கு அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது எம்.கே.புரம் தண்டுமாரியம்மன் கோவில் அலங்கார வளைவு திடீரென சரிந்து மின் கம்பம் மேல் விழுந்தது. இதனால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து கோவில் அலங்கார வளைவை அப்புறப்படுத்தி மின் இணைப்பை மீண்டும் வழங்க ஏற்பாடு செய்தனர். தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் விபத்து நடந்த இடத்தில் அதிர்ஷ்டவசமாக யாருமில்லை. இதனால் அங்கு உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- மதுரையில் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் மோதல் ஏற்பட்டது.
- 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை
மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவில் கமிட்டி சார்பில் சுப்பிரமணி என்பவர் நாடகம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அழகு ராஜா (வயது 25) என்பவர் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அழகு ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அழகுராஜா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் (53), அவரது மகன் சேதுராஜா, செல்வம் (38), அவரது சகோதரர் கார்த்திக், அழகு மனைவி பிச்சம்மாள் (59) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் கூத்தியார்குண்டு முத்துராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணபதி (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர கூத்தியார்குண்டு காளியம்மன் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக கண்ணதாசன் (32), அவரது சகோதரர் அழகப்பன் (வயது 37) மற்றும் கண்ண தாசன் (32) அவரது சகோதரர் அழகப்பன் (37) மற்றும் ராமமூர்த்தி (42), பிரபு (35) ஆகிய 4 பேரிடம் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலூர் அருகே உள்ள திருமறைநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
- பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் சூறை வீசப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 2-ந்தேதியன்று வைகாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலூருக்கு திருமறைநாதர் எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா கடந்த 7-ந் தேதி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருமறைநாதர், வேதநாயகி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். கிராம பெரியவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மேலூர், திருவாதவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் 4 மாடவீதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. அதனை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் சூறை வீசப்பட்டது.
- தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
மதுரை
ரெயில்வே தேர்வு வாரியம் பல் பணியிட ங்களுக்கான 2-ம் கட்ட கணினி வழி தேர்வை வருகிற 16 ,17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருநெல்வேலி-பெங்களூரு சிறப்பு ரெயில் (06046) திருநெல்வேலியில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரூ சென்றடையும்.
மறு மார்க்கத்தில் பெங்களூரு- திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06045) பெங்களூருவில் இருந்து வருகிற 17-ந் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தூத்துக்குடி - கர்னூல் டவுன் சிறப்பு ரெயில் (06047) தூத்துக்குடியில் இருந்து வருகிற 13-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னூல் டவுன் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கர்னூல் டவுன் - தூத்துக்குடி சிறப்புரெயில் (06048 ) கர்னூல் டவுனில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, எரக்குண்ட்லா, தாடி பத்திரி, துரோணாச்சலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கொல்லம் - திருச்சி சிறப்பு ரெயில் (06056) கொல்லத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருச்சி -கொல்லம் ரெயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரெயில் (06055) திருச்சியில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு கொல்லம் போய் சேரும்.
இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், நாகர்கோ வில் டவுன் , திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் தெரி வித்துள்ளது.
- மதுரை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கள்ளழர் வேடமணிந்த சுந்தராஜப்பெருமாள் தேனூர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூரில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தேனூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்றில் மண்டூக முனிவருக்கு சாபமோட்சம் கொடுக்க அழகர் மலையில் இருந்து சுந்தராஜப்பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்து வந்த நிலையில் சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமலைநாயக்கர் மன்ன ரால் இந்த நிகழ்வு மதுரைக்கு மாற்றிய மைக்கப்பட்டது.
பின்னர் 2008ம் ஆண்டு முதல் தேனூர் சுந்தராஜப்பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலரும் தர்மகர்த்தா வுமான நெடுஞ்செழிய பாண்டியனின் முயற்சியால் கள்ளழர் வேடமணிந்த சுந்தராஜப்பெருமாள் தேனூர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்து வந்த நிலையில் கடந்தாண்டு இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்தன.திருப்பணிகள் நிறை வடைந்த பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகோஷ்டியூர் லட்சுமிநரசிம்மர் பட்டர் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
பின்னர் விநாயகர் பூஜை, வாஸ்து பூர்ணாஹூதி உள்ளிட்ட 4 கால பூஜைகள் நிறைவடைந்து.
நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் விநாயகருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.
பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன், ராமகிருஷ்ணா தபோவன கவுரவ தலைவர் நியமனாந்தா மஹராஜ், சங்கரசீத்தாராமன் வழக்க றிஞர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமன், கோவில் அறங்காவலர் கவுதம்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கந்துவட்டி புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கந்துவட்டி குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கந்து வட்டி வழக்குகளை கையாளவும் காவல்துறை இயக்குநர் சைேலந்திரபாபு அறிவுரையின்படி ஆபரேசன் கந்துவட்டி தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003 -ன் அடிப்படையில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் "ஆபரேசன் கந்துவட்டி" என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர்கள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்களிலோ மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப்பட்டு உடனடி யாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபரேசன் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230904,04567-230759, ஹலோ போலீஸ் 83000 31100,மாவட்ட தனிப்பரிவு 04567 290113 மற்றும் 94981 01615 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ராமநாத புரம் 94981 01616 என்ற எண்ணிலும், பரமக்குடிக்கு 94981 01617,கமுதிக்கு 94981 01618, ராமேசுவரத்திற்கு 94981 01619,கீழக்கரைக்கு 94981 01620, திருவாடானைக்கு 94981 01621, முதுகுளத்தூருக்கு 04567 290208 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் குழந்தைகளுடன் பெண்கள் மாயமானார்கள்.
- கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் முல்லை வீதியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவரது மனைவி காயத்திரி (வயது 30). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2-ம் வகுப்பு படிக்கும் யோகிதா ஸ்ரீ என்ற 7 வயது மகள் இருக்கிறாள்.
காயத்திரி பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது தாய் வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தங்கப்பாண்டி மனைவி அபிநயா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் அழைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காயத்திரியையும், அவரது மகள் யோகிதா ஸ்ரீயையும் தங்கபாண்டி அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் எங்கே சென்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து காயத்திரியின் தாயார் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு புட்டுத்தோப்பு மந்தையைச் சேர்ந்தவர் ஜெயராமன். ஞாயிற்றுக்கிழமை சந்தையில் லோடுமேனாக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு அரவிந்த் (5) என்ற மகனும், ஹன்சிகா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.
ஜெயராமன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி காலை ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. 3 பேரும் எங்கே சென்றனர்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து ராஜேஸ்வரி யின் தாயார் ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்